ஜான் சீனா நிர்வாணமாக வரலையாம்! - எது உண்மை?

சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஜான் சீனா நிர்வாணமாக வரலையாம்! - எது உண்மை?
Published on

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்படங்கள், பிரபலங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க WWE நட்சத்திரம் ஜான் சீனா மேடை ஏறினார். உடலில் ஆடை எதுவும் இன்றி ஜான் சீனா மேடைக்கு வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். ஆஸ்கர் மேடையில் ஒருவர் ஆடையின்றி தோன்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.

இந்த நிலையில், ஜான் சீனா உண்மையில் ஆடை எதுவும் இன்றி மேடை ஏறவில்லை என்றும், அவர் தனது அந்தரங்க உறுப்பை மட்டும் மறைத்துக் கொண்டு தான் மேடையில் தோன்றினார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com