என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புதிய இயக்குனர்கள் நல்ல கதைகளோடு வந்தால், சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன் என்று நடிகை வசுந்தரா கூறினார். #Vasundara #KanneKalaimaane
    பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த வசுந்தரா அடுத்து விக்ராந்துடன் பக்ரீத் படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி...

    பக்ரீத் படம் பற்றி?

    ஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதற்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். இதிலும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். மேக்கப் போடாமலே நடித்துள்ளேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்த படத்தை இயக்குகிறார். எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். தயாரிப்பு துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ரசிகர்களை திருப்திபடுத்தும் கதையை தேர்வு செய்துள்ளார். குழந்தைகளுடன் பார்க்க கூடிய படமாக குடும்பங்களை தியேட்டர்களுக்கு மீண்டும் வரவழைக்கும் படமாக இருக்கும்.

    இடையில் உங்களை பார்க்க முடியவில்லையே?

    எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன். பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள். அப்படியே கிராமத்து பெண் கேரக்டராக இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை. தமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்லா நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க. இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதற்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.



    தமிழ் சினிமா இப்போது எப்படி இருக்கிறது?

    இப்போது தமிழ் சினிமாவின் கலரே மாறி வருகிறது... ஆலிவுட் படத்துறை மாதிரி மாறிவருகிறது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட வரிசையில் சேர்ந்துவிட்டது. மிக மிக அவசரம், டு லெட், எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம் தான். புதிய இயக்குனர்கள் நல்ல கதைகளோடு வந்தால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன். #Vasundara #KanneKalaimaane

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.15 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #KalyaniPriyadharsan
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

    அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி தமிழில் அறிமுகமாகிறார் என்று படக்குழு நேற்று அறிவித்தது.


    கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் `ரா' கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் `வான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan

    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்றுள்ள நிலையில், கன்னடத்தில் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் வருகிற மார்ச் 1-ல் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Nayanthara

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

    இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். யு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் சூப்பர் டீலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadhFaasil

    சிம்புவுடன் நடித்த நடிகை அதா சர்மா, தன்னைப் பற்றி வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் அளித்துள்ளார். #Simbu #STR #AdahSharma
    சிம்பு நடித்த, ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்த அதா சர்மா, சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படமொன்றில் அதா சர்மா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட உள்ளதாக தகவல் வெளியானது. முதலில் இந்த தகவலை கண்டுகொள்ளாத அதா சர்மா அதிக சம்பளத்துக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுவதாக அடுத்தடுத்து செய்திகள் வந்ததால் பதில் அளித்துள்ளார்.

    ‘ரசிகர்களே, என்னைப் பற்றி வரும் தகவலில் உண்மை இல்லை. நம்பாதீங்க. இதுபோன்ற தவறான தகவல்களை நான் கண்டுகொள்வதில்லை. அது தன்னால் அடங்கிவிடும் என்று விட்டுவிடுவேன்.



    ஆனால் தற்போது தொடர்ச்சியாக இதுபற்றி எனக்கு செய்தி வந்துகொண்டே இருப்பதால் அதற்கு விளக்கம் அளிக்க எண்ணினேன். தற்போது எந்த ஒரு படத்திற்கும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடவில்லை. அதிக சம்பளமும் பெறவில்லை. அதுபோல் உண்மையில் நடந்தால் நானே எனது அதிகாரபூர்வ வலை பக்கத்தில் பகிர்வேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
    விஜய் கொடுத்த அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று நடிகர் ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Jai #Vijay #ThalapathyVijay
    பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துதான் ஜெய் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வாமனன், சுப்ரமணியபுரம், ராஜா ராணி என முன்னணி கதாநாயகனாகி விட்டார்.

