என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்
    • பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், "ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர்" என்று தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராயின் இந்த பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    • இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
    • படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'ஆரோமலே'. இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து 'ஆரோமலே' திரைப்படம் வெளியாவதற்கான பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

    இந்த நிலையில், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    'ஆரோமலே' படத்தில் தங்கள் அனுமதி இல்லாமலும், காப்புரிமை சட்டத்தை மீறியும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சி, இசை பயன்படுத்தப்பட்டதாக ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு தடை விதித்தது.

    • இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
    • சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

    இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.



    இந்த நிலையில், 'சூர்யா47' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முதலாக சூர்யாவும், நஸ்ரியாவும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    • நயன்தாராவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    • நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது.

    நடிகை நயன்தாரா நேற்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே, நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது. படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில் ரஜினி, கமல் படங்களுக்கு இடையே நயன்தாரா நிற்பது போன்று உள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினர்.

    இந்த நிலையில், நயன்தாராவுக்கு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எண்ணம்போல் வாழ்க்கை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உயிர். நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, பைத்தியமாக, ஆழமாக நேசிக்கிறேன் என் அழகி. உன்னை நேசிக்கிறேன். உன் உயிர், உலக், பெரிய உயிர், உன் அன்பான மக்கள் அனைவரிடமிருந்தும் மிகுந்த இதயத்துடனும் அன்பு நிறைந்த வாழ்க்கையுடனும் பிரபஞ்சத்திற்கும் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

    • இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
    • படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பு மக்களும், திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர்.

    இதனை தொடர்ந்து சசிகுமார் தற்போது "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், 'மை லார்ட்' படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் 'எச காத்தா' பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.

    • ‘வா வாத்தியார்' படம் டிசம்பர் 5-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
    • படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யக்கோரி ஓ.டி.டி. உரிமம் பெற்ற நிறுவனமும் அழுத்தம் தருகிறதாம்.

    'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

    'வா வாத்தியார்' படம் டிசம்பர் 5-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இதற்கிடையில் இப்படம் ரிலீசாவதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

    அதாவது படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யக்கோரி ஓ.டி.டி. உரிமம் பெற்ற நிறுவனமும் அழுத்தம் தருகிறதாம். இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.
    • தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.

    இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    • மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
    • வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.

    மகேஷ் பாபுவின் 25வது படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் 2027 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    படத்தின் அறிமுக டீசர் அண்மையில் ஐதராபாத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

    அந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலி, "எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அதை கேட்டு நினைத்து எனக்கு கோபம் வந்தது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது" என்று தெரிவித்தார். 

    இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக வாரணாசி டீசரில் இந்து தொன்மம் குறித்த காட்சிகள் இடமபெட்ருந்த நிலையில், வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில் அனுமனை வமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக 'ராஷ்ட்ரிய வானரசேனா' என்ற அமைப்பு ராஜமௌலி மீது ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

    வாரணாசி பட விழாவில் ராஜமௌலியின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

    என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது. +91 75987 56841 இந்த நம்பர் என்னுடைய நம்பர் கிடையாது. என்னுடைய படத்துடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்தாண்டு வெளியான MOANA 2 ஆம் பாகமும் பெருவெற்றி பெற்றது.
    • இப்படத்தில் ராக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2016 ஆம் ஆண்டு வெளியான MOANA அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான MOANA 2 ஆம் பாகமும் பெருவெற்றி பெற்றது.

    அனிமேஷனில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற MOANA திரைப்படம் Live-action படமாக தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், MOANA Live-action திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. இப்படம் 2026 ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

    • பிற பெட்டிங் ஆப்களை பயன்படுத்தும் படி ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர்.
    • தனிப்பட்ட தகவல்களை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

    பைரசி இணையதளங்களின் வழியாக பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த கும்பலின் தலைவனை ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட கும்பலின் தலைவன் ரவி இமாண்டியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

    65 இணையதளங்களின் வழியாக சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரவி சுமார் ரூ 20 கோடி வரை சம்பாதித்துள்ளார்.

    சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் பயனர்களிடம் பிற பெட்டிங் ஆப்களை பயன்படுத்தும் படி ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    இந்த ஆப்களை பதிவிறக்கம் செய்யும் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் , வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவற்றை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், பைரசி குறித்து பேசிய இயக்குநர் ராஜமவுலி, "புதுப்படங்களை இலவசமாக பார்க்கலாம் என பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்கிறார்கள். இங்கு எதுவும் இலவசம் கிடையாது. உங்களது தனிப்பட்ட தரவுகளை திருடி அதன்மூலம் அவர்கள் பணம் ஈட்டுகிறார்கள். Ibomma தளம் வைத்திருந்தவரை கைது செய்திருக்கலாம். ஆனால் இதே போல இன்னும் பல தளங்கள் உள்ளன. பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு" என்று தெரிவித்தார்.

    • நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • NBK 111 படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு NBK 111 படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் NBK 111 படத்தை வீர சிம்ஹா ரெட்டி இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். 

    ×