பத்து நாட்களில் ரூ. 12.67 கோடி வசூலித்த கப்புல் ஃப்ரெண்ட்லி

இந்தப் படத்திற்கு ஆதித்யா ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.
பத்து நாட்களில் ரூ. 12.67 கோடி வசூலித்த கப்புல் ஃப்ரெண்ட்லி
Published on

சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கப்புல் ஃப்ரெண்ட்லி. அறிமுக இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கிய இந்தத் திரைப்படம் காதல் கதையம்சம் கொண்டிருக்கிறது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கப்புல் ஃப்ரெண்ட்லி திரைப்படம் வெளியாகி பத்து நாட்களில் ரூ. 12.67 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. அஜய் குமார் ராஜூ தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு பணிகளையும், கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு ஆதித்யா ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.

காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கப்புல் ஃப்ரெண்ட்லி திரைப்படம் காதலர் தினத்தை ஒட்டி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com