'சாமி', 'சிங்கம்' போன்று 'ரத்னம்' புதிய படம் 'ஆக்சன்,எனர்ஜி மிக்கது-ஹரி

சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன்விஷால் பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது
'சாமி', 'சிங்கம்' போன்று 'ரத்னம்' புதிய படம் 'ஆக்சன்,எனர்ஜி மிக்கது-ஹரி
Published on

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக இதில் இணைந்து உள்ளார். தற்போது இது விஷாலுக்கு 34- வது படம் ஆகும்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் முதல் 'சிங்கிள்' பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்தபாடல் அமைந்து உள்ளது.

இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.கவிஞர் விவேகா இந்த பாடலை எழுதி உள்ளார்.'கார்த்தி கே.சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம், நடித்து உள்ளனர்.இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஹரி பேசியதாவது:-

இந்த படத்தை பற்றி நான் சொல்வது என்றால் சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். ஏற்கனவே விஷாலுடன் 2 படம் பண்ணி இருந்தாலும் இது ஒரு சரியான படம். 'சாமி', 'சிங்கம்' படம் போன்று ஆக்சன் பட எனர்ஜி இந்த கதைக்குள் இருக்கிறது. ரொம்பவே நல்லா அமைந்து இருக்கிறது.

விஷால் ரொம்பவே வேற லெவலில் ஆக்சன் பண்ணி இருக்கிறார். பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது. எனக்காக 20 நாட்களில் தாமிரபரணி விஷாலாக வந்து நின்றார். எல்லாமே ஆரம்பிச்ச மாதிரி இருந்தது.படத்தை முடித்து விட்டோம். இன்றைக்கு 'பர்ஸ்ட் சிங்கிள்' உங்கள் முன் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com