என் மலர்

  சினிமா

  எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை - பிரியா ஆனந்த்
  X

  எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை - பிரியா ஆனந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எல்.கே.ஜி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசியல் வசனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பிரியா ஆனந்த் கூறினார். #LKG #RJBalaji #PriyaAnand
  பிரபு இயக்கி உள்ள ‘எல்.கே.ஜி’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார் கணேசன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி ஆர்.ஜே.பாலாஜி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்.

  இந்த படத்தின் போஸ்டர்கள், டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் பிப்ரவரி 22-ந் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த ‘எல்.கே.ஜி’ திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய பிரியா ஆனந்த் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர், இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.

  பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்’ என தெரிவித்தார். #LKG #RJBalaji #PriyaAnand

  Next Story
  ×