`கங்குவா': படக்காட்சிகளை பார்த்து ரசித்த நடிகர் பாபி தியோல்

படக்காட்சிகளை பார்த்து நடிகர் பாபிதியோல்,அவரது மகன் ஆர்யாமான்தியோல் மிகவும் ரசித்தனர்.பிரபல இந்திநடிகர் பாபிதியோல் வில்லன் வேடத்தில் நடித்து உள்ளார்.
`கங்குவா': படக்காட்சிகளை பார்த்து ரசித்த நடிகர் பாபி தியோல்
Published on

தென்னிந்திய திரைஉலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா.இவர் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும்'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார்.

கற்பனைகதைக்கொண்ட வரலாற்று திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் திஷாபட்டாணி, யோகிபாபு, நடராஜன், ரெடின், கோவைசரளா, ரவிக்குமார் என ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.மேலும்இந்தபடத்தில் பிரபல இந்திநடிகர் பாபிதியோல் வில்லன் வேடத்தில் நடித்து உள்ளார்.

இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.உலக தரம் வாய்ந்த'அத்னாஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு 'டப்பிங்' பணிகளை சமீபத்தில் மேற்கொண்டார்

''டப்பிங்' பணியின் போது படத்தின் இறுதி தயாரிப்பைப்பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்

'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றன.படம் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வவாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் 'கங்குவா' படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளன.

இந்தநிலையில் சென்னையில்'கங்குவா' படத்தின் சிலகாட்சிகளை நடிகர் பாபிதியோல்,அவரது மகன் ஆர்யாமான்தியோல் ஆகியோர் பார்வையிட வந்தனர்.அவர்களைதயாரிப்பாளர் ஞானவேல்ராஜாபூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.படக்காட்சிகளை பார்த்து நடிகர் பாபிதியோல்,அவரது மகன் ஆர்யாமான்தியோல் மிகவும் ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com