என் மலர்tooltip icon

    சினிமா

    நீயா 2
    X

    நீயா 2

    எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலட்சுமி சரத்குமார், ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நடிப்பில் உருவாகி வரும் ‘நீயா-2’ படத்தின் முன்னோட்டம்.
    ஜம்போ சினிமாஸ் சார் பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கும் படம் ‘நீயா-2’.

    கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா-2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. படத்தின் நாயகனாக ஜெய். இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - ஷபிர், ஒளிப்பதிவு - இராஜவேல் மோகன், படத்தொகுப்பு - சௌமி கிருஷ்ணன், கலை - ஐயப்பன், ஸ்டண்ட் - ஸ்டண்ட் ஜிஎன், 
    நடனம் - கலா, விஜி, பாடல்கள் - கபிலன், பவன் மித்ரா, மோகன்ராஜ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - ஆக்சல் மீடியா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.சுரேஷ். இவர் “எத்தன்” படத்தை இயக்கியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்....



    இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமையும். அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர்படமாக ரூ.10 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது” என்றார்.

    Next Story
    ×