என் மலர்
சினிமா செய்திகள்
- 4-ல் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், முக்கிய காட்சிகளை ஏப்ரலுக்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.
- புகாரின் அடிப்படையில் 406/420 ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் பார்த்திபன் தற்போது TEENZ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளராக கோவையை சேர்ந்த சிவபிரசாத் பணியாற்றி வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 10 அல்லது 20-ம் தேதிக்குள் பணிகளை முடிப்பதாகக் கூறி ரூ.68.50 லட்சத்தை சிவபிரசாத் கேட்டுள்ளார். ரூ.42 லட்சம் செலுத்திய பார்த்திபன் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காததால் ஏப்.19-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளார்.

அப்போது, 4-ல் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், முக்கிய காட்சிகளை ஏப்ரலுக்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார். மேலும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி ரூ.88.38 லட்சம் கேட்டு பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் சிவபிரசாத்.
இதையடுத்து, தன்னை ஏமாற்றியதாக கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் மீது பந்தயசாலை காவல்நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் 406/420 ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் 3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்ட இந்தியன் 2 படத்துக்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
- காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும்.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தியன் படத்தில் லஞ்சத்தை எதிர்த்து போராடிய சேனாபதி இந்தியன் 2 படத்தின் மூலம் மீண்டும் திரைகளை மிரட்ட வருகிறார்.

3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்ட இந்தியன் 2 படத்துக்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. குறிப்பாக படத்தில் 5 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும், காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும்.

குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் தோன்றும் காட்சியில் மாற்றம் செய்ய வேண்டும். 'டர்ட்டி இந்தியன்' [Dirty indian], 'F**k' உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும். படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விஷயங்களுக்கு NOC - தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும்.
- படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. எட்டே நாட்களில் 700 கோடியைத் தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர் பட்டாலமே நடித்துள்ளது. பேன்டஸி பிக்சனாக உருவாகியுள்ள இப்படத்தின் கதை மகாபாரதம், கிருஷ்ணர், கலியுகம், கல்கியின் பிறப்பு ஆகியவற்றை சுற்றி நிகழ்கிறது.
இந்நிலையில் ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வரும் வேளையில் 90 ஸில் பிரபல தொடரான சக்திமான் தொடரின் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா கல்கி 2898 ஏடி படம் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கல்கி 2898 ஏடி குறித்து அவர் கூறியதாவது, இந்த படம் மேற்கத்திய ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அளவுக்கு மிகவும் அதிபுத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும். ஒடிசா, பீகார் மாநிலங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் இது புரியாது.
அதுமட்டுமின்றி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார். பகவான் கிருஷ்ணர், அஸ்வத்தாமாவின் நெற்றியில் உள்ள கல்லை சாபம் காரணமாக நீக்குவார். ஆனால் படத்தில் வேறு மாதிரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் க்ளிக் செய்யவும்.
- நடிகை ரம்யா பாண்டியன், ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
- இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது ரம்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின்னர் 2016-ல் ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றது. இப்படம் பல விருதுகளையும் பெற்றது.
பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலர் ஆனார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்தது.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் போட்டோஷூட் செய்வதை தவிர்க்கமாட்டார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறார். அப் அண்ட் டவுன் என புல் அப்ஸ் வொர்க்கவுட் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கெமண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இப்படி வொர்க் அவுட் செய்தால் உங்களது இடையழகு பொய்விடுமே என கவலையாக தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
- யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை, மாடல், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகங்களை கொண்டவர் யாஷிகா ஆனந்த். தனது 14 வயதிலேயே மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மைனர் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி, கடமையை செய், பகீரா என பல படங்களில் நடித்தார். எனினும் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த பெரிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.
அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவர் கிளாமர் போட்டோக்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் யாஷிகாவின் படு கிளாமரான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
- படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது.
- ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்பட பணிகள் துவங்க உள்ளதாக தகவல்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நாளை ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சுமார் இரண்டு மாத கால ஓய்வு முடிந்துள்ள நிலையில், இன்று ஜூலை மாதம் 4ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார்.
அங்கு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்பட பணிகள் துவங்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
- இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
- இந்தியன் 2 படத்தினை பல வழிகளில் புரோமோஷன் செய்து வருகிறது படக்குழு.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தினை பல வழிகளில் புரோமோஷன் செய்து வருகிறது படக்குழு. அந்த வகையில் துபாயில் ஸ்கை டைவிங் மூலம் இந்த படத்தினை புரோமோஷன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- திரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.
- விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாக பாடகி சுசித்ரா கூறியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.
அப்போது, நடிகை திரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.
அதில், " அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், திரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை போஸ்ட் செய்திருந்தார். இந்த பதிவு திடீரென சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, ஜெயலலிதாவோடு த்ரிஷாவை ஒப்பிட்டு சுசித்ரா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாக பாடகி சுசித்ரா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில், த்ரிஷாவின் இந்த பதிவு சுசித்ராவுக்கான பதிலடியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர்.
- சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர்.
வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது.
தற்பொழுது சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் விருதை கேப்டன் மில்லர் வென்றுள்ளது. இச்செய்தியை நன்றியுடன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளரான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் அவரது எக்ஸ் தள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர்.
- இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று படக்கிழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிரித்விராஜ்
- இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பிரித்விராஜ் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பிரம்மிக்கும் அளவு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பிரித்விராஜ். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ராஜமவுலி இயக்கும் SSMB29 படத்தில் வில்லனாக நடிக்க பிரித்விராஜ் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதில் நாயகனாக மகேஷ்பாபு நடிக்கிறார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரித்விராஜ் நடிக்க இருப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுவிட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
- 2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சுவிட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ம்தேதி முதல் 17-ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
58 வயதாகும் ஷாருக்கான் இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். பாசிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. தி பாந்தன், டான் 2. ஓம் சாந்தி ஓம் படங்களின் வெற்றியால் அவரது ரசிகர்கள் 'கிங் கான்' என்று அழைத்தனர்.
2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் பெரிய வெற்றி பெற்றன. இரண்டு திரைப்படங்களும் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






