என் மலர்
சினிமா செய்திகள்
- படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது.
- மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் ஆதரவு பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடமும் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை பரவா பில்ம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இதில் ஷோபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்த படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு "ஜான்-இ-மான்"படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் பெரும் வசூலினை பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா முன்னணி பிரபலங்களான நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், நடிகர் சித்தார்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை பார்த்து படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இப்படத்தில் கமல் நடித்த குணா படத்தில் உள்ள கண்மணி அன்போடு காதலன் என்னும் பாடல் இப்படத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால் மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதையொட்டி மார்ச் 1 -ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மாள் பாய்ஸ் படக்குழுவினர் அனைவரையும் அவரின் அலுவகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, குணா படத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
- நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடம் சென்று வந்தேன்.
- வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலும் முடியாது. யாருக்கும் கிடையாது.
சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சென்னை பெரவள்ளூர் அகரத்தில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடம் சென்று வந்தேன். திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள். உள்ளே போனால், அங்கிருக்கும் காட்சிகளை கண்டால், எனக்கு மூச்சு நிற்கும் அளவுக்கு கருணாநிதியின் வரலாறை முதலமைச்சர் மிகச்சிறந்த அளவில் உருவாக்கியுள்ளார். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலும் முடியாது. யாருக்கும் கிடையாது.
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்ற போதிலும் கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தன், தீவிர விசுவாசி. எம்.ஜி.ஆரை நான் வெளியே இருந்துதான் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர்- கருணாநிதி 2 பேரும் நண்பர்கள் தான். ஆனால் கலைஞரின் கதை- வசனத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் அமர்ந்து பேசியிருக்கிறேன். பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் கலைஞர் எனக்கு தைரியம் சொல்லுவார். திரை உலகத்தை அவர் எந்தளவுக்கு நேசித்தார் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.
23 ஆம் புலிகேசி படத்தை என்னால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனுக்கு போன் செய்து கலைஞரிடம் பேச வேண்டும் என சொன்னேன். உடனே என்ன வென்று பேசினார். நான் உங்களை பார்க்க வேண்டுமென சொன்னேன். எதுவும் பிரச்சினையா? என கருணாநிதி கேட்டார். புலிகேசி படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று சொல்கிறார்கள். ராஜா குதிரை போக விடமாட்டேன் என்று சொல்கிறார்கள். ஏதோ புளூ கிராஸ் அமைப்பில் பஞ்சாயத்து ஆகிவிட்டது என நான் விஷயத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம், 'ராஜா குதிரையில் போகாம குவாலிஸ்லயா போவார்?' என பதிலடியாக பேசினார்.
பின்னர் நான் கருணாநிதியை சந்திக்க நேரில் சென்றேன். கிட்டதட்ட 22 நிமிடம் இதற்காக பேசினார். பின்னர் உதவியாளர் சண்முகநாதனை கூப்பிட்டு ஆ.ராசாவுக்கு போன் செய்ய சொன்னார். அவரிடம், 'ராஜா குதிரை போகக்கூடாதுன்னு சொல்கிறார்களாம். உடனே நீ போற மாதிரி ஏற்பாடு பண்ணிரு. நீயும் ராஜா தானே'என கலாய்த்து பேசிவிட்டு போனை வைத்து விட்டார்.
அதன்பின்னர் என்னை பார்த்து, 'இப்படித்தான் உன் எம்.ஜி.ஆர்.'என பேச ஆரம்பித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படித்தான் எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித்தலைவன் படம் பண்ணும்போது அதில் புலிகேசி மன்னனாக எம்.ஜி.ஆர். வருவார். அப்போதும் இதே மாதிரி பிரச்சினை வந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காட்சியை தூக்கி விட்டோம். அதன்பிறகு இப்போது இந்த பட பிரச்சினை வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகும் என தைரியம் கொடுத்தார். ஒருவாரத்தில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் செய்ய வைத்தவர் கலைஞர் கருணாநிதி தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகன் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய மனதார வாழ்த்துவது போல, பாடலும், நடனமும் அமைந்திருந்தது
- காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து பக்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடினார்.
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீதா தம்பதிகளின் இளைய மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகிற ஜூலை 12- ந்தேதி நடக்கிறது.
இந்த திருமணத்தை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் 3 நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர். இதில் இந்திபட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். நேற்று 3- வது நாளாக நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பங்கேற்றனர்.
இந்நிலையில் நேற்று முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனது மகன் ஆனந்த் திருமண விழாவில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இந்தி படத்தின் பக்தி பாடல் ஒன்றுக்கு அவர் நடனமாடினார்.
தனது மகன் மற்றும் மருமகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் வகையில், மனதார வாழ்த்துவது போல, இப்பாடலும், நடனமும் அமைந்திருந்தது. இந்த காட்சிகள் 'எக்ஸ்' வலைத்தளத்தில் வைரலாகியது.
- விக்கியும்,நயன்தாரா பிரிகிறார்கள் என ரசிகர்கள் குழப்பம்
- 2 மகன்களை அன்போடு வளர்ப்பதில் நயன்தாரா தீவிரம்
நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படம் நயன்தாராவுக்கு ஏமாற்றம் கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டபின்குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தனது 2 மகன்களை அன்போடு வளர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை நயன்தாரா 'அன்பாலோ' செய்துவிட்டார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் 2 பேரும் பிரிகிறார்கள் என்று கூறப்பட்டது.
ரசிகர்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ஒரு 'போஸ்ட்' போட்டிருக்கிறார். அதில் தனது 9 ஸ்கின் நிறுவனத்துக்காக தான் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால், விக்கியும், நயன்தாராவும் பிரிகிறார்கள் என்பது வதந்தியா அல்லது இருவரும் பிரிவது உண்மையா என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
- கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார்.
- 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
பத்திரிகையாளர் ஜியாவின் 'எனக்கொரு WIFE வேணுமடா' குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியானது.
செபாஸ்டின் அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழு நீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் 'கள்வா' என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை ஜியா இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது குறும்படமாகும். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் 'எனக்கொரு WIFE வேணுமடா' வெளியாகியுள்ளது.
10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
- தி டார்க் ஹெவன் படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
- இதன் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டனர்.
நகுல் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'தி டார்க் ஹெவன்' என பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான டைட்டில் லுக் போஸ்டரை சசிகுமார், பரத் மற்றும் சிபிராஜ் வெளியிட்டனர்.
இந்த படத்தை பாலாஜி இயக்குகிறார். டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக தி டார்க் ஹெவன் உருவாகிறது. இதில் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நகுல் நடிக்கிறார்.

ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே உடன்பால் படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.
- மூன்று படங்களில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.
- எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்கும் அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.

'சியான் 62' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதே படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள படம்.
- நம்பியார் பேரன் தீபக் நம்பியார் வில்லனாக அறிமுகமாகிறார்.
ஜெ.எஸ்.பி. ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி. சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் "சிங்கப் பெண்ணே".
டிரையல்தான் எனப்படும் நீச்சல் மிதிவண்டி மற்றும் ஓட்டப்பந்தயம் சேர்ந்த போட்டியில் தேசிய அளவில் பலமுறை வெற்றி பெற்றி வீராங்கனை ஆர்த்தி இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.ன். நம்பியார் அவர்களின் பேரன் தீபக் நம்பியார் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.

இவர்களுடன் பசங்க சிவகுமார், ஏ.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட இயக்குநர் பாக்கியராஜ் பேசும் போது, "உண்மையான சிங்கப்பெண்களை வைத்து, பெற்றவர்களுக்கும் பெண்களுக்கும் ஊக்கம் தர வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு படத்தை தயாரித்து, இயக்கி இருக்கும் இயக்குநர் சதீஷ் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஆர்த்தி மற்றும் அவரது பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள்."
"பத்திரிக்கையாளர்கள் ஒரு நல்ல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சதீஷ் பார்க்க பயங்கர ஃபிட்டாக இருந்தார், படத்திலும் நடித்திருக்கிறார். அவரிடம் நல்ல ஹீரோவாக வரும் திறமை இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் குமரன் சிவமணிக்கு அவரது அப்பாவிடம் இருந்து இசை வந்திருக்கும், அவரின் அப்பா பெயரை காப்பாற்றி இருக்கிறார்," என்று தெரிவித்தார்.
இப்படத்தின் வசனத்தை கபிலன் வைரமுத்துவும், ஒளிப்பதிவை என்.கே. ஏகாம்பரமும், படத்தொகுப்பை கே.எல். பிரவீனும், இசையை டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணியும் செய்துள்ளனர்.
- நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
- 'ஆக்ஷன்' காட்சிகள் நிறைந்த படமாக உருவாக உள்ளது
பிரபல நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள "வளையம்" படத்தின் பூஜை நடந்தது. இதில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012 -ல் வெளியான "அட்டகத்தி" படத்தின் ஐஸ்வர்யாராஜேஷ் நடித்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.அதன்பின் "காக்காமுட்டை" படம் அவருக்கு மேலும் புகழை கொடுத்தது.ஐஸ்வர்யாராஜேஷ், தற்போது முதன்மையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் "வளையம்" என்ற புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.இந்தபடத்திற்கான பூஜை தொடங்கியது.ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது உருவாக உள்ளது.ஜி.டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் மனோபாரதி இதனை இயக்குகிறார்.இதில் 'தேவ்' என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.இதில் சேத்தன், தமிழ், பிரதீப்ருத்ரா, ஹரிஷ்பேராடி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். சென்னையில் நடந்த இந்தப்பட பூஜையில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- இன்று 3- வது நாள் விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது
- மனைவி லதா மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் ரஜினிகாந்த் குஜராத் ஜாம்நகருக்கு சென்றார்
'ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீட்டா தம்பதிகளின் இளையமகன் ஆனந்த்அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகிற ஜூலை 12- ந்தேதி நடக்கிறது.
இந்த திருமணத்தை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் 3 நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.
இதில் இந்திபட சூப்பர் ஸ்டார்கள்ஷாருக்கான்,சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள்.
இன்று 3- வது நாளாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த்,மகள் ஐஸ்வர்யா ஆகியோர் குஜராத் ஜாம் நகருக்கு விமானத்தில் சென்றனர்.
- 3 சூப்பர் ஸ்டார்கள் ஒரேமேடையில் பங்கேற்று 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர்.
- தீபிகா படுகோன், ரன்வீர்சிங், ராணிமுகர்ஜி பங்கேற்பு
தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவை முன்னிட்டு 2- ம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை குஜராத் ஜாம்நகரில் உள்ள வீட்டில் நடந்தது.
இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.
இதில் இந்தி பட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். வண்ண குர்தா உடையில், 3 கான்கள் ஒரே பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிகழ்ச்சியில் பாஷில்சித்தார்த் மல்ஹோத்ரா, கியாராஅத்வானி, சைப் அலிகான், கரீனாகபூர், மாதுரி தீட்சித், வருண்தவான். அனன்யா பாண்டே, ஆதித்யாராய், ராணிமுகர்ஜி, தீபிகாபடுகோன், ரன்வீர்சிங், ரன்பீர்கபூர், ஆலியாபட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- தன்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது.
- இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.
அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.






