என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா.
தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.
"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.
இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.
தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:
"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.
அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).
எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.
1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)
அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.
அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.
பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.
நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.
பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.
இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.
அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.
என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.
இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.
அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.

காளை, பரதேசி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை வேதிகா, விருது வழங்கும் விழாவில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். #Vedhika
காளை, பரதேசி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை வேதிகா. தற்போது காஞ்சனா 3-ம் பாகத்தில் நடித்து வருகிறார். மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார். இந்த ஆண்டில் 5 படங்களில் நடித்து வருகிறார் வேதிகா. சமீபத்தில் திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றிற்கு வந்தார் வேதிகா. அவரை கண்டதும் ரசிகர்களும், நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். கண்ணாடிபோன்ற மெல்லிய ஆடை அணிந்திருந்த அவர் உள்ளுக்குள் ஆடை அணியாததுபோல் அவரது தோற்றம் இருந்ததே அதிர்ச்சிக்கு காரணம்.

நிகழ்ச்சி நடந்தபோதே அவரது ஆடை விவகாரம் முணுமுணுப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னர் தனது புதுவகை காஸ்டியுமுடன் தன் படத்தை நெட்டில் வெளியிட்டார்.
துருவ் விக்ரம் நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. #DhruvVikram #Varma #ArjunReddy
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு டைரக்டரின் இயக்கத்தில் திரும்ப எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். கதாநாயகன் துருவ்வை தவிர, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறினார்.

தற்போது இப்படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று தலைப்பு வைத்து படக்குழுவினர் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகிகளாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். கிரிசாயா இப்படத்தை இயக்குகிறார். ரவி கே சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இ4 நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பொன் மாணிக்கவேல் படக்குழுவினர் நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார்கள். #PrabhuDeva #PonManickavel
சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.
இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Prabhudeva #PonManickavel
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, தன்னுடன் நடித்த நடிகர் பற்றி கூறியிருக்கிறார். #Regina #ReginaCassandra
சதுரங்க வேட்டை -2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார்.
இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத்துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார்.
கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்? என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார். #KarthikSubbaraj
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் தங்களுக்கென ஒரு இமேஜ் வளர்த்திருக்கின்றனர். அவர்களை இயக்கும் இயக்குனர்களும் அந்தந்த ஹீரோக்களுக்கு ஏற்பவே கதை தயார் செய்கின்றனர்.
விஜய்சேதுபதி நடித்த பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார்.

பொங்கலையொட்டி வெளியான இந்த படம் ஹிட்டானது. இந்நிலையில் கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, ‘என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்?’ என்றதற்கு பதில் அளித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’கமலை வைத்து வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தை இயக்குவேன். விஜய்யை வைத்து கேங்க்ஸ்டர் படமும், அஜித்தை வைத்து காமெடி படமும் இயக்குவேன்’ என்றார். கார்த்திக் சுப்புராஜின் இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான் என்று புகழ்ந்தார். #Agavan #RaghavaLawrence #AgavanAudioTrailerLaunch
புதுமுக இயக்குநர் ஏழுமலை இயக்கி உள்ள திரைப்படம் `அகவன்’. இதன் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ரஜினியின் ஆரம்ப காலம் முதல் ரசிகராய் இருப்பவர். ஆன்மிகத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாக்யராஜ், யுகபாரதி, ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், மதுரை அன்பு செழியன், பிக்பாஸ் பரணி, எங்கேயும் எப்போதும் சரவணன், நோபல், கராத்தே தியாகராஜன், ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ரஜினி மன்ற விழாபோல் நடந்த இந்த விழாவில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் இறுதியாகப் பேசிய ராகவா லாரன்ஸ், ’ உலகத்திலேயே எனக்கு பிடித்தமான நபர் எனது தாய். என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று சொல்வார். அதேமாதிரி ரவிச்சந்திரன் ஜெயித்து காட்டியிருக்கிறார். சூப்பர்ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். `அவர் துரோகம் பண்ணிட்டார்’ன்னு யாரும் சொல்லவும் முடியாது. யாரையும் தப்பா பேசமாட்டார், அவரை நிறைய பேர் திட்டும்போதுகூட அவரிடம் நான் அதைப் பத்திக்கேட்டா ``தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துப்பார்’னு சொல்லிடுவார். எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான்’ என பேசினார்.
தொடர்ந்து, தாயின் மகத்துவத்தைப் பற்றிப் பேசிய லாரன்ஸ் அவரது உரையின் முடிவில் தண்ணீர் கேட்டார். அதைத் தயாரிப்பாளர் தர வாங்கிக் குடித்தவுடன், ``தண்ணீர் கேட்க காரணம் இருந்தது. என் ஓட்டு உங்களுக்குத்தான்” எனக் கூறினார் லாரன்ஸ். தண்ணீர் தந்தது ரஜினியின் கட்சி போல் பாவித்து ரஜினிக்குத்தான் என் ஓட்டு என்று சூசகமாகக் கூறினார். #Agavan #RaghavaLawrence #AgavanAudioTrailerLaunch
கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `எல்கேஜி' படத்தின் முன்னோட்டம். #LKG #RJBalaji #PriyaAnand
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `எல்கேஜி'.
ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - விது அய்யணா, படத்தொகுப்பு - அந்தோணி, கலை இயக்குனர் - டி.பாலசுப்ரமணியன், சண்டைப்பயிற்சி - சில்வா, பாடல்கள் - பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி சிங், திவ்யா நாகராஜன், தயாரிப்பு நிர்வாகம் - கே.எஸ்.மயில்வாகனம், ஒலி வடிவமைப்பாளர் - டி.உதயகுமார், தயாரிப்பாளர் - டாக்டர் ஐசரி கே.கணேஷ், எழுத்து - ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நண்பர்கள், இயக்கம் - கே.ஆர்.பிரபு

