என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம்.
    • விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.

    நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

    இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.

    நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

    இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.

    • கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'புளூ ஸ்டார்' (Blue Star).

    இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    இதனை அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நேற்று தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். 

    இவர்களை தொடர்ந்து, பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகனான நடிகர் ப்ரித்விராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பகர்ந்துள்ளார்.

    இதுகுறித்து ப்ரித்விராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அப்பா.. இது உங்களுக்கானது..! "புளூ ஸ்டார்" படத்தில் என்னைப் பார்க்கும்போது உங்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி.

    வார்த்தைகளால் சொல்ல முடியாததை விட உங்களை நேசிக்கிறேன்.

    புளூ ஸ்டார் இப்போது அமேசான் பிரைமில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்வு.
    • புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவு.

    உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவிட்டுள்ளார்.

    தமன்னாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் ஹர ஹர மகாதேவ் என பதிவிட்டு வருகின்றனர்.

    • வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு
    • ஜப்பான் ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

    தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்புக்கும்,நடனத்திற்கும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

    தெலுங்கில்ஆரம்பித்து தமிழில் கலக்கி தற்போது ஹிந்தியிலும் வெற்றிநடை போட்டு வரும் நடிகை ராஷ்மிகா அதிகம் பயணம் மேற்கொள்ளக்கூடியவர் என கூறப்படுகிறது.இப்படி உலகம் சுற்றும் பறவையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா ஜப்பான் நாட்டிற்கு சென்று உள்ளார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்Crunchyroll Anime Awards-2024 விருது வழங்கும் விழா நாளை (2-ந்தேதி) நடைபெற உள்ளது.இந்தநிகழ்ச்சிக்காக ராஷ்மிகா ஜப்பான் சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவருக்கு பெரும்வரவேற்பு கிடைத்தது. 

    ஜப்பான் ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜப்பான் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பால் திகைத்துப்போன ராஷ்மிகா கைகளை அசைத்து மகிழ்ச்சியைவெளிப்படுத்தினார்.ஜப்பான் ரசிகர்களுக்கு தனது கைப்பட 'ஆட்டோகிராப்' எழுதி வழங்கினார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசினார்.
    • நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குத்துவிளக்கை ஏற்றினார்.

    சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குத்துவிளக்கை ஏற்றினார். 

    உணவக துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளை கொண்டு வயிற்று பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.

    இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசிய நடிகர், இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், "நான் உள்ள வரும் போது பார்த்திபனாக இருந்தேன். என்னை செல்வமணியாக மாற்றி தலை முழுக்க ரோஜாக்களாகிவிட்டது. அவர் தான் ரோஜாவை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்.

    இவர்கள் கொடுத்த காஃபியில் வடிவமைப்பு இடம்பெற்று இருந்தது. இப்போ எல்லாம் காஃபியில் தாமரை பூ போன்ற டிசைன் செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக நான் பா.ஜ.க.-வுக்கு விளம்பரம் பண்றேன்னு எடுத்துக்காதீங்க. மக்கள் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கின்றனர்" என தெரிவித்தார்.

    • நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர்.
    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'புளூ ஸ்டார்' (Blue Star).

    இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    • அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது
    • மாணவர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கியுள்ளனர்

    கடந்த வாரம் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்'  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் மாணவர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கியுள்ளனர்.

    இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ.50 கோடி வரை வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கமல் நடித்த 'குணா' படம் இங்குதான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டு.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் பாராட்டு.

    மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் "மஞ்சும்மல் பாய்ஸ்" வெற்றி பெற்றுள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

    இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மஞ்சும்மல் பாய்ஸ் சூப்பர்... அருமையான... அற்புதமான படம்.

    சிறந்த ஃபிலிம்மேக்கிங்.. ஹேட்ஸ் ஆஃப்.

    இந்த அற்புதமான திரை அனுபவத்தை தவறவிடாதீர்கள்.

    சிதம்பரம், சௌபின்ஷாஹிர், விவேக்ஹர்ஷன், பர்வாபிலிம்ஸ், சுஷின்ஷியாம், ஷைஜூகாலித் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவுக்கும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மமிதா பைஜு இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து உள்ளார்
    • மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்


    தமிழ்பட உலகின் முன்னணி இயக்குனர் பாலா. இவர் நடிகர் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்தை இயக்கினார்.இந்த' படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்.

    இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது.

