என் மலர்
சினிமா செய்திகள்
- MY LORD படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- MY LORD படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பு மக்களும், திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர்.
இதனை தொடர்ந்து சசிகுமார் தற்போது "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 'மை லார்ட்' படத்தின் முதல் பாடலான 'எச காத்தா' பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.
- திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
- அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரெட்ட தல' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார்.
'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ரெட்ட தல' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அருண் விஜய் ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
15 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் திரைத்துறையில் அறிமுகமாகினர்.
மீண்டும் 15 வருடங்கள் கழித்து தற்போது நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இணைந்து சர்வம் மாயா என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இது இவர்கள் இணைந்து நடிக்கும் 10-வது திரைப்படமாகும். இப்படத்தின் போஸ்டரை படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் இருவரும் சிரித்துக் கொண்டு இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இப்படத்தை பஞ்சுவம் அதுபுத விளக்கும் படத்தை இயக்கிய அகில் சத்யன் இயக்குகிறார். ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இது மியூசிகள் ரொமாண்டிக் டிராமாவாக உருவாகி இருக்கிறதுது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 'சர்வம் மாயா' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர்.
- சுற்றுலா சென்ற புகைப்படங்களை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இதையடுத்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' படத்தில் நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள ராமாயனா படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது கடற்கரையில் இருவரும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவின.
இந்நிலையில், அண்மையில் சுற்றுலா சென்ற புகைப்படங்களை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7வது திரைப்படத்தின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
‛மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்', 'இறுகப்பற்று', 'பிளாக்' என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
தேவதர்ஷினி, ‛நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மேலும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குநர் திரவியம்.எஸ்.என் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை திரவியமுடன் இணைந்து பிரவீன் பாஸ்கர், ஸ்ரீ குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஆரல் ஏ.தங்கம் படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பாளராக மாயபாண்டி பணியாற்றுகிறார். ஆடை வடிவமைப்பாளராக இனஸ் ஃபர்ஹான் மற்றும் ஷேர் அலி பணியாற்றுகிறார்கள்.
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்கபிரபாகரன்.ஆர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமாக விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் "சாவு வீடு".
புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது.
இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்," ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன். கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

- மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.
- தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.
மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் தனுஷ் மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கிறேன். நான் அண்மையில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தேன். அதில் ஷ்ரேயாஸ் என்பவற்றின் பெயரை பயன்படுத்தி ஒருவர் எனக்கு போன் செய்திருந்தார் என்று கூறினேன். அதாவது தனுஷ் சார் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூறியுள்ளேன். விழிப்புணர்வுக்காக நான் கூறியதை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று நேற்று நான் பதிவிட்டிருந்தேன். என்னுடைய பெயரை பயன்படுத்தி தனுஷ் சார் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இது மிகவும் தவறு. ஆகவே பொய்யான தகவலை பரப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில்," நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும்" என்றார்.
- அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.
- இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில், நடிகர் அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ரெட்ட தல' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
- பிரேம்ஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்லீப்பர்செல் மூலம் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள் போல் தமிழகத்திலும் நடத்த தீவிரவாதக்குழு திட்டமிடுகிறது. இந்த திட்டத்தின் மூளையாக செயல்படும் நாயகன் ஆதவா ஈஸ்வரா, கோவையில் வசிக்கிறார்.
அப்போது அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். தனது ரகசியங்கள் மனைவிக்கு தெரிய கூடாது, என்பதால் அவருக்கு முன்னதாக வீட்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு ஆணும், பெண்னும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
இறுதியில் அந்த ஆணும், பெண்ணும் யார்? வீட்டுக்கு வர வேண்டிய அவரது மனைவி என்ன ஆனார்? என்பது மீதிக்கதை..
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஆதவா ஈஸ்வரா, கட்டுமஸ்தான உடம்பு, ஆறடி உயரம் என்று ஆக்ஷன் ஹீரோவுக்கான தகுதியோடு இருக்கிறார். ஆனால், அந்த தகுதிகளை சரியான முறையில் வெளிக்காட்டாமல், ஓடிக்கொண்டே இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் கமலநாதன் புவன்குமார், ஸ்லீப்பர்செல்கள் யார் ?அவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தின் முதல் பாதியில் ஒரே காட்சியை திரும்ப திரும்ப ஓடவிட்டு பார்வையாளர்களை கடுப்பேற்றுகிறார். ஒரே அறையில் முழு படத்தை எடுக்கும் முயற்சியாக கதை மற்றும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் அதை சற்று தெளிவாகவும், புரியும்படியும் சொல்லியிருந்தால் வித்தியாசமான முயற்சியாக இருந்திருக்கும்.
இசை
இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனனின் பின்னணி இசை அளவாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களையும், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் நேர்த்தியாக இருக்கிறது.
- சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்
- பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், "ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர்" என்று தெரிவித்தார்.
ஐஸ்வர்யா ராயின் இந்த பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.






