என் மலர்
சினிமா செய்திகள்
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது
- இந்நிலையில் சுஷின் ஷியாம் இசையமைக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.
மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து வந்த இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழ்நாட்டிலும் கவனம் பெற்றுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது
இவர் இதற்கு முன்பு, குரூப், கும்பலாங்கி நைட்ஸ், மின்னல் முரளி, ரோமாஞ்சம், கண்ணூர் ஸ்குவாட் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சுஷின் ஷியாம் இசையமைக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோமாஞ்சம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஆவேசம் என்ற புதிய படத்தில் பகத் பாசில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
- சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
- டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தியின் 25-வது படமாக வெளிவந்த ஜப்பான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அவர் தற்போது '96' பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்திலும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த வரிசையில் கார்த்தியின் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபு, எம்.எஸ் பாஸ்கர், லால் உள்ளிட்ட பலர் நடித்த டாணாக்காரன் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான டாணாக்காரன் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
கார்த்தி - தமிழ் இணையும் இப்புதிய படம், 1960-களின் காலகட்டத்தில் நடைபெறும் கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் தமிழ் ஜெய்பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
- இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரளாவில் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் வசூலில் ரூ. 50 கோடியை கடந்த நிலையில், 12 நாட்களில் இந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.
முன்னதாக நடிகர் மோகன்லால் நடித்து வெளியான புலிமுருகன், லூசிஃபர் மற்றும் கடந்த ஆண்டு வெளியான 2018 போன்ற மலையாள மொழி படங்கள் வசூலில் ரூ. 100 கோடியை கடந்து அசத்தின. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.டி. கிரிஷ் இயக்கத்தில் வெளியான பிரேமலு படமும் விரைவில் ரூ. 100 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்
- 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தக் லைப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இநநிலையில், கால்சீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளார்.
- ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை
- “யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தர்மதுரை, சலீம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் விநியோகஸ்தராக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, தங்கமீன்கள் உள்ளிட்ட படங்களிலும், பாலாவின் தாரைதப்பட்டை, மருது, ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், காளி, நம்ம வீட்டு பிள்ளை, விருமன், பட்டத்து அரசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்தை இயக்கி அதில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் முதல் 'லுக் போஸ்டர்' வெளியாகி உள்ளது. இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த 'போஸ்டர்' சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இப்படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவன்சங்கர் ராஜா கூறியதாவது:-
ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை. இப்படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் 'எக்ஸ்' தளத்தில் ஆர்.கே. சுரேஷ் பதிலளித்துள்ளார். அதில் "யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க. ஒப்பந்தத்தை தெளிவாக சரிபார்க்கவும்"என்று குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா பதிவை பார்த்து ஆர்.கே.சுரேஷை ரசிகர்கள் விமர்சித்தனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட பதிவால் மீண்டும் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா தற்போது விஜயின் 'GOAT' படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா.
- சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே).
தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டு திரைப்பட விருது பெறும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் வருமாறு:-
சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா, சிறப்பு பரிசு- இறுதிச்சுற்று, பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - 36 வயதினிலே.
சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு- கவுதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), வில்லன் நடிகர்- அரவிந்த்சாமி (தனி ஒருவன்), நகைச்சுவை நடிகர்- சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (திருட்டு கல்யாணம், 36 வயதினிலே),

சிறந்த குணச்சித்திர நடிகர்- தலைவாசல் விஜய் (ஆபூர்வ மகான்), குணச்சித்திர நடிகை- கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குனர்- சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்- மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர்- ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்), சிறந்த பாடலாசிரியர்- விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணி பாடகர்- கானா பாலா (வை ராஜா வை), பின்னணி பாடகி- கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்- ராம்ஜி (தனி ஒருவன்).
சிறந்த ஒலிப்பதிவாளர்- ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஸ்வரன் (தாக்க, தாக்க), சிறந்த எடிட்டர்- கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சண்டை பயிற்சியாளர்- ரமேஷ் (உத்தம வில்லன்), நடன ஆசிரியர்- பிருந்தா (தனி ஒருவன்), ஒப்பனை கலைஞர்- சபரி கிரீஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று), தையல் கலைஞர்- வாசுகி பாஸ்கர் (மாயா),
சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிஷேஸ், வைஷ்ணவி (பசங்க-2), சிறந்த பின்னணி குரல் (ஆண்) - கவுதம் குமார் (36 வயதினிலே), (பெண்)- ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). இதே போன்று தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான 2014-15-ம் ஆண்டுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். விழாவில் 39 விருதாளர்களுக்கு காசோலை, அவர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.
- குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இளம் இயக்குனர் பட்டியலில் மறுக்க முடியாத இடத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து அவர் இயக்கிய "லியோ" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ஹோலிவுட் படத்தில் வரும் மார்வல் யூனிவர்ஸ், டி.சி. காமிக்கலில் வரும் யூனிவர்ஸ் கான்சப்ட்டுகளைப் போல, தனக்கென்று ஒரு தனி ஸ்டைலாக லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸ் ( LCU) என்று ஒன்றை உருவாக்கினார்.
அதில் விக்ரம், லியோ, கைதி போன்ற படங்கள் உள்ளடக்கம். லியோ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.

அதை தொடர்ந்து கைதி- 2 எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வந்த அண்மை தகவல்கள்படி லோகேஷ் கனகராஜ் LCU வை மையமாக வைத்து 15- 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார்.
அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார்.
குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் கைதி - 2 படத்திற்கு முன்னே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவு.
- ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தனது 170-வது படமான வேட்டையன் திரைப்படம், லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜெய் பீம் படம் இயக்கிய டீ ஜே ஞானவேல் தான் இத்திரைபடத்தையும் இயக்குகிறார்.
இப்படத்திற்க்கு மக்கள் இடையே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
இப்போது ராணா தகுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூல அவர் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இருப்பார் என்று எதிர் பார்க்கபடுகிறது.

- மீடியா மேசன்ஸ்” நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
- சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த media masons நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து பல ஹிட்டான ஷோக்களான "சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Mr.Mrs சின்னத் திரை, சமையல் சமையல், கிச்சன் சூப்பர் ஸ்டார், சூப்பர் மாம்" போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கியது மீடியா மேசன் என்ற நிறுவனம்தான்.
இதுகுறித்து "மீடியா மேசன்ஸ்" நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
அதில், "தனது 25 வருட தொலைக்காட்சி பயணத்தை நாங்கள் விஜய் டிவியிடம் பணியாற்றினோம். விஜய் டி.வி எங்களின் இன்னொரு வீடு என்றும், துரதிஷ்ட்டவசமாக , சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை. இது வரைக்கும் எங்கள் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார், யார் அதை தயாரிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
- தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
கடந்த மாதம் 9-ஆம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் ப்ரேமலு எனும் படம் வெளியானது.
மாமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளனர். 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இப்படம் இடம்பெற்றுள்ளது.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தமையால் படக் குழுவினர் இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, வரும் மார்ச் 8-ஆம் தேதி தெலுங்கு மொழியில் இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
- படக்குழு கடந்த 2022ல் "கா" படத்தின் டிரைலரை வெளியிட்டது.
- இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் என இரண்டிலும் அசத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர், 'தரமணி', 'அவள்', 'விஸ்வரூபம் 2', 'வடசென்னை' 'அரண்மனை', 'பிசாசு' போன்ற பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
இந்நிலையில், நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா கா என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு கடந்த 2022ல் "கா" படத்தின் டிரைலரை வெளியிட்டது. இந்நிலையில், 'கா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 'கா' திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.
ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






