கார்த்தி - டாணாக்காரன் பட இயக்குநர் கூட்டணியில் உருவாகும் கேங்க்ஸ்டர் படம்

சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி - டாணாக்காரன் பட இயக்குநர் கூட்டணியில் உருவாகும் கேங்க்ஸ்டர் படம்
Published on

கார்த்தியின் 25-வது படமாக வெளிவந்த ஜப்பான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அவர் தற்போது '96' பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்திலும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த வரிசையில் கார்த்தியின் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு, எம்.எஸ் பாஸ்கர், லால் உள்ளிட்ட பலர் நடித்த டாணாக்காரன் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான டாணாக்காரன் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

கார்த்தி - தமிழ் இணையும் இப்புதிய படம், 1960-களின் காலகட்டத்தில் நடைபெறும் கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் தமிழ் ஜெய்பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com