என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சார பணிகளில் ஈடுபடப் போவதாக கமல் அறிவித்தார்
    • இந்நிலையில் கமல் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்

    நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'.இந்த படம் ஒரு 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் சைபீரியா செல்ல உள்ளனர். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த நடிகர் கமல்,இந்த மாதம் சைபீரியா செல்ல இருந்தார்.

    இந்நிலையில் தற்போது கமல் வெளிநாட்டு படப்பிடிப்பு 'ஷெட்யூல்' திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடிகர் கமல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அரசியல் பணிகளில் 'பிஸி' ஆகிவிட்டார்.

    இதனால் படப்பிடிப்புக்காக அதிக நாட்கள் அவரால் ஒதுக்க முடிய வில்லை. இதன் காரணமாக கமல் நடிக்கும் சைபீரியா படப்பிடிப்பு காட்சிகள் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சார பணிகளில் ஈடுபடப் போவதாக கமல் அறிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சைபீரியாவில் 'தக்லைப்' படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வந்தன.இந்நிலையில் கமல் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

    • சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்
    • நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

    நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முறுகன் அந்த தொகையை பெற்றுக் கொண்டனர்.

    தற்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நடிகர் சங்க வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    • நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர்
    • இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த ’பிங்க்’படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர். வினோத் 2014 ல் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டது. 2014-ல் வெளியான திரைப்படங்களில் 'சதுரங்க வேட்டை' ஒரு புது விதமான கதை பாணியுடன் வெளிவந்தது. சூதாட்டம், மக்களை எப்படி நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பின் 2017-ல் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று'படத்தை இயக்கினார். கார்த்தியின் திரையுலக பயணத்தில் பேர் சொல்லும் படமாக இது அமைந்தது. கார்த்தி ஒரு போலீஸ் அதிகாரியாக திறம்பட நடித்திருப்பார்.

    இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த 'பிங்க்'படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    2022-ஆம் ஆண்டு அஜித்-தை வைத்து வலிமை படத்தை இயக்கினார். 2023-ல் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் போன்ற பலர் நடித்திருந்தனர். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்தார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் அள்ளியது. அஜித் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வினோத் அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் பங்குபெற்ற நேர்காணலில் "என்னோட முதல் படத்த தவிர நான் யாரிடமும் முழு கதையை சொன்னது கிடையாது, விஜய் சாருக்கு கதை சொல்லும்போது மட்டும்தான் முழு கதைய படிச்சு காட்டினேன்"என்று அவர் கூறியுள்ளார். இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த ஆண்டு ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது. அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

    கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார்.

    இந்த படத்தின் டிரைலரை இன்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 22-ம் தேதி வெளியாகும் ரெபல் படத்தின் படக்குழு மற்றும் அன்புக்குரிய ஜி.வி. பிரகாஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் இப்படத்தின் பாடல்களும் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    • சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
    • இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது

    ஆஸ்கார் விருதுகள் -2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.

    பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் நாட்டு.. நாட்டு... பாடல் ஒளிபரப்பாகி ஆஸ்கார் விழாவை சிறப்பித்தது. ஏற்கனவே 2023- ம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.

    இதன் மூலம் இந்திய பாடலுக்கு பெருமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆண்டும் ஆஸ்கார் விழாவில் இந்த பாடல் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது.

    தற்போது இது தொடர்பான 'வீடியோ 'எக்ஸ்' இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர்
    • Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்

    கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர். இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். இத்தளத்திற்கு Cspace என்று பெயரிட்டுள்ளனர். மலையாள சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த முயற்சியை துவங்குகிறோம் என்று அப்போது பினராயி கூறினார். இது கலை மற்றும் கலாச்சார மதிப்புள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரு பாதையாக அமையும் என்றும், பிற ஓடிடி தளம் அனைத்தும் வியாபார நோக்கத்துடன பெரிய கமர்ஷியல் படங்களை மட்டும் வாங்குகின்றன., CSpace தரமான திரைப்படங்களை வீட்டிற்கு கொண்டு வரும் ஒரு ஊடகமாக முத்திரை பதிக்க உள்ளது என்றும் கூறினார்.

    Cspace ஓடிடி தளத்தில் ஏற்கனவே தியேட்டரில் வெளியான படங்களை மட்டும்தான் இடம்பெறும். அதனால் தியேட்டருக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களை அது பாதிக்காத வண்ணம் இது செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற படமும் இதில் இடம்பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 42 படங்கள் Cspace ஓடிடி தளத்தில் இடம்பெறவுள்ளது. அதில் 35 முழு நீள படங்களும், 6 ஆவணப் படங்களும்,1 குறும்படமும் இடம்பெறவுள்ளது.

    சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை இந்த ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    பே பெர் வியூ என்ற அடிப்படையில் இந்த ஓடிடி தளம் இயங்கவுள்ளது. ஃபீட்சர் (Feature)படங்களை பார்க்க ரூ.75, குறும்படங்களை பார்க்க குறைவான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் பாதி தொகை அந்த படத்தின் தயாரிப்பளருக்கு சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளனர். Cspace-ன் app-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து நாம் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

    இந்த Cspace ஓடிடி தளம் வெளியானதால் சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வணிக சமரசமின்றி எடுக்கப்படும் யதார்த்தப் படைப்புகளுக்கும் பெரும் வரமாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.



     


    • பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம்.
    • வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு.

    பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம். நடிகர் வைபவிற்கு 25 -வது படமாக இப்படம் அமைந்தது. ரணம் படத்தை ஷெரிஃப் இயக்கினார். வைபவுடன் நந்தித்தா ஸ்வேதா, தான்யா ஹோப் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரணம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தை பாராட்டி பதிவை வெளியிட்டார். வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு அவரின் சரோஜா படத்தில் வைபவை அறிமுகம் செய்தார். இந்நிலையில் படத்தின் வெற்றியை அப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

     

     

    • ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது
    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த மகளிருக்கான விருது வழங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது :-

    கடந்த 2013-ஆம் ஆண்டு கபடி போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்றேன். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதால் கபடி விளையாட்டை தொடராமல் விட்டு விட்டேன். தொலைக்காட்சியில் கூட விளையாட்டை

    பார்க்க மாட்டேன்., எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். 2019- ல் வெளிவந்த 'பிகில்' படத்தை ஒரு தியேட்டரில் பார்த்த போது ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.

    அந்த பாடல் வரிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மீண்டும் கபடி விளையாட்டுக்கு சென்று சாதிக்க வேண்டும்., எனது திறமைகளை கபடி உலகில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.

    அதனை எனது கணவர், மாமியாரிடம் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதன் மூலம் மகளிர் கபடி குழுவினருக்கு பயிற்சியளித்து வருகிறேன்.

    எனது பயிற்சி மூலம் மகளிர் கபடி குழுவுக்கு பல பரிசுகள் கிடைத்தன. இதற்கு காரணம் 'சிங்கப்பெண்ணே' பாடல் தான். அந்த பாடல் எனக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது. இந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிக்க நன்றி. இந்த தகவல் ஏ.ஆர் ரகுமானை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.





     


    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பார்த்தஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா.. நீங்கள் உயர்வடைந்து கொண்டே இருங்கள் என அவர் பதிலளித்து உள்ளார்.

    • மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பை பெற்று வருகிறது
    • இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது

    கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்'  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

    நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.

    இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதுவரை ரூ.150 கோடி வரை வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கமல் நடித்த 'குணா' படம் இங்குதான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் பெற்றவர் சூரிய கிரண்.
    • "அரசி" படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

    மௌன கீதங்கள், படிக்காதவன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய மாஸ்டர் சூரிய கிரண் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்திருக்கிறார்.

    சூரிய கிரண் தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கி உள்ளார். தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த "அரசி" படத்தை இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

    கடந்த சில நாட்களாக சூரிய கிரண், மஞ்சள் காமாலை காரணமாக ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மஞ்சள் காமாலை அதிகமானதன் காரணமாக இன்று அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் காலை 11 மணிக்கு காலமானார்.

    சூர்ய கிரணுக்கு வயது 48. அவர் மனைவியை பிரிந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    சூர்ய கிரண் குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் (நந்தி அவார்டு) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. சூரிய கிரண் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • வருகிற 15 - ந்தேதி தமிழில் இப்படம் 'டப்பிங்' செய்தும் வெளியிடப்படுகிறது
    • மலையாள மொழியில் வெளியான 5-வது சாதனை திரைப்படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது

    ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல், காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

    இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் செய்துள்ளது. பிரேமலு படத்தின் வசூல் தற்போது ரூ.100 கோடியைத் தாண்டியது. வருகிற 15 - ந்தேதி தமிழில் இப்படம் 'டப்பிங்' செய்தும் வெளியிடப்படுகிறது.

    மலையாள மொழியில் வெளியான 5-வது சாதனை திரைப்படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓப்பன்ஹெய்மர் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
    • WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    96-வது ஆஸ்கர் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

    அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிப்பதற்காக WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்தார்.


    அவர் விருதை அறிவித்த பிறகு, ஆஸ்கர் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் என்பவர் திரைக்காக வைக்கப்பட்டிருந்த துணியை எடுத்து ஜான் சீனாக்கு அணிவித்தார்.

    WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


    ஓப்பன்ஹெய்மர் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட நான்கு விருதுகளை வென்றது.

    அதேபோல் சிறந்த நடிகர் விருதையும் வென்றது. அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி (Cillian Murphy) இந்த நடிகர் விருதை பெற்றார்.

    சிறந்த இயக்குனர் விருதையும் ஓப்பன் ஹெய்மர் வென்றது. அந்த படத்தினர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார். சிறந்த படம் விருதையும் வென்றுள்ளது. மொத்தமாக ஏழு விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

    ×