என் மலர்
சினிமா

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. இதில் விஜய்சேதுபதியுடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு, ஸ்ரீசர வணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத் தொகுப்பை கவனித்து இருக்கிறார்.
இயக்கம்- ஆறுமுககுமார். படம் பற்றி அவர் கூறுகிறார்...
“இது விஜய்சேதுபதிக்கு பெயர் சொல்லும் வித்தியாசமான படம். அட்வெஞ்சர் காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில், விஜய்சேதுபதி ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இனத்தலைவராக நடித்திருக்கிறார். 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்ல விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை நான் ரசித்தேன். இதில் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. இன்னொரு நாயகனாக கவுதம் கார்த்திக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அனைவரும் ரசித்து மகிழும் படமாக உருவாகி இருக்கிறது”.






