என் மலர்
நீங்கள் தேடியது "சர்வம் தாளமயம்"
நானும் அவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம் என்று 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அபர்ணா முரளி கூறியுள்ளார். #AparnaMurali
8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அபர்ணா முரளி தற்போது ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தை பெரிதாக எதிர்பார்த்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பின் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கி உள்ள இந்தப் படம் டிசம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
அபர்ணா முரளி அளித்துள்ள பேட்டியில், “வழக்கமான கதாநாயகிக்கான பாத்திரங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கவிரும்புகிறேன். ரசிகர்கள் நான் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் துணிச்சலுடன் செயல்படும் கதாபாத்திரமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.
நான் காதல் படங்களில் நடித்ததில்லை. அது மிகவும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் பயோபிக் படங்களில் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக வெளியே தெரியாமல் போன புகழ்பெற்ற மனிதர்களின் கதைகளில் நடிக்க ஆசை.

சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கீர்த்தி சுரேஷ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருந்தார். சர்வம்தாள மயம் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் நானும் ஜி.வியும் நண்பர்களாக மாறிவிட்டோம். ராஜிவ் மேனன் அவரது மனைவி லதா, மகள் சரஸ்வதி ஆகியோர் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருப்பதால் படக்குழு எனக்கு ஒரு குடும்பம் போல் இருந்தது” என்று கூறியுள்ளார்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாளமயம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThalaMayam
'மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 28ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
#SarvamThaalaMayam#STM to be released on 28th December, 2018. See you at the movies!@arrahman@gvprakash@Aparnabala2@DhivyaDharshini@madhankarky@Arunrajakamaraj#MindscreenCinemas#JioStudiospic.twitter.com/EK9kHSSxEZ
— Rajiv Menon (@DirRajivMenon) November 21, 2018
ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன், பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். #SarvamThalaMayam #GVPrakashKumar






