என் மலர்
சினிமா செய்திகள்
- நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார்.
- விரைவில் இந்த படத்தின் இதர அப்டேட்கள் வெளியாகும்.
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்று இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
- நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார்.
- படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது.
இப்படத்தில் தனுஷ்,நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா,சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளனர்.
தனுஷ் இதில் சிவன் பார்வதி படத்தின் முன் நின்றிப்பது போல் போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷ் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விஷயம். என் அழகிய பிடித்தமான தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்,” என்று தலைப்பிட்டுள்ளார்.
இந்த வாரம் முழுவதும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஹாட் டாபிக்காக வலை தளங்களில் சுற்றி வந்தனர். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் கணவரை அன்பாலோ செய்துவிட்டார் என்ற தகவல் காட்டு தீ போன்று பரவியது.
அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த ஆண்டு திருமண தினத்தில் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டானர். அதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மிக நெருக்கமாக இருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாரா வைன் கிளாசில் இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளார்.
இந்த பதிவிற்கு, "வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விஷயம். என் அழகிய பிடித்தமான தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்," என்று தலைப்பிட்டுள்ளார்.
- திரைப்படங்கள் மீதான அவரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது எப்போதும் அவரின் நலனை விரும்புகிறேன்
- 1999 -ம் ஆண்டில் நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த காதல் திரில்லர் படத்தில் அஜித்துடன் நடித்தது மறக்க முடியாதது
தமிழ் சினிமா உலகில் 90-ம் ஆண்டுகளில் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் நடிகை சிம்ரன்.1997-ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் ரஜினி, கமல், விஜய்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானார்.தமிழ் படம் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி மொழி படங்களிலும் நடித்தார்.
மும்பையில் இருந்து வந்தவராக இருந்தாலும், சேலை நடிக்கும் போது அசல் தமிழ்நாட்டு பெண் போன்ற தோற்றத்தில் காணப்படுவார்.தனது இயல்பான நடிப்பால் பல விருதுகளை பெற்றார்.மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே தனதுசிறுவயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், சில ஆண்டுக்கு பின்பு குணசித்திர வேடங்களில் சினிமாவில் மீண்டும் நடித்தார்.டி.வி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 'கோட்கா' என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டலை நடத்தி வருகிறார்.இதன் மூலம் போதுமான வருமானம் அவருக்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் குறித்து 'எக்ஸ்' இணையதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை சிம்ரன் பதில் அளித்து கூறியதாவது :-அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் சிறந்த அனுபவம். திரைப்படங்கள் மீதான அவரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எப்போதும் அவரின் நலனை விரும்புகிறேன்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் 'வாலி' படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1999 -ம் ஆண்டில் நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த காதல் திரில்லர் படம் இது.அந்த படத்தில் அஜித்துடன் நடித்தது மறக்க முடியாதது ஆகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார்
- படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.
அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான ஷங்கர் என்பவர் இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் கதை தற்போது நிகழும் சமூக பிரச்சனையை பேசக்கூடியதாக இருக்கும் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். வெப்பம் குளிர் மழை படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. கதாநாயகன் பால் கேனை தூக்கிக் கொண்டு இருப்பது போலவும், மாட்டின் தலைக்கு பதில் கதாநாயகியின் தலை வைக்கப்பட்டிருக்கிறது. மாட்டின் வயிற்றில் மனித சிசு வளர்வது போன்ற காட்சிகள் போஸ்டரில் காணப்படுகிறது. இத்திரைப்படம் எதை பற்றி பேசப்போகிறது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
- இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது
- பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது.
மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். சென்னையில் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு உருவாகியது. உலகளவு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 100 கோடியை தாண்டியது பிரேமலு. மலையாள திரையுலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் பிரேமலு 5-வது இடத்தில் உள்ளது. இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. மலையாளத்தில் வரவேற்பை தொடர்ந்து பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் தமிழில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியானது. பிரகாஷ் எழுத்தில் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கினார்.ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்தார் . நடிகர் சரத்குமாருக்கு இந்த படம் மிக பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதேவேளை, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மிகவும் நேர்த்தியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருப்பவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே,சபா நாயகன் , ப்ளூ ஸ்டார் ஆகிய சிறந்த படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகனாக வளர்ந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் அதிகாரப் பூர்வமான தகவல் படகுழுவினரிடம் இருந்து வெளியிடப்படும்.


- அஜித் முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது.
- சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.
சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதனையடுத்து நடிகர் அஜித் இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
- தாய்மொழி தெலுங்கு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாகத் பேசத் தெரியும்.
- நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 17,695 பாடல்களை பாடியுள்ளார்.
சிங்களப் படங்களுக்கும் பாடியுள்ளார். அவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாகத் பேசத் தெரியும்.
திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும் ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசீர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்
- இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்.ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் கதை ஒரு சமூக பிரச்சனையை பேசக் கூடிய படமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
- இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
- ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார்.
மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்க, இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. ரிலீஸ் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
- இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார்
மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.
விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.
இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.
இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு "லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்" என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவிலேயே படகுழுவினரால் அறிவிக்கப்படும் என நம்பபடுகிறது. தற்போது வடிவேலு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






