என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இயக்குனர் பாலா என்னை அடித்தாரா? 'வணங்கான்' பட நடிகை மமிதா பைஜு மீண்டும் விளக்கம்
- மமிதா பைஜு இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து உள்ளார்
- மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்
தமிழ்பட உலகின் முன்னணி இயக்குனர் பாலா. இவர் நடிகர் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்தை இயக்கினார்.இந்த' படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்.
இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது.
மேலும் அந்தப்படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக நடிகர் சூர்யா, மமிதாபைஜு திடீரென விலகினர்.இதையடுத்து இந்தப்படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் நடித்தார்.அவருக்கு ஜோடியாக ரோஷினிபிரகாஷ் நடித்தார்.இதில் மிஷ்கின்,சமுத்திரக்கனியும் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்படத்தை சுரேஷ்காமாட்சி தயாரித்து உள்ளார்.இந்நிலையில், 'வணங்கான்' படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதாபைஜூ இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது:-
"வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும்.நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன். திடீரென இயக்குநர் பாலா வந்து என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார்.
அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை.அதனால் பதற்றமாகி விட்டேன். அப்போது எனக்கு பின்னால் இருந்த பாலா என்னை தோள்பட்டையில் அடித்தார். 'மேலும் நான் அவ்வபோது திட்டுவேன்.அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க' என சொல்லுவார். சிலசமயங்களில் அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன்.
இந்நிலையில், இயக்குநர் பாலா குறித்து நடிகை மமிதா பைஜுபேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானது.இதனால் பாலாவிற்கு எதிராக கருத்துக்கள் வெளியாகின. இந்த நிலையில், தான் பேசிய அந்த வீடியோ தொடர்பாக நடிகை மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்து உள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-வணங்கான் பட அனுபவம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.திரைப்பட பிரமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி.பொறுப்பற்ற தலைப்பின் மூலம் அது தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
படத்தின் ப்ரீபுரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்து உள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார்.அந்தப்படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ,உடல்ரீதியாகவோ எவ்வித தவறான அனுபவங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிறதொழில்ரீதியான கமிட்மெண்ட் காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்