அனிருத் - அக்ஷய் - டைகர் ஷெராஃப் கூட்டணியில் வெளியான புது பாடல்

டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரலில் வெளியாகிறது.
அனிருத் - அக்ஷய் - டைகர் ஷெராஃப் கூட்டணியில் வெளியான புது பாடல்
Published on

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் "படே மியன் சோட்டே மியன்." இதன் டைட்டில் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அபுதாபியின் ஜெராஷ்-இல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும் முதல் பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

டைட்டில் டிராக் வெறும் பாடல் என்பதோடு, 100-க்கும் அதிக நடன கலைஞர்களுடன் பிரமாண்டமாக தயாராகிறது. டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ - சீசர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ரசிகர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் வகையிலான இந்த பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். சகோதரத்துவத்தை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் பாடலாக இது இருக்கும். ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன.

இந்த படத்தை அலி அப்பாஸ் சாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com