என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது
    • நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது

    1996-ம் ஆண்டில் சுந்தர் சி-யின் நகைச்சுவைத் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி ஆகியவற்றில்உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுராஜ். 1997-ம் ஆண்டில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் சுந்தர் சி-க்கு தொடர்ந்து உதவியதோடு ஜானகிராமன் படத்தின் இணை இயக்குனராகவும் இருந்தார்.

    பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யை வைத்து 2006-ல் தலைநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுராஜ். 'அதன் பின் 'மருதமலை' படத்தை 2007-ல் சுராஜ் இயக்கினார். இப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். 2009-ல், தனுஷ், தமன்னா நடித்த படிக்காதவன் படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :-



     

    மருதமலை படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். அவர் ஸ்கிரிப்டை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையை வாங்கினார். இதில் நடித்திருந்தால் மருதமலையே அவரது முதல் போலீஸ் வேடமாக இருந்திருக்கும். ஆனால், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் "சச்சின்" படம் காரணமாக விஜய் இதிலிருந்து விலகினார்.

    இதற்கிடையில் நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது. அவர் அதே நேரத்தில் "கிரீடம்"படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்ததாலும், வடிவேலுக்கு அப்போது அஜித்துடன் இந்த படத்தில் நடிக்க பிடிக்காததாலும் எங்களால் இந்த படத்தை தொடர முடியவில்லை.

    பிறகு நான், சுந்தர்.சி பணியாற்றிய "கிரி"படம் மூலம் அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது. உருவானது.அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர்  கூறினார்.

    • தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன்.
    • தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார்.

    சென்னை, போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் வந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் சிவகார்த்திகேயன்.இன்று சந்தித்துப் பேசினார்.

    தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா போன்றோரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு நிகராக சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் ஈட்டி வருகிறது.

    சமீபத்தில் வெளியான அயலான் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அயலான் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அமரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலை கொடுத்து ஒடிடி-ல் வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்தார். இந்த பேன்ஸ் மீட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார். இந்நிலையில் முழு நேரமாக அரசியலில் இறங்கவுள்ளதால் இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    ஆதலால் விஜயின் இடத்தை பிடிக்கவே சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது. மேலும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கி தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அது போலவே அரசியலில் சிவகார்த்திகேயன் வருவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    • படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்லும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம், மார்ச்.13-

    நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும்.

    தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் ஷக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளது.

    கிளைமேக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த காட்சிகள் திருவனந்த புரத்தில் எடுக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் காரியவட்டத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதா னம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

    சினிமா படப்பிடிப் பிற்காக நடிகர் விஜய் முதன் முறையாக திருவனந்த புரத்துக்கு வர உள்ளார். படப்பிடிப்புக்காக திருவ னந்தபுரம் வரும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களை யும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தத்தால் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன
    • மேலும், 2026 அக்டோபர் 2-ந் தேதி பேட்மேன் -2 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

    'தி பேட்மேன்' ஆங்கில படம் 2022-ல் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக ராபர்ட் பாட்டின்சன், நடிகை

    ஜோ க்ராவிட்ஸ் சிறப்பாக நடித்ததன் மூலம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. மேலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மேட் ரீவ்ஸ் இயக்கியிருந்தார். பேட்மேன் உலகளவில் 772 மில்லியன் டாலர் வசூலித்தது. 

    'பேட்மேன்' படம் உயர் வர்க்கத்தினரை குறி வைத்து கொலை செய்யும் ஒரு கொலை கும்பலை கண்டுபிடித்து அழிக்கும் கதை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்மேன் -2 படத்தில் ராபர்ட் பாட்டின்சன் மீண்டும் நடிப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    அதைத்தொடர்ந்து படம் தயாரிப்பு பணிகள் தொடங்கின. பேட்மேன்- 2 படத்தில் கதாநாயகனாக மீண்டும் ராபர்ட் பாட்டின்சன் நடிக்க தொடங்கினார். மேலும், பேட்மேன் -2 வருகிற 2025 அக்டோபர் 3-ல் வெளியிடவும் திட்டமிடப்பட்டது.

    2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தத்தால் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது 'தி பேட்மேன் - 2' வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், 2026 அக்டோபர் 2-ந் தேதி பேட்மேன் -2 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    • நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடி இருக்கிறார் எனவும், மே மாதம் அப்பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது.

    நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது. மீனாக்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் "கோட்" படத்தை தயாரிக்கிறது.

    விஜய் இப்படத்தில் இருவேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். நேற்று இப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடி இருக்கிறார் எனவும், மே மாதம் அப்பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது.

    இப்போது அப்படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன், மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதப் போவதாகவும், எஞ்சாய் எஞ்சாமி புகழ் அறிவு ஒரு பாடலை எழுதப் போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார்.
    • நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் அதைப் பெற்றுக் கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நன்றி கூறுவதற்காக தென்னிந்திய பொதுச்செயலாளர் பதவியில் உள்ள நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    "நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது, ஆனால் ஒரு நபர் தனது இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள் . " நன்றிநண்பா " என்று நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    • அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது
    • இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.

    மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.

    காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த கதாபாத்திரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

    மேலும் பேய் கதாப்பாத்திரத்தில் 'கள்ளியங்கட்டு நீலி' ஆக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், அனுஷ்கா இருக்கும் 'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் வசீகரிக்கும் மோஷன் போஸ்டரை ஜெயசூர்யா பகிர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் நடிக்கும் அனுஷ்காவை வரவேற்கிறேன் எனக் கூறி உள்ளார்.




     


    இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார்.அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது.மேலும் இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.

    • இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார்
    • முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.


    மலையாள நடிகை மமிதா பைஜு தனது சமீபத்திய 'பிரேமலு' படத்தின் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். 

    இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'ரெபெல்'படத்தின் மூலம் மமிதா பைஜு தமிழில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம்

    வருகிற 22 -ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்தின் தற்காலிக தலைப்பு விவி-21.

    முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில்  இணைகின்றனர்.

    • ஸ்ரீநாத் பாசி தமிழ் சினிமாவில் களம் இறங்க போகிறார்
    • ஜி.வி பிரகாஷ் இசையமைக்க அறிமுக இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்கவுள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ் மக்கள் இடையே ஒரு பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. நல்ல படங்களை ஆதரிப்பதில் தமிழ் மக்கள் என்றுமே முன்னோடிகள். உலகளவு கலக்ஷனில் 150 கோடி வசூலைப் பெற்றது. மலையாள சினிமாவில் வேகமாக 100 கோடி வசூலித்த படங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் மட்டும் 40 கோடி வசூலை பெற்ற மலையாள சினிமா இதுவே. இன்ஸ்டாகிராமில் இன்னும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மிகவும் வைரலாகி வருகிறது.

    இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரமாக ஸ்ரீநாத் பாசி நடித்துள்ளார். படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஸ்ரீநாத் பாசி சர்ச்சைக்குறிய நடிகரும் ஆவார். 23 செப்டம்பர் 2022 அன்று யூடியூப் சேனல் தொகுப்பாளரை அவதூராக பேசியதாகவும், அதே நாளில் பாசி ரெட் எஃப்எம்முக்கு நேரலை பேட்டியின் போது மலையாள வானொலி பத்திரிக்கையாளரை மரியாதை குறைவாக பேசியதால் நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. .

    கடந்த ஆண்டு போதை பொருள் உபயோகத்தினால் ஸ்ரீநாத் பாசியை மலையாள சினிமா தடை செய்தது. அப்பொழுது அவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். பலத்தடைக்களுக்கு பிறகு அப்படத்தை நடித்து முடித்தார்.

    இப்பொழுது மஞ்சும்மல் பாய்ஸ் வெளிவந்த பிறகு புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஸ்ரீநாத் பாசிக்கு தமிழ் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்புகழை தொடர்ந்து ஸ்ரீநாத் பாசி தமிழ் சினிமாவில் களம் இறங்க போகிறார். இப்படத்தை பா ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க அறிமுக இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்கவுள்ளார். இவர் தங்கலான் படத்தில் பா ரஞ்சித்திற்கு உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது.
    • நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார்.

    ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெபல். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஜி.வி. பிரகாஷ் ரெபல் படம் பற்றி பேசியுள்ளார்.

     


    இது குறித்து அவர் பேசும் போது, "ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ரெபல் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது."

    "தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலை செய்துள்ளார்."

    "நீண்ட காலம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன். அவர் தான் டார்லிங் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்," என்று தெரிவித்தார்.

    • அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.
    • கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி.

    சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றியை அடுத்து பல முன்னணி இயக்குநர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அமரன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய அமரன் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    அமரன் படத்தில் ஒரு ஆர்மி கமேண்டோவாக நடித்துள்ளார். இதற்காக அவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டு மஸ்த்தாக வைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில்.


     


    இன்று பாண்டிசேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது. கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி. சமீபத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளியாகிய 'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தில் இவர் நடித்தார். இதனிடையே, SK23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


     


    • சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.
    • புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்படங்கள், பிரபலங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

    அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க WWE நட்சத்திரம் ஜான் சீனா மேடை ஏறினார். உடலில் ஆடை எதுவும் இன்றி ஜான் சீனா மேடைக்கு வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். ஆஸ்கர் மேடையில் ஒருவர் ஆடையின்றி தோன்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.

     


    இந்த நிலையில், ஜான் சீனா உண்மையில் ஆடை எதுவும் இன்றி மேடை ஏறவில்லை என்றும், அவர் தனது அந்தரங்க உறுப்பை மட்டும் மறைத்துக் கொண்டு தான் மேடையில் தோன்றினார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    ×