ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற 'BLUESTAR': ஒடிடி-ல் ரிலீஸ்

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர்.இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.
ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற 'BLUESTAR': ஒடிடி-ல் ரிலீஸ்
Published on

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'புளூ ஸ்டார்' (Blue Star).

இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com