என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகும் அறிவியல் சார்ந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தில் பிசியாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது எஸ்.கே.14 படக்குழுவில் மீண்டும் இணைந்திருக்கிறார்.

    ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ரவிக்குமார், ரகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    சிவகார்த்திகேயன் இதில் விவசாயியாக நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.


    ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh

    இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. #ImsaiArasan
    வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார்.

    இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. 

    இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.



    இதைத்தொடர்ந்து படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை. இதனால் படக்குழுவினர் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.

    யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 10 படங்களில் நடித்து இருந்தார். தற்போது தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனாலும் யோகிபாபு நடிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வடிவேலுவை மீண்டும் நடிக்க வைப்பதில் படக்குழுவினர் உறுதியாக இருப்பதாகவும், அது நடக்கவில்லை என்றால் யோகிபாபு நடிப்பது பற்றி சிந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. #ImsaiArasan #IA24P #Vadivelu #YogiBabu
     
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.

    சிவகுமாரின் முதல் படம் 1965-ல் வெளிவந்தது. அவருடைய கலை உலகப்பயணம் தொடங்கி, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்கள் மகன் சூர்யா, இப்போது முன்னணி நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிகர் ஆவார் என்று நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தீர்களா?

    பதில்:- சூர்யா நடிகனான அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்'' படித்தவன் அவன். காலையில் கல்லூரி சென்றால் மாலை வரை அவன் வகுப்பில் நாலு வார்த்தை பேசினால் பெரிய விஷயம். மவுனமாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் சுபாவமுள்ளவன்.

    சென்னையில் பிறந்து 22 வருடம் வளர்ந்த ஒரு நடிகனின் மகன், இங்குள்ள எந்த ஸ்டூடியோவிலும் அப்பாவின் ஷூட்டிங்கை பார்த்ததே இல்லை. விளையாட்டாகக் கூட அவனை ஒரு சினிமா ஹீரோவாக நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னமும் அவனை திரை உலகுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு இனிய விபத்து. `வீடியோ டெஸ்ட்' என்று அவனை அழைத்துப் போனார்கள். நான் மணிரத்னத்திற்குப் போன் செய்தேன். "சார்! அவனுக்குச் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாது. அப்படி அவனை நாங்கள் வளர்க்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்து நீங்கள் `டெஸ்ட்' செய்து ஏமாந்து விடக்கூடாது.

    `கார்மென்ட் எக்ஸ்போர்ட்' (ஆடை ஏற்றுமதி) கம்பெனியில் இப்போது பயிற்சி பெறுகிறான். நாளைக்குச் சொந்தமாக அவன் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது எங்காவது வேலை பார்த்து மாதம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.

    "நீங்கள் `டெஸ்ட்' செய்து ஒதுக்கிவிட்டால், அது அவன் எதிர்கால வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கும். இப்போதுகூட `லேட்' இல்லை. அவனை அனுப்பி விடுங்கள்'' என்றேன்.

    `அவர் மீது 200 சதவீதம் நமëபிக்கை இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரைப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார், மணிரத்னம்.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னம் அவர்களும் "நேருக்கு நேர்'' படத்தில், `சூர்யா' என்று பெயரிட்டு அவனை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலைஞர்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்.

    அமெரிக்காவில் 3 ஆண்டு "இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்'' படித்து எம்.எஸ். பட்டம் பெற்று இந்தியா வந்த என் இளைய மகன் கார்த்திக், ஒராண்டுக்கும் மேலாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றான். தற்போது `பருத்தி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான்.

    கேள்வி:- காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதை நீங்கள் விரும்பவில்லை. தாயாரும், குடும்பத்தினரும் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகன் சூர்யா, காதல் திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?

    பதில்:- தூய காதலுக்கு நான் எதிரி அல்ல. தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மணக்கமாட்டேன் என்ற கொள்கையில் சூர்யா உறுதியாக இருந்தால், அவர் விரும்பியபடி திருமணம் செய்ய அனுமதிப்பேன்.

    கேள்வி:- நீங்கள் நடித்த சினிமாப்படங்களில் முதன் முதலாக உங்கள் தாயார் பார்த்த படம் எது? பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்?

    பதில்:- கந்தன் கருணை. "முருகனையே நினைத்து வாழ்ந்து, பழனி மலைக்கு கிருத்திகை தவறாமல் போய், திருப்புகழ் - மொத்த பாட்டையும் பாடி, சாமி கும்பிட்டவரு உங்கப்பா. ஒரு கிருத்திகை அன்னிக்கு பழனிலே பாடும்போதே நாவு விழுந்து போச்சு! வந்து பத்து நாள்ளே இறந்துட்டாரு.' அவரு செஞ்ச பிரார்த்தனை, உனக்கு அந்த முருகன் வேஷம் கிடைச்சிருக்கு'' என்றார், என் தாயார்.

