என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agavan"

    ஏ.பி.ஜி.ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன் - நித்யா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `அகவன்' படத்தின் விமர்சனம். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty
    தமிழகத்தின் புராதன கோவில்களில் உள்ள பொக்கிஷங்களை மர்ம கும்பல் திருடப்போவதாக வரும் தகவலை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரியான சரண் ராஜ் தமிழகத்தில் உள்ள சில முக்கிய கோவில்களுக்கு ரகசிய போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்கிறார். அதன்படி போலீஸ்காரரான நாயகன் கிஷோர் ரவிச்சந்திரன் அங்குள்ள சிவன் கோவிலுக்கு காவலாளியாக வருகிறார். 

    தம்பி ராமையாவுடன் இணைந்து கோவிலை காவல் காக்கும் போது, அங்கு சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. இதுகுறித்து கிஷோர் ரகசியமாக கண்காணித்து வருகிறார். அங்குள்ளவர்கள் கிஷோரின் பின்புலம் தெரியாமல் அவருடன் சகஜமாக பழகி வருகிறார்கள்.



    அதே நேரத்தில் அந்த கோவிலுக்கு அருகே பூ கடை வைத்திருக்கும் அக்கா, தங்கையான நாயகிகள் சிராஸ்ரீ அஞ்சன், நித்யா ஷெட்டி இருவருமே கிஷோரை காதலிக்கிறார்கள். 

    கடைசியில், கோவிலில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கான காரணம் என்ன? கோவில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முயற்சித்தவர்கள் யார்? அக்கா, தங்கை இருவரில் நாயகனுடன் இணைந்தது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ரகசிய போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் ரவிச்சந்திரன் எல்லா காட்சியிலுமே ஒரே மாதிரியான பாவத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் வளர வேண்டும். தங்கையாக நடித்திருக்கும் நித்யா ஷெட்டி காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறும்புத்தனமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். திருவிழா பாடலில் நடனமாடி கவர்கிறார். அக்காவாக வரும் சிராஸ்ரீ அஞ்சன் கொடுத்த வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். தம்பி ராமையா தனது வழக்கமான பேச்சால் குறிப்பிட்ட இடங்களில் நகையை உண்டுபண்ணுகிறார்.

    சரண் ராஜ், சினி ஜெயந்த், ஹோலோ கந்தசாமி என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    நமது முன்னோர் கட்டிய புராதன கோவில்கள், அதன் பெருமைகள், அதனுள் இருக்கும் பொக்கிஷங்கள் என கோவில்களை மையப்படுத்தியே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை. படத்தின் திரைக்கதையின் நீளமும், அதன் போக்கும் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும், கோவில்களின் பெருமையை கூறியிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.

    சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு பக்கபலம்.

    மொத்தத்தில் `அகவன்' உள்ளிருப்பவன். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty

    அகவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான் என்று புகழ்ந்தார். #Agavan #RaghavaLawrence #AgavanAudioTrailerLaunch
    புதுமுக இயக்குநர் ஏழுமலை இயக்கி உள்ள திரைப்படம் `அகவன்’. இதன் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ரஜினியின் ஆரம்ப காலம் முதல் ரசிகராய் இருப்பவர். ஆன்மிகத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது.

    இந்த விழாவில் பாக்யராஜ், யுகபாரதி, ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், மதுரை அன்பு செழியன், பிக்பாஸ் பரணி, எங்கேயும் எப்போதும் சரவணன், நோபல், கராத்தே தியாகராஜன், ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ரஜினி மன்ற விழாபோல் நடந்த இந்த விழாவில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசப்பட்டது.


    நிகழ்ச்சியில் இறுதியாகப் பேசிய ராகவா லாரன்ஸ், ’ உலகத்திலேயே எனக்கு பிடித்தமான நபர் எனது தாய். என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று சொல்வார். அதேமாதிரி ரவிச்சந்திரன் ஜெயித்து காட்டியிருக்கிறார். சூப்பர்ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். `அவர் துரோகம் பண்ணிட்டார்’ன்னு யாரும் சொல்லவும் முடியாது. யாரையும் தப்பா பேசமாட்டார், அவரை நிறைய பேர் திட்டும்போதுகூட அவரிடம் நான் அதைப் பத்திக்கேட்டா ``தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துப்பார்’னு சொல்லிடுவார். எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான்’ என பேசினார்.

    தொடர்ந்து, தாயின் மகத்துவத்தைப் பற்றிப் பேசிய லாரன்ஸ் அவரது உரையின் முடிவில் தண்ணீர் கேட்டார். அதைத் தயாரிப்பாளர் தர வாங்கிக் குடித்தவுடன், ``தண்ணீர் கேட்க காரணம் இருந்தது. என் ஓட்டு உங்களுக்குத்தான்” எனக் கூறினார் லாரன்ஸ். தண்ணீர் தந்தது ரஜினியின் கட்சி போல் பாவித்து ரஜினிக்குத்தான் என் ஓட்டு என்று சூசகமாகக் கூறினார். #Agavan #RaghavaLawrence #AgavanAudioTrailerLaunch

    ×