என் மலர்

  சினிமா

  மரகதக்காடு
  X

  மரகதக்காடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. இதில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குனர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ளனர்.
  ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. இதில் அஜய், ராஞ்சனா,ஜெயஸ்ரீ மலையாள இயக்குனர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு- நட்சத்திர பிரகாஷ், இசை- ஜெய் பிரகாஷ்,எடிட்டிங்-சாபு ஜோசப்,கலை- மார்ட்டின் டைட்டஸ், நடனம்-சாய் மதி,ஸ்டண்ட்-மைக்கேல், இயக்கம்-மங்களேஷ்வரன்.

  “காடுகள் அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. இது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

  படம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

  நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் செல்கிறது. காதல் அவனை லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது.

  காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை” என்றார்.
  Next Story
  ×