படம் பற்றி பிரியா ஆனந்த் பேசும் போது,
இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.
பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் என்றார்.
எல்கேஜி வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
எல்கேஜி டிரைலர்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய், அஜித் இருவருமே நட்புடன் பழகி வரும் நிலையில், விஜய்யின் நடனத்தை பார்த்த அஜித் புகழ்ந்துள்ளார். #AjithKumar #Vijay
விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் திரைத் துறையில் பெரியவர் என்று ஒருபுறம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் நட்புடன்தான் இருக்கிறார்கள்.
இதுகுறித்து நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர்.

‘விஸ்வாசம்‘ படப்பிடிப்பின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு பாராட்டிக் கொள்கிறார்கள்’’ என்றார். #AjithKumar #Vijay #ThalaAjith #ThalapathyVijay #RameshThilak
ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிய இயக்குநர் அமீர், தற்போது சினிமாவின் மீது ஆர்வம் குறைந்துள்ளதாகவும், மண் சார்ந்து படங்களை எடுக்க முயற்சி செய்வதாக கூறினார். #Ameer
மதுரை அமெரிக்கன் கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பாக கலை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதை இயக்குனர் அமீர் தொடங்கி வைத்தார்.
‘நான் சினிமாவை வெளியில் இருந்து பார்த்ததற்கும், சினிமா துறைக்கு வந்த பிறகு பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதேபோல் தான் எல்லா துறைகளிலும் இது போன்ற அனுபவம் கிடைக்கும்.
நமக்கான அடையாளங்களையும், திறமைகளையும் அறிந்து நாம் தான் செயல்பட வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை யாரும் இயக்க மாட்டார்கள், நாம் தான் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
தற்போது சினிமாவின் மீது ஆர்வம் குறைவாக உள்ளதாக எண்ணுகிறேன். எனவே, அதை போக்க மண் சார்ந்து மக்கள் சார்ந்து அதிக படங்களை எடுக்க முயற்சி செய்வேன்.

ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி நான் விரும்பி சற்று வேறு மாதிரி எடுக்க வேண்டும் என எடுத்த படம் தான் ராம். அது 2 சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது.
மதுரையில் அன்பும் பாசமும் அதிகளவு கொட்டிக்கிடக்கிறது.
கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு சுதந்திரமான வாழ்க்கை. அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அரசியல் கூட பேசி தெரிந்து கொள்ள வேண்டும். பிறரின் பிரச்னைகளை உணர வேண்டும்”.
இவ்வாறு அவர் பேசினார். #Ameer
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ரோபோ சங்கர், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFJawans
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதில் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்தனர்.
இவர்களது குடும்பங்களுக்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.
குண்டுவெடிப்பில் இறந்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் ‘ரோபோ’ சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நான் சினிமாக்காரன். என்னிடம் சினிமா சார்ந்த விஷயங்களை இந்த இடத்தில் எதுவும் கேட்க வேண்டாம். நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.
’இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறோம் என்றால் அதற்கு இவர்களைப் போன்ற எல்லைசாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.

இக்குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே தெரியவில்லை. சிவசந்திரனால் மட்டுமே இந்த குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் பிரிவு என்பது ஈடுசெய்ய முடியாதது. இந்தக் குடும்பத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை வழங்க எண்ணினேன்.
அவரது தாயாரிடம் பேசும்போது என் மகன் நாட்டுக்காக உயிரை விட்டுள்ளார். அது எனக்கு பெருமைதான் என அவர் தாய் கூறும்போது பெருமையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #CRPFJawans #RoboShankar
துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கும் நிலையில், சுமார் 7 வருடங்களுக்கு பிறகு பிரபலம் ஒருவர் இந்த படத்தில் மீண்டும் இணையவிருக்கிறார். #Varma #DhruvVikram
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.
வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.
Not only For my dear friends #Kenny and @e4echennai but for young & super talented #DhruvVikram .. incidentally my son @dop_santha currently shooting #KabirSingh the Hindi remake of #ArjunReddy ..🙏 https://t.co/SLVVdq2yuG
— ravi k. chandran (@dop007) February 19, 2019
இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் வர்மா படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 7ஆம் அறிவு படத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்களுக்கு பிறகு, ரவி கே.சந்திரன் ஒபப்பந்தமாக தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Varma #DhruvVikram #BanitaSandhu #Girisayya #RaviKChandran