என் மலர்

  சினிமா

  இரவுக்கு ஆயிரம் கண்கள்
  X

  இரவுக்கு ஆயிரம் கண்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி நாயகனாக நடித்துள்ள இதில் மகிமா நம்பியார், அஜ்மல் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
  ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி நாயகனாக நடித்துள்ள இதில் மகிமா நம்பியார், அஜ்மல் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

  இந்த படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். படம் பற்றி தயாரிப்பாளர் டில்லி பாபு கூறும் போது, “இந்த படத்தின் கதை, திரைக்கதையை இயக்குனர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். இது ஒரு திரில்லர் படம். இந்த படத்தில் அருள்நிதி நடிப்பு நிச்சயம் பேசப்படும்” என்றார்.

  இயக்குனர் மாறனிடம் படம் பற்றி கேட்ட போது, “பகலை விட இரவுக்குத்தான் ஆயிரம் கண்கள் இருக்கிறது. நடைபெறும் பல மர்மங்களுக்கும் இரவுக்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் தான் இந்த படத்துக்கு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்த கதை நகர்கிறது. ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் சராசரி மனிதன் அதில் இருந்து எப்படி வெளியே வருகிறான் என்பது தான் ஒருவரி கதை. இதில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது” என்று கூறினார்.
  Next Story
  ×