ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'வளையம்' புதிய பட பூஜையில் பங்கேற்ற விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்'ஆக்‌ஷன்' காட்சிகள் நிறைந்த படமாக உருவாக உள்ளது
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'வளையம்' புதிய பட பூஜையில் பங்கேற்ற விஜய்சேதுபதி
Published on

பிரபல நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள "வளையம்" படத்தின் பூஜை நடந்தது. இதில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012 -ல் வெளியான "அட்டகத்தி" படத்தின் ஐஸ்வர்யாராஜேஷ் நடித்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.அதன்பின் "காக்காமுட்டை" படம் அவருக்கு மேலும் புகழை கொடுத்தது.ஐஸ்வர்யாராஜேஷ், தற்போது முதன்மையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில் "வளையம்" என்ற புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.இந்தபடத்திற்கான பூஜை தொடங்கியது.ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது உருவாக உள்ளது.ஜி.டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் மனோபாரதி இதனை இயக்குகிறார்.இதில் 'தேவ்' என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.இதில் சேத்தன், தமிழ், பிரதீப்ருத்ரா, ஹரிஷ்பேராடி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். சென்னையில் நடந்த இந்தப்பட பூஜையில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com