என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன.
    • பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

    2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான விருது, அனிமல் படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரபாஸ் இயக்கத்தில், ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க இருக்கிறார்.

    • இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
    • கவிஞர் வைரமுத்து தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சர்வதேச தாய்மொழி தினம் உலகம் முழுக்க இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருத்தரும் தங்களின் தாய்மொழியை பேணி பாதுகாப்பது மற்றும் அதன் பெருமையை பரைசாற்றும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கியது.

    அதன்படி சர்வதேச தாய்மொழி தினத்தன்று தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞர்களில் ஒருவரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது வாழ்த்து மற்றும் அச்சத்தை பகிர்ந்து கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    "இன்று

    உலகத் தாய்மொழித் திருநாள்

    வாழ்த்து அச்சம் இரண்டையும்

    பகிர்ந்து கொள்கிறேன்

    தாய் என்ற அடைமொழிகொண்ட

    சொற்களெல்லாம் உயர்ந்தவை;

    உலகத் தன்மையானவை மற்றும்

    உயிரோடும் உடலோடும் கலந்தவை

    தாய்நாடு தாய்ப்பால்

    தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்

    ஆனால்,

    உலகமயம் தொழில்நுட்பம்

    என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும்

    தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன

    உலக தேசிய இனங்கள்

    விழிப்போடிருக்கவேண்டிய

    வேளை இது

    அரசு ஆசிரியர் பெற்றோர்

    மாணவர் ஊடகம் என்ற ஐம்பெரும்

    கூட்டணிகளால் மட்டுமே

    இந்தப் பன்னாட்டுப்

    படையெடுப்பைத் தடுக்கமுடியும்

    சரித்திரத்தின் பூகோளத்தின்

    ஆதிவேர் காக்க

    ஓர் இனம்

    தாய்மொழி பேணவேண்டும்

    எங்கள் தாய்மொழி

    எங்கள் அடையாளம்

    மற்றும் அதிகாரம்," என்று பதிவிட்டுள்ளார்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த நடிகைக்கான விருது ஜவான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
    • ஜவான் படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகை விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

    இதே போன்று சிறந்த நடிகர் விருது ஜவான் படத்தில் நடித்த ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆக்ஷன் மற்றும் திரில்லிங் காட்சிகளை கொண்டிருந்தது. 

     


    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    இந்த படத்தில் ஷாருக் கான், நயன்தாரா மட்டுமின்றி விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    • சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது.
    • ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?

    நடிகை திரிஷாக்கு ஆதரவு நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத விஷயத்தை பார்த்தமாதிரி எப்படி பேசலாம். ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

    திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்
    • போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது.

    கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார்.
    • கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    திரைத்துறை மற்றும் நடிகை திரிஷா தொடர்பான அதிமுக முன்னாள் நிர்வாகி A.V.ராஜூவின் பேச்சுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.

    பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் "பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மேலும் நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது
    • ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளா

    "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என த்ரிஷா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்
    • "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம்

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்.

    சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே, "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோ படத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான 'கோ' திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக இருக்கிறது.

    "கோ" திரைப்படம் கடந்த 2011-ல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதன் கதைக்களத்திற்காக மட்டுமல்லாமல், அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதிலும் இளைஞர்களின் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை அந்தப் படம் கூறியிருந்தது.

     


    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் "கோ" திரைப்படம் வருகிற மார்ச் 1, 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட உள்ளது. மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதனை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்க, படத்தை பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்வதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

    • டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர்.
    • வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரலில் வெளியாகிறது.

    ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் "படே மியன் சோட்டே மியன்." இதன் டைட்டில் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அபுதாபியின் ஜெராஷ்-இல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும் முதல் பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

    டைட்டில் டிராக் வெறும் பாடல் என்பதோடு, 100-க்கும் அதிக நடன கலைஞர்களுடன் பிரமாண்டமாக தயாராகிறது. டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ - சீசர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

     


    ரசிகர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் வகையிலான இந்த பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். சகோதரத்துவத்தை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் பாடலாக இது இருக்கும். ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன.

    இந்த படத்தை அலி அப்பாஸ் சாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

    • சில தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார் ரித்துராஜ் சிங்.
    • சில நாட்களுக்கு முன்பு கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் துணிவு. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் மஞ்சு வாரியர், பாவனி, அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். முக்கிய வில்லனாக, மலையாள நடிகர் ஜான் கொக்கன் நடித்திருந்தார். இந்த படத்தில் மக்கள் பணத்தை திருடிய பணக்கார வில்லன்களுள் ஒருவராக நடித்திருந்தவர் தான் ரித்துராஜ் சிங்.

    இப்படத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் பணக்கார வில்லன்களாக 3 பேர் நடித்திருப்பர். இதில், படத்தின் ஆரம்ப காட்சியில் கடத்தப்பட்டு, கடைசியில் உள்ளாடையுடன் உட்கார வைக்கப்படும் வில்லனும் ஒருவர். இந்த கதாப்பாத்திரத்தில் ரித்துராஜ் சிங் நடித்திருந்தார். பாலிவுட் நடிகரான இவர், இன்னும் சில தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார்.


    இந்நிலையில், நேற்று மிகவும் சோர்ந்து காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்துராஜ் சிங் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 59.

    சில நாட்களுக்கு முன்பு கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவரது நண்பர் கூறியுள்ளார்.

    இந்தியில் பிரபலமாக இருக்கும் 'அனுபமா' என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரித்துராஜ். இவரது கதாப்பாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ள செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • மதன் கார்க்கியின் மொழி நடை எண்ட்வார்ஸ் தொடருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
    • புத்தக வெளியீட்டு விழாவின்போது தமிழ் விளம்பர பாடல் வெளியிடப்பட்டது.

    சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் இந்தியா விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    "எண்ட்வார்ஸ்: வால்யூம் 2 – டார்க் கான்குவெஸ்ட்" (Endwars: Volume 2 – Dark Conquest) என்ற ஆங்கிலப் புத்தகம், "எண்ட்வார்ஸ்: தி சூசன் ஒன்" (Endwars: The Chosen One - Volume 1) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம் "இறுதிப்போர்- மண்ணவன் ஒருவன்" ஆகும். இதில் "இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்" புத்தகத்தை மதன் கார்கி மொழிமாற்றம் செய்துள்ளார்.

     


    சென்னை காமிக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் ஏராளமான காமிக் வாசகர்கள் கலந்து கொண்டனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என நிரம்பியிருந்த அந்த இடம் காமிக் புத்தக ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    சித்திரக்கதைகளின் வசீகரிக்கும் உலகத்தைக் கொண்டாடும் படைப்பாளிகள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்களின் சந்திப்பாக இது அமைந்தது. இந்த விழாவில் பங்கேற்று இந்த 2 புத்தகங்களையும் வாங்கிய வாசகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கையெழுத்திட்ட பிரதிகளை வழங்கினார். 

    ×