பாடகர் மனோவுக்காக இதுவரை செய்யாததை செய்த நண்பர் வெண்ணிற ஆடை மூர்த்தி

மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.
பாடகர் மனோவுக்காக இதுவரை செய்யாததை செய்த நண்பர் வெண்ணிற ஆடை மூர்த்தி
Published on

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், மனோவின் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினர்.

மனோவை கௌரவிக்கும் விதமாக, இசைத் துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உன்னிமேனன், கல்பனா முதல், பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, திரை ஆளுமை மனோவின் நண்பர், நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மனோவின் பாடல்களைக் கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள், சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்புச் சங்கீத நிகழ்வை அரங்கேற்றினர். இதில் மனோவின் மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்கமுடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com