என் மலர்tooltip icon

    சினிமா

    எழுமின்
    X

    எழுமின்

    வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
    வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கார்த்திக் ராம் படத்தொகுப்பு செய்கிறார். மிராக்கிள் மைக்கேல்ராஜ் சண்டை பயிற்சி அளிக்கிறார்.

    வி.பி.விஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    படம் பற்றி கூறிய வி.பி.விஜி...

    “தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதனின் மகன் அர்ஜுனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் அகாடமியில் கராத்தே, குங்பூ, பாக்ஸிங், சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத அவர்களுக்கு விவேக்கும் தேவயானியும் உதவுகிறார்கள். இந்த சிறுவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாண்டி எப்படி சாதிக்கிறார்கள் என்பதை புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறோம். இந்த சிறுவர்கள் கடுமையான சண்டை காட்சிகளிலும் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள்” என்றார்.
    Next Story
    ×