என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது
    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் "எனக்கு பிடிக்கவே இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அண்மையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூலை இப்படம் தாண்டியுள்ளது. தமிழ்நாடு வசூலில் மட்டும் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டினர்.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை.. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது

    மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    மேலும், கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தற்போது ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலையாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் - கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!" என அவர் பதிவிட்டுள்ளார்.

    • நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்
    • இணையத்தில் ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்

    நயன்தாரா - விக்னேஷ்சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர்.

    நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள், மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.சமீபத்தில் இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக ஒரு போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்தார்.

    இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.வெளி நாட்டில்நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக ஒருவரைஒருவர் அன்புடன் பார்ப்பது, நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதில் நயன்தாராஸ்கின்-பிட் பேண்ட்- கருப்பு நிற கோட் அணிந்து உள்ளார். விக்னேஷ் சாதாரண சிவப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து உள்ளார். இந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானதன் மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா பெரிய முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி அழகாக மகிழ்ச்சியாக உள்ள படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்.தற்போது நயன்தாராவும், விக்னஷும் சவுதி அரேபியாவில் விடுமுறைக்கு சென்று உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன்
    • விஷால் பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது



    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக இதில் இணைந்து உள்ளார். தற்போது இது விஷாலுக்கு 34- வது படம் ஆகும்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் முதல் 'சிங்கிள்' பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்தபாடல் அமைந்து உள்ளது.

    இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.கவிஞர் விவேகா இந்த பாடலை எழுதி உள்ளார்.'கார்த்தி கே.சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம், நடித்து உள்ளனர்.இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஹரி பேசியதாவது:-

    இந்த படத்தை பற்றி நான் சொல்வது என்றால் சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். ஏற்கனவே விஷாலுடன் 2 படம் பண்ணி இருந்தாலும் இது ஒரு சரியான படம். 'சாமி', 'சிங்கம்' படம் போன்று ஆக்சன் பட எனர்ஜி இந்த கதைக்குள் இருக்கிறது. ரொம்பவே நல்லா அமைந்து இருக்கிறது.

    விஷால் ரொம்பவே வேற லெவலில் ஆக்சன் பண்ணி இருக்கிறார். பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது. எனக்காக 20 நாட்களில் தாமிரபரணி விஷாலாக வந்து நின்றார். எல்லாமே ஆரம்பிச்ச மாதிரி இருந்தது.படத்தை முடித்து விட்டோம். இன்றைக்கு 'பர்ஸ்ட் சிங்கிள்' உங்கள் முன் வெளியிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றது
    • உலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது

    மலையாள மொழியில் தயாராகி வெளியான படம் 'பிரேமலு'.இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். விஷ்ணுவிஜய் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் நடித்து உள்ளனர்.

    இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. உலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றது.

    இந்த படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ்,ஹாட் ஸ்டார், வாங்கியது. பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த படம் தெலுங்கு மொழியில் 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் தமிழ் மொழியிலும் இப்படத்தை 'டப்பிங்' செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது வருகிற 15- ந்தேதி அன்று தமிழில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் இணையதளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்

    • தற்போது ’கிரிஷ் லைவ் இன் துபாய்’ என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.
    • நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

    பின்னணி பாடகரான கிரிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். நடிகை சங்கீதாவின் கணவன் ஆவார்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களான வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வேட்டைகாரன், வாரணம் ஆயிரம், என்றென்றும் புன்னகை, அயன் போன்ற படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார்.

    தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார்.

    • ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார்.
    • தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர்.

    சமீபத்தில் பிறந்தாள் கொண்டாடிய மாரி செல்வராஜை வாழ்த்தி பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலையத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

    தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர். தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். கைதி 2, சர்தார்2 போன்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

    கார்த்தியை வைத்து முன்னணி இயக்குநர்கள் படம் இயக்க இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து அடுத்தாக துருவ் விக்ரம் வைத்து பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்
    • அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள். பின்னர் சிகிச்சை முடிந்து இன்று காலை நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய தினமே அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது. தமிழ்நாடு வசூலில் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி பிரபலங்களால் பாராட்டு பெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து துனுஷை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவல்கள் வெளியானது.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

    மேலும்," மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலை தளங்களில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பலர் ஜெயமோகன் கூறியது சரிதான் என்றும், பலர் அவர் கூறுயதை மறுத்தும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.




     




     


    • மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
    • இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

    ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

    இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்வதில் ஆற்றல் பெற்றவர். சிங்கம், சாமி, யானை போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமூத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "டோண்ட் வொரி டோண்ட் வொரி டா மச்சி" எனும் பாடல் வெளியாக உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    • 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

    • பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை
    • பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்

    அண்மையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு நடனமாடினார்.

    இந்நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்தை நடனமாட அழைத்ததாகவும், அதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியும் நடனமாட அவர் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், அம்பானி இல்ல திருமண விழாவில் பிரபலங்கள் பங்கேற்று நடனமாடியதை குறிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

    அதில், "நான் எவ்வளவோ பொருளாதார சிக்கல்களில் மாட்டியுள்ளேன். ஆனாலும் பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். எத்தனையோ முறை எனக்கு ஆசைகாட்டப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளிலும் விருது நிகழ்ச்சிகளிலும் நடனமாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளேன். பணம் வேண்டாம் என்று சொல்வதற்கு குணம் தேவை. பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    கங்கனாவின் இந்த பதிவு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் கங்கனா இந்த மாதிரி சர்ச்சையாக பேசுவது ஒன்றும் புதிது இல்லை.

    இதற்கு முன்பும் கூட, "ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ஊரை கூட்டி பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்களது வீட்டுக்குள் வெவ்வேறு மாடியில்தான் வாழ்கிறார்கள். சேர்ந்து வாழ்வது போல் வெளியுலகுக்கு மட்டும் காண்பித்துக்கொள்கிறார்கள். அண்மையில் லண்டன் சென்ற ஆலியா பட் தனது மகளை தனியாக விட்டுவிட்டு சென்றார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும்" என கங்கனா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடு.
    • விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியவில்லை.

    இதற்காக, நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்கினர்.

    இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

    நடிகர் சங்க கட்டட பணியை தொடர்வதற்காக வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை கமல்ஹாசன் வழங்கினார்.

    நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.

    ×