என் மலர்
சினிமா செய்திகள்
- சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது.
- இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.
2016 ஆண்டு வெளியாகிய இறுதிச்சுற்று படம் குத்துச் சண்டையை மையமாக எடுக்கபட்ட படம். இப்படத்தில் மாதவன்,ரித்திக்கா சிங் நடித்தனர். சுதா கொங்கரா இயக்கினார். இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.
இறுதிச்சுற்று படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியானது. ரித்திக்கா சிங்கை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்தியவர் சுதா கொங்கரா. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்தார்.மாதவனின் சிறந்த நடிப்பும், ரிதிக்கா சிங்கின் நடிப்பும் மக்களிடையே பேசப்பட்டது. இறுதி சுற்று அமேசான் மற்றும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது. இன்று முத்தமிழ் மன்றத்தில் நடக்கும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கி கவுரவித்தனர்..
- மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
- இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி,நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளிவந்த படம் "தனி ஒருவன்".
இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அரவிந்த சாமிக்கும், ஜெயம் ரவிக்கும் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிக பெரிய ஹிட் ஆனது.
இப்படம் தெலுங்கு,கன்னடம் மொழியிலும் ரீமேக் செய்தார்கள்.2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைபடங்களில் மிக பெரிய வசூல் செய்த படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டு முடிந்த நிலையில் மோகன்ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியிட போவதாக வீடியோவை வெளியிட்டு அறிவித்தார்..இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைப்பெற்று வரும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். .
- மார்ச் 4 ஆம் தேதி தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் பட்டியலை வெளியிட்டது.
- சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமன், "36வயதினிலே" படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகாவுக்கு வழங்கினார்.
மார்ச் 4 ஆம் தேதி தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் பட்டியலை வெளியிட்டது.
அதில் "36 வயதினிலே" படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது பட்டியலில் இடம் பெற்றது.
"36 வயதினிலே" எனும் படம் 2015 ஆம் ஆண்டு ரோசன் ஆண்ட்ரூஸ்சால் இயக்கப்பட்டு,சந்தோஷ் நாரயணன் இசையில்,2டி எண்டர்டெய்ன்மண்ட் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்தில் ஒரு கனவை தொலைத்த நடுத்தர பெண்ணின் வலியையும், அவளுக்கு கிடைக்க பெறாத ஆசைகளையும், தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் உணர்வுகளை கவர்ந்திருப்பார். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "36 வயதினிலே" படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகாவுக்கு வழங்கினர்.
"36 வயதினிலே எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், விருது எப்போ கிடைச்சாலும் சந்தோஷம்தான்" என்று விருதைப் பெற்ற ஜோதிகா பத்திரிக்கையாளரிடம் பேட்டிக் கொடுத்தார்.
- கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
- நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.
தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.
அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.
மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.
பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.
இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .
கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.
சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.
சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
- மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
- பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், மனோவின் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினர்.

மனோவை கௌரவிக்கும் விதமாக, இசைத் துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உன்னிமேனன், கல்பனா முதல், பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, திரை ஆளுமை மனோவின் நண்பர், நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மனோவின் பாடல்களைக் கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள், சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்புச் சங்கீத நிகழ்வை அரங்கேற்றினர். இதில் மனோவின் மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்கமுடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.
- அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
- படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
இயக்குனர் மணிரத்னம் 36 ஆண்டு இடைவெளிக்குப்பின், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து 'தக் லைப்' என்ற புதிய ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல்
ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 5 நாட்கள் நடந்தது.
இந்நிலையில், 'தக் லைப்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, மணிரத்னம் செர்பியாவில் முகாமிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.
இந்த படத்தில் நடிகர் கமல் தற்காப்பு கலை திறன்களை வெளிப்படுத்துகிறார். பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருக்கின்றன. மணிரத்னம்-கமல் லட்சிய படமான 'தக் லைப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தின் பிரமாண்ட வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
- சென்னை, பெங்களூரு, கோவா வழியாக மும்பை சென்று அதன் பின் சென்னை திரும்பினார்
- முதல் படத்தில் நடித்த பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்
சென்னையை சேர்ந்தவர் நடிகர் ஜி.எம்.குமார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தோற்றம் கொண்டவர். 1986-ல் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பிட் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற பல படங்களை இயக்கினார். 1993-ல் 'கேப்டன் மகள்' என்ற படம் மூலம் நடிகரானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். மேலும் கொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
பல படங்களை தயாரித்து இயக்கியதால் அதில் தோல்வி ஏற்பட்டு நஷ்டம் அடைந்தார். அதனால் சில வருடம் சினிமா பக்கம் செல்லாமல் இருந்தார். அதன்பின் 'வெயில்' படம் இவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது. முதல் படத்தில் நடித்த நடிகை பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜி.எம்.குமார் 'எக்ஸ்' இணைய தளத்தில் 'எனது முன்னாள் காதலியை பார்க்க 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் கார் ஓட்டிச் சென்றேன். சென்னை, பெங்களூரு, கோவா மும்பை அதன் பின் சென்னை' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.இது குறித்து இணைய தளத்தில் நெட்டிசன்கள் பலர் பலவித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
- டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
- கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' படம் மார்ச் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை'ராஜேந்திரன், பிரதீப் ராயன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஏ.சக்திவேல் மேற்கொள்ள படத்தொகுப்பாளராக எம். தியாகராஜன் பணியாற்றியுள்ளார்.
குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி இருக்கும் கார்டியன் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ். "சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது."
"முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்சிகாவும் ஒருவர். மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார்."
"இந்த படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளியாகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.
- இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
- படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள மொழியில் ரிலீசான போதிலும் இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதன் இயக்குநர் அடுத்து தமிழ் படம் இயக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- 20 ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்.
- உறுதிப்படுத்துவர் என்ற நினைப்பில் நான் அமைதி காத்தேன்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் தன்னை பற்றி தெரிவிக்கப்பட்ட அவதூறு கருத்துக்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனக்காக அதிகளவில் பணம் செலவிடப்படுவதாக பொய் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக பேசுவோர், ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவதற்கு முன்பு அவர்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மை தானா என்று உறுதிப்படுத்துவர் என்ற நினைப்பில் நான் அமைதி காத்தேன்."
"எனது குடும்பமும், நானும் கடந்த சில நாட்களாக அளவில்லா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதுபோன்ற போலி செய்திளை பரப்பும் முன் தயவு செய்து யோசியுங்கள். நான் மிகவும் ஒழுக்கமான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். எனது 16 வயதில் இருந்தே எனக்கான செலவீனங்களை நானே பார்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன். எனது குடும்பம் இப்போதும் துபாயில் தான் வசிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்."
"திரைத்துறையில், நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ அல்லது கதாநாயகனிடமோ படத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்றோ பட வாய்ப்புகளை கொடுங்கள் என்றோ உதவி கேட்டதில்லை. நான் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பணியாற்ற வேண்டும் என்றோ அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ நான் எப்போதும் பேராசை கொண்டதில்லை."
"இதுவரை என்னை தொடர்புப்படுத்தி பேசப்பட்ட விவரங்கள் எதிலும் உண்மையில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002-ம் ஆண்டில் இருந்து துபாயில் நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். 2013-ம் ஆண்டில் இருந்து எனக்கு ரேசிங் மீது ஆர்வம் அதிகரித்தது. மேலும் சென்னையில் நடத்தப்படும் ரேஸ் பந்தயங்கள் பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது."
"நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் மிக முக்கியமானவர் அல்ல. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது வாழ்க்கையில் நானும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறேன். மனரீதியாக நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். உங்கள் குடும்பங்களில் இருக்கும் பெண்களை போன்றே, நானும் கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்."
"அவர்கள் இதுபோன்று மேலும் என்மீது அவதூறு பரப்ப மாட்டார்கள் என்றும் ஊடகத்துறையில் இன்னமும் மனிதநேயம் மிஞ்சி இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த விவகாரத்தை நான் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன்."
"ஒரு குடும்பத்தின் நன்மதிப்பை கெடுப்பதற்கு முன்பு நீங்கள் பெறும் தகவல்களை உறுதிப்படுத்துமாறு ஊடகத்தினரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். உண்மை ஜெயிக்கட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- விஷ்ணு விஷாலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது
- படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கோகுல். அதன் பின் கார்த்தியை வைத்து காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கினார்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இதனை தயாரித்திருந்தார். 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் வெற்றி விழாவில் தன்னுடைய அடுத்த படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் என இயக்குனர் கோகுல் கூறினார். அந்த படத்தின் கதாநாயகன் யார் என்ற தகவலை அப்போது அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் சிம்பு விலகினார்.
தற்போது விஷ்ணு விஷாலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும், விஷ்ணு விஷால் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இயக்குனர் கோகுல் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
- பேட் பாய்ஸ் படத்தின் முதல் பாகம் 1995 ஆம் ஆண்டு வெளியானது.
- 2003 ஆம் ஆண்டு இப்படத்தின் 2-ம் பாகமும், 2020-ம் ஆண்டு 3-ம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன.
ஹாலிவுட் பிரபல நடிகர் வில் ஸ்மித் நடிக்கும் பேட் பாய்ஸ் படத்தின் 4-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
பேட் பாய்ஸ் படத்தின் முதல் பாகம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இதில் வில் ஸ்மித் மற்றும் மார்ட்டின் லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பிடிக்கும் மியாமி டிடெக்ட்டிவ் கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்திருந்தனர். இப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு இப்படத்தின் 2-ம் பாகமும், 2020-ம் ஆண்டு 3-ம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இப்படத்தின் 4-ம் பாகம் இந்தாண்டு வெளியாகயுள்ளது. இது தொடர்பாக வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக நடிகர் மார்ட்டின் லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், "பேட் பாய்ஸ் படத்தின் 4-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. மார்ட்டின் லாரன்ஸ் உடன் நடிப்பது ஒவ்வொரு முறையும் மேஜிக் போன்று உள்ளது. ஜூன் 7-ம் தேதி இப்படம் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.






