கே.வி. ஆனந்த்-இன் மாஸ்டர் பீஸ்.. மீண்டும் ரிலீசுக்கு தயாராகும் கோ

கோ படத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கே.வி. ஆனந்த்-இன் மாஸ்டர் பீஸ்.. மீண்டும் ரிலீசுக்கு தயாராகும் கோ
Published on

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான 'கோ' திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக இருக்கிறது.

"கோ" திரைப்படம் கடந்த 2011-ல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதன் கதைக்களத்திற்காக மட்டுமல்லாமல், அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதிலும் இளைஞர்களின் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை அந்தப் படம் கூறியிருந்தது.

இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் "கோ" திரைப்படம் வருகிற மார்ச் 1, 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட உள்ளது. மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்க, படத்தை பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்வதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com