    கேள்வி:- 193 படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்கள் எவை?

    பதில்:- கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன், புதுவெள்ளம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், சிந்துபைரவி.

    கேள்வி:- நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனைவிக்குப் பிடித்தமான படம் எது?

    பதில்:- ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி.

    இவ்வாறு பதிலளித்தார், சிவகுமார்.

    193 திரைப்படங்களில் நடித்து விட்ட சிவகுமாரின் கலைப்பயணம், இப்போது சின்னத்திரையில் தொடருகிறது.

    "சித்தி'', "அண்ணாமலை'', "அபிராமி'' உள்பட ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்.

    சின்னத்திரைக்கு போனது பற்றி அவர் கூறியதாவது:-

    "ஓவியக் கலைஞனாக வாழ்க்கையைத் தொடர நினைத்த என்னை `சிவகுமார்' ஆக்கி, உலகளாவிய தமிழ் மக்கள் அறிந்திடச் செய்தது, திரை உலகம்தான். இன்றைய புகழ், பொருள், வாழ்வு எல்லாம் திரை உலகம் இட்ட பிச்சை.

    ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கி, நூற்றி இருபது படங்களை முடிக்கும் காலங்கள் வரை கூட நான் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டவில்லை. தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி அதிகம் கேட்டதில்லை. காரணம், திரை உலகம் என்னைக் கைவிடாது என்ற அசாத்திய நம்பிக்கை.

    இரண்டரை மணி நேர சினிமா ஏற்படுத்துகிற தாக்கத்தை 25 வார டெலிவிஷன் தொடரில் ஏற்படுத்த முடியாது. காரணம் தொடர்ச்சி விட்டுப் போவதுதான்.

    மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படைப்பாளி திறமைசாலியாகவும், டெலிவிஷன் மீடியத்தை திறம்படக் கையாளத் தெரிந்தவராகவும் இருந்தால் பெயர் பெறமுடியும் என்பதற்கு கே.பாலசந்தர் உருவாக்கிய `ரயில் சிநேகம்', `கையளவு மனசு', `காதல் பகடை' தொடர்கள் சாட்சி.

    1990களில் "நீதிமான்'' தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்தபோது, "என்ன சார்! இத்தனை வருஷமா சினிமாவிலே ஹீரோவா நடிச்சிட்டு `டிவி'க்கு வந்திட்டீங்களே!'' என்று சில துணை நடிகர்கள் கேட்டனர். நான் சொல்லும் சமாதானம் அவர்களை திருப்திபடுத்தாது என்பதை உணர்ந்து, மவுனப் புன்னகை செய்தேன்.

    1999-ல் `சித்தி' தொடர் உருவாக ஆரம்பித்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் `சித்தி' தொடரை பார்த்ததாக புள்ளி விவரங்கள் கூறின.

    "அண்ணாமலை'', உலகின் பெரிய நாடுகளில் எல்லாம் ஒளிபரப்பு ஆயிற்று.

    உலகில் எல்லாத் துறைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழும். அந்த மாறுதல்கள், திரை உலகிலும் நிகழும். கதாசிரியன், சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, பேனா முனை மதிப்பு பெறும் காலம் விரைவில் வரும். அப்போது அர்த்தமுள்ள கதைகள், ஆழமான கருத்துக்கள் மீண்டும் திரை மூலம் உயிர் பெறும். அதுவரை சின்னத்திரையில் தற்காலிகமாக பவனி வருவேன்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சிவகுமார் - லட்சுமி தம்பதிகளுக்கு சூர்யா, கார்த்திக் தவிர, ஒரே மகள் பிருந்தா.

    பிருந்தா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து "பி.ஏ'' பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயரும் சிவகுமார்தான். இவர் "பி.ஈ'',"எம்.பி.ஏ'' பட்டங்கள் பெற்றவர். சென்னையில், "கிரானைடு''களை வெட்டப் பயன்படும் "டயமண்ட் டூல்ஸ்'' கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.

    சிவகுமார் பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.


    'மாயவன்’ படத்தை தொடர்ந்து சிவி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #CVKumar
    அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என படங்களை தயாரித்தார். 

    தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.



    இப்படத்தை அடுத்து ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’  என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பிப்ரவரி 20ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
    தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். #Tamannaah #KanneKalaimaane
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி:

    கண்ணே கலைமானே படம் பற்றி?

    இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் சப்டைட்டில் இல்லாமலேயே இந்த படத்தை புரிந்துகொள்வார்கள்.

    உதயநிதி?

    அவரை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். எது நடந்தாலும் பார்ப்பதற்கு அப்பாவியாகவே தெரிவார்.



    இந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த பாராட்டு?

