search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயசுதா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.

    திருப்பதி:

    தமிழ் திரையுலகில் 1970-ம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'நான் அவனில்லை', 'அபூர்வ ராகங்கள்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் அவருக்கு தாயாக நடித்திருந்தார்.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதா பாஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் மற்றும் தெலுங்கானா தலைவர் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். இனிவரும் காலங்களில் சினிமாவை விட அரசியலுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன் என்றார்.

    • 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
    • நடிகை ஜெயசுதாவிற்கு தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

    திருப்பதி:

    நடிகை ஜெயசுதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது நடிகை ஜெயசுதா காங்கிரஸில் இணைந்தார்.

    இதையடுத்து செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஜெயசுதா வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    ஓய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

    பின்னர் 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    நடிகை ஜெயசுதாவிற்கு தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தில் இருந்தார்.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதாவை பா.ஜ.க. கட்சியின் இணைப்பு குழு தலைவரும், ஈட்ல ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைய அழைப்பு விடுத்தார்.

    ஐதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் நடிகை ஜெயசுதா அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணையவில்லை.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதா நேற்று தெலுங்கானா பா.ஜ.க மாநில தலைவர் கிஷன் ரெட்டியை சந்தித்தார்.

    விரைவில் அவர் பா.ஜ.க.வில் இணைகிறார். இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 70 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.
    • இவர் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார்.

    1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 'வாரிசு' திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஜெயசுதா

    இதையடுத்து 'வாரிசு' பட விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் ஜெயசுதா வந்திருந்தார். இதனால், தனது 64-வது வயதில் நடிகை ஜெயசுதா ரகசியமாக 3-வது திருமணம் செய்திருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் , தன்னுடன் வருபவர் தனது காதலன் இல்லை என்றும் இவர் என் வாழ்க்கைக் கதையை படமாக்கவுள்ளதால் எனது முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்ள சினிமா விழாக்களுக்கு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

    • 70 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.
    • இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தென்னிந்திய சினிமாவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தற்போது கவலையை தெரிவித்துள்ளார்.


    ஜெயசுதா

    இது தொடர்பாக ஜெயசுதா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் பல தசாப்தங்களாக தொழில்துறையில் பணியாற்றிய நடிகர்களுக்கு அவர்களின் பணிக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.


    ஜெயசுதா

    கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் எனக்கு கவலையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்கள் நடிப்பதற்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கு, நாங்கள் பல படங்களில் பணியாற்றியும் இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை சில சமயங்களில், தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை என்று நான் வருத்தப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

    ×