    மேலும் அந்தப்படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக நடிகர் சூர்யா, மமிதாபைஜு திடீரென விலகினர்.இதையடுத்து இந்தப்படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் நடித்தார்.அவருக்கு ஜோடியாக ரோஷினிபிரகாஷ் நடித்தார்.இதில் மிஷ்கின்,சமுத்திரக்கனியும் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்படத்தை சுரேஷ்காமாட்சி தயாரித்து உள்ளார்.இந்நிலையில், 'வணங்கான்' படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதாபைஜூ இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    "வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும்.நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன். திடீரென இயக்குநர் பாலா வந்து என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். 

    அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை.அதனால் பதற்றமாகி விட்டேன். அப்போது எனக்கு பின்னால் இருந்த பாலா என்னை தோள்பட்டையில் அடித்தார். 'மேலும் நான் அவ்வபோது திட்டுவேன்.அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க' என சொல்லுவார். சிலசமயங்களில் அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன்.   

                             



                                                                                                                                                                                                                                                                    இந்நிலையில், இயக்குநர் பாலா குறித்து நடிகை மமிதா பைஜுபேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானது.இதனால் பாலாவிற்கு எதிராக கருத்துக்கள் வெளியாகின. இந்த நிலையில், தான் பேசிய அந்த வீடியோ தொடர்பாக நடிகை மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்து உள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-வணங்கான் பட அனுபவம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.திரைப்பட பிரமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி.பொறுப்பற்ற தலைப்பின் மூலம் அது தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    படத்தின் ப்ரீபுரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்து உள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார்.அந்தப்படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ,உடல்ரீதியாகவோ எவ்வித தவறான அனுபவங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிறதொழில்ரீதியான கமிட்மெண்ட் காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைய உள்ளனர்.
    • பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி

    பிரபல திரைப்பட இயக்குனர் எம். ராஜேஷ் நகைச்சுவை திரைப் படங்களை உருவாக்குவதில் சிறப்பு பெற்றவர். இவர் 'சிவா மனசுல சக்தி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' , ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கி பெற்றவர்.

    இந்நிலையில் தற்போது எம். ராஜேஷ் அதர்வா, அதிதி ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 'பிரதர்' திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். எனவே இப்படத்திற்குப் பின் அதர்வா - அதிதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

    இவர்கள் இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைய உள்ளனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி , கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் இவருக்கு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களை குவித்து வருகிறார். தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் அதிதி அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

    • படக்காட்சிகளை பார்த்து நடிகர் பாபிதியோல்,அவரது மகன் ஆர்யாமான்தியோல் மிகவும் ரசித்தனர்.
    • பிரபல இந்திநடிகர் பாபிதியோல் வில்லன் வேடத்தில் நடித்து உள்ளார்.

    தென்னிந்திய திரைஉலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா.இவர் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும்'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார்.

    கற்பனைகதைக்கொண்ட வரலாற்று திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் திஷாபட்டாணி, யோகிபாபு, நடராஜன், ரெடின், கோவைசரளா, ரவிக்குமார் என ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.மேலும்இந்தபடத்தில் பிரபல இந்திநடிகர் பாபிதியோல் வில்லன் வேடத்தில் நடித்து உள்ளார்.

    இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.உலக தரம் வாய்ந்த'அத்னாஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு 'டப்பிங்' பணிகளை சமீபத்தில் மேற்கொண்டார்

    ''டப்பிங்' பணியின் போது படத்தின் இறுதி தயாரிப்பைப்பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்

    'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றன.படம் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வவாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    மேலும் 'கங்குவா' படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளன.

    இந்தநிலையில் சென்னையில்'கங்குவா' படத்தின் சிலகாட்சிகளை நடிகர் பாபிதியோல்,அவரது மகன் ஆர்யாமான்தியோல் ஆகியோர் பார்வையிட வந்தனர்.அவர்களைதயாரிப்பாளர் ஞானவேல்ராஜாபூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.படக்காட்சிகளை பார்த்து நடிகர் பாபிதியோல்,அவரது மகன் ஆர்யாமான்தியோல் மிகவும் ரசித்தனர்.

    • பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
    • இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படம் தமிழ், மலையாளம் என இருமொழி ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

     


    இந்நிலையில், 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் வசூலில் ரூ. 50 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

    அந்த வகையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வசூல் மற்றும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. வரும் வாரங்களில் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×