    ஒரு காட்சியில் சிறப்பாக நடித்ததற்காக இயக்குனர் அல்வா கொடுத்தார். அந்த திருநெல்வேலி அல்வா எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு அதுவே மிகப்பெரிய பரிசு. அல்வா என்றதும் வேறு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். பாராட்டும்போது இனிப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக கொடுத்தது. சீனு சார் படத்தில் நடிக்கும்போது தான் ஒரு சாதாரண குடும்ப பெண்ணுக்கு இருக்கும் பலங்கள் புரிகிறது. தர்மதுரையிலேயே அதை உணர்ந்தேன். ஆனால் பாரதி மிகவும் வித்தியாசமானவள்.

    கவர்ச்சி இல்லாமல் நடிக்கும் அனுபவம்?

    இதிலும் கவர்ச்சி இருக்கிறது. கவர்ச்சி என்றால் எல்லோரும் நினைப்பது போன்ற உடல் கவர்ச்சி அல்ல. முகத்தில் தெரியும் நடிப்பு உணர்ச்சியே கவர்ச்சி. அதிகமான குளோஸ் அப் காட்சிகள் இருக்கின்றன. எனது வேடம் மிகவும் இயல்பாக இருக்கும்.

    தமிழ் நன்றாக பேசுகிறீர்களே?

    நான் தமிழ் பெண் தானே...

    அப்போ தமிழ் பையனை திருமணம் செய்துகொள்வீர்களா?

    நிச்சயமாக. சீனு சாரிடம் பார்க்க சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறேன்.
    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் அருண் பாண்டியனின் மகள், புதிய படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். #ArunPandian #Keerthi
    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி, கனா புகழ் தர்ஷன் நடிக்கும் பேண்டஸி படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். 

    இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, "பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை" என்கிறார்.

    மேலும், "நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்" என்றார். 



    இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியனுடன் விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார். 
    திருமணம் செய்ததாக மிரட்டும் நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். #Aditimenon #AbiSaravanan
    கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

    இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, நானும், அபி சரவணனும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இருவருக்கும் காதல் உண்டானது, அபி சரவணனின் செயல்பாடுகள் சரி இல்லாததால் அவரை விட்டு சில மாதங்களில் பிரிந்தேன்.



    தற்போது தன்னை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தன் மீது பொய் புகார்களை அபிசரவணன் பரப்பி வருகிறார். நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்து மிரட்டி வருகிறார்.

    அபி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்’ என்றார். 
    சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகும் நிலையில், அவருடைய தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் படங்களில் பிசியாக நடித்தாலும், கனா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார்.

    இதில் ரியோவுடன் ஆர்ஜே விக்னேஷ், நாஞ்சில் சம்பத், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    மேலும் பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணிகள் புகைப்படங்களையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். 
    சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Airaa #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



    லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தை மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #Airaa #Nayanthara 
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #Samantha
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

    உச்சத்தில் இருக்கும்போதே தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின் தொடர்வோரின் எண்ணிக்கை சமீபத்தில் 60 லட்சத்தை தொட்டுவிட்டது. இதனை முன்னிட்டு அதீத கவர்ச்சியில் இருக்கும் புதிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். திருமணத்துக்கு பின்னரும் சமந்தா கவர்ச்சி படங்களை தொடர்ச்சியாக பகிர்வதால் ரசிகர்கள் தொடர்ந்து அதிகரிக்கிறார்கள்.
    பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எல்.கே.ஜி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசியல் வசனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பிரியா ஆனந்த் கூறினார். #LKG #RJBalaji #PriyaAnand
    பிரபு இயக்கி உள்ள ‘எல்.கே.ஜி’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார் கணேசன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி ஆர்.ஜே.பாலாஜி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்.

    இந்த படத்தின் போஸ்டர்கள், டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் பிப்ரவரி 22-ந் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த ‘எல்.கே.ஜி’ திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய பிரியா ஆனந்த் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டார்.



    அப்போது பேசிய அவர், இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.

    பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்’ என தெரிவித்தார். #LKG #RJBalaji #PriyaAnand

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்ந்து தள்ளிப்போவதால், ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளார். #MeghaAkash
    `ஒரு பக்க கதை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தனுசுடன் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார். அந்த படமும் தள்ளிப்போனது.

    இதனால் கவலையோடு இருந்த மேகா ஆகாசுக்கு `பேட்ட', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படங்கள் ரிலீசாகி ஆறுதல் கொடுத்தது. இதை பற்றி கூறும்போது ‘இந்த ஆண்டு தொடக்கத்திலேயே என்னோட படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு.



    ஆனா, அதையும் தாண்டி ஒரு வருத்தமும் இருக்கு. அது என்னோட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்னும் ரிலீசாகமல் இருக்கிறது தான். இந்தப் படத்துல ரொம்ப அழகாக நடிச்சிருப்பேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிடும்னு நினைச்சு ஏமாந்து போகிறேன்’’ என்று கூறி உள்ளார். #MeghaAkash #ENPT #EnaiNokkiPaayumThotta

    ×