    தற்போது ‘நீயா 2’, ‘கறுப்பர் நகரம்‘, ‘பார்ட்டி’, ‘மதுர ராஜா’ உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கும் ஜெய், தான் கதாநாயகனாக மாற விஜய் கூறிய அறிவுரை தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

    `பகவதி’ படத்துக்குப் பிறகு விஜய் சார்கிட்ட அடிக்கடி வாய்ப்பு கேட்டுக்கிட்டு இருந்தப்போ, `இப்படி துணை கதாபாத்திரங்கள் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னை கடைசிவரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க’ன்னு சொன்னார்.



    அதனால் தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினேன். இப்போதும் ஒரேமாதிரியான கேரக்டர்ல நடிக்கிறபோது, விஜய் சார் சொன்னதுதான் நினைவுக்கு வரும்.” என்று கூறி இருக்கிறார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. #Thalapathy63 #Vijay #Thalapathy63 #Nayanthara
    மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி இணைந்திருக்கிறது. ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

    அடுத்த படியாக விஜய் - நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினருடன் மார்ச் இரண்டாவது வாரத்தில் நயன்தாரா இணைய இருக்கிறார். 



    இப்படத்தில் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் சூப்பர் சிங்கர் ஜூனியரில் புகழ் கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பொன் மாணிக்கவேல் படக்குழுவினர் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். #PrabhuDeva #PonManickavel
    சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.

    இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 



    இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Prabhudeva #PonManickavel 
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் வடசென்னை பிரபலம் இணைந்திருக்கிறார். #Asuran #Dhanush #VetriMaaran
    `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

    மேலும் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் ‘அசுரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். #Asuran #Dhanush #VetriMaaran
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒருவர் இணைந்திருக்கிறார். #Thalpathy63 #Vijay #ThalapathyVijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் இணைந்திருக்கிறார். இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு கானா பாடல் பாடும் வாய்ப்பும் கபீஸ் பூவையாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.



    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    என் மீது நடிகை அதிதி மேனன் கூறும் புகாரை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகர் அபி சரவணன் கூறியிருக்கிறார். #AbiSaravanan #AditiMenon
    நடிகர் அபிசரவணன், போலி திருமண சான்றிதழ்களை வைத்து தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதற்கு பதில் அளித்து அபிசரவணன் கூறியதாவது:-

    “நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மை. 2016 ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். நான் வெளியூர் சென்றபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை அள்ளிக்கொண்டு என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதிதி மேனனை என்னுடன் சேர்த்து வைக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

    திருமணம் நடக்கவில்லை என்றும், போலி பதிவு திருமண சான்றிதழ் வைத்து நான் மிரட்டுவதாகவும் அவர் கூறுவதில் உண்மை இல்லை. திருமணம் ஆனதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சமூக சேவைக்காக திரட்டிய பணத்தை வைத்து வீடு, கார்கள் வாங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.



    கடன் வாங்கித்தான் வீடு, கார்களை வாங்கி உள்ளேன். அதிதி மேனன் ஏற்கனவே கேரளாவில் இருந்தபோது பலர் மீது புகார் கூறியுள்ளார். ஒரு டைரக்டர் மீதும் குற்றச்சாட்டு சொன்னார். அதிதி மேனனுடன் சமரசம் செய்து வைப்பதாக சிலர் காரில் அழைத்து சென்று வழக்கை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டினார்கள். அவரை எனது மனைவியாக ஏற்க இப்போதும் தயாராக இருக்கிறேன். புகாரை சட்டப்படி சந்திப்பேன்”

    இவ்வாறு அபிசரவணன் கூறினார்.
    தமிழில் ஜெயம் படத்திலும், தெலுங்கில் பல படங்களில் நடித்தவருமான கோபிசந்த், தற்போது நடித்துவரும் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறார். #GopiChand
    தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முக்கிய காட்சிகளை ஜெய்ப்பூர் அருகே உள்ள மண்ட்வாவில் படமாக்கி வந்தனர்.

    கோபிசந்த் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வில்லன்களுடன் மோதுவதுபோல் காட்சியை எடுத்தனர். இதை 3 கேமராக்கள் வைத்து படமாக்கி கொண்டு இருந்தார்கள். அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற கோபிசந்த் திடீரென்று பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தார்.



    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோபிசந்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
    ×