காக்கி சட்டையில் நகுல் - தி டார்க் ஹெவன் டைட்டில் லுக் வெளியானது

தி டார்க் ஹெவன் படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டனர்.
காக்கி சட்டையில் நகுல் - தி டார்க் ஹெவன் டைட்டில் லுக் வெளியானது
Published on: 

நகுல் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'தி டார்க் ஹெவன்' என பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான டைட்டில் லுக் போஸ்டரை சசிகுமார், பரத் மற்றும் சிபிராஜ் வெளியிட்டனர்.

இந்த படத்தை பாலாஜி இயக்குகிறார். டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக தி டார்க் ஹெவன் உருவாகிறது. இதில் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நகுல் நடிக்கிறார்.

ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே உடன்பால் படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com