என் மலர்

  சினிமா

  மெர்குரி
  X

  மெர்குரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `மெர்குரி' படத்தின் முன்னோட்டம். #Mercury
  ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி'.

  பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரபுதேவா வில்லனாக நடித்திருக்கிறார். வசனங்களே இல்லாமல் பின்னணி இசையின் மூலம் உருவாகி இருக்கும் இந்த படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது.  

  இசை - சந்தோஷ் நாராயணன், ஒலி வடிவமைப்பு - குணால் ராஜன், ஒளிப்பதிவு - திரு, கலை - சத்தீஷ் குமார், ஆடை வடிவமைப்பாளர் - ப்ரவீன் ராஜா, எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், தயாரிப்பு - ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், பென் ஸ்டூடியோஸ், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், கதை, இயக்கம் - கார்த்திக் சுப்புராஜ்.  சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படஅதிபர்கள் போராட்டம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. எனினும் வெளிநாடுகளில் குறித்த தேதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

  இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Mercury #PrabhuDeva
  Next Story
  ×