என் மலர்

  சினிமா

  அரவிந்த்சாமியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  X

  அரவிந்த்சாமியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரவிந்த்சாமி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு தயாரகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ArvindSwami
  `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கு பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் அடுத்ததாக `சதுரங்க வேட்டை-2', `நரகாசூரன்' மற்றும் `செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கிறது. 

  அரவிந்த் சாமி தற்போது செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி' படத்திலும், மாமங்கம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு இமயவர்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அவரது அடுத்த படத்தை `என்னமோ நடக்குது', `அச்சமின்றி' போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கவிருக்கிறார். செப்டம்பர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

  படத்தில் பங்குபெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #ArvindSwami
  Next Story
  ×