search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abhinav"

    டி.என்.பி.எல். போட்டி ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என்று இந்திய அணி வீரர்கள் அபினவ், அபரஜித் கூறியுள்ளனர். #TNPL #TNPL2018
    கோவை:

    டி.என்.பி.எல். கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அபினவ் முகுந்த், அபரஜித் ஆகியோர் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின்(டி.என்.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் 11-ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சென்னையில் இறுதி போட்டியுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளிலும் துடிப்பு மிக்க இளம் வீரர்கள் களம் இறங்குகிறார்கள். கிராமப்புற மற்றும் மாவட்ட அளவிலான வீரர்கள் இந்த போட்டி மூலம் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வு செய்யவும் வாய்ப்பு உள்ளது. படிப்படியாக உயர்ந்து இந்திய அணியிலும் இடம்பெற முடியும்.

    இந்த போட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்கும். கோவையை சேர்ந்த 3 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர அகில இந்திய அணியில் இடம்பிடித்த எங்களைப் போன்றவர்களும் விளையாடுகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆர்.என்.பாபா கூறியதாவது:-

    டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றும் அணிக்கு முதல் பரிசாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது அணிக்கு 60 லட்சம் ரூபாயும், 3-ம் மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், மீதம் உள்ள 4 அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற டி.என்.பி.எல். போட்டிகளில் பங்கேற்ற பல வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த தொடரின் வளர்ச்சியை காண்பிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL #TNPL2018 #tnplseason3
    ×