கார்த்தி 26 - புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் இதர அப்டேட்கள் வெளியாகும்.
கார்த்தி 26 - புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு
Published on

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்று இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com