search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருஷி"

    விஜய்யின் ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் ராஜன் தேஜேஸ்வர் - தருஷி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய ‘செயல்’ படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது. #Seyal
    ரவி அப்புலு இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் `செயல்'. ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் தாருஷி நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் காமெடி கலந்த அதிரடி படமாக உருவாகி இருக்கிறது. 



    வடசென்னை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபல ரவுடியை அடிக்கும் நாயகன், நாயகனை பழிவாங்க துடிக்கும் ரவுடி என அடிதடி, காமெடியுடன், காதலையும் சேர்த்து வழங்கியிருக்கும் இந்த படம் வெளியாகி 3 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    அந்த போஸ்டரில் `நல்ல படம்... ஆனா, பாக்கதான் ஆளில்ல..' என்று படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். #Seyal

    விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் ராஜன் தேஜேஸ்வர் - தருஷி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செயல்’ படத்தின் முன்னோட்டம். #Seyal
    சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘செயல்’.

    இதில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் தருஷி நடிக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக்சந்திரா அறிமுகமாகிறார்.

    ஒளிப்பதிவு - வி.இளைய ராஜா, இசை - சித்தார்த் விபின், எடிட்டிங் - ஆர்.நிர்மல், ஸ்டண்ட் - கனல் கண்ணன், நடனம் - பாபா பாஸ்கர், ஜானி, கலை - ஜான் பிரிட்டோ, தயாரிப்பு - சி ஆர்.ராஜன்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...



    “ வட சென்னையில் தங்க சாலை மார்கெட்டை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கும் ரவுடியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர்பாராத விதமாக அடித்து விடுகிறான். எனவே, ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி அடிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் தனது கை ஓங்கும் என்று ரவுடி நினைக்கிறான்.

    இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா? மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

    படம் மே 18-ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. #Seyal

    ×