என் மலர்
சினிமா செய்திகள்
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ப்ரோமோ வீடியோவில் அனிருத்தின் துள்ளலான ரெட்ரோ இசை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இந்த பின்னணி இசையை உருவாக்கின்போது வைப் செய்த வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தி திரைத்துறையின் முன்னணி பாடகராக இருந்து வருபவர் அர்ஜித் சிங்.
38 வயதே ஆகும் அர்ஜித் சிங் கடந்த 15 ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பாடி வருகிறார். இந்தியில் ஆஷிக் 2 படத்தின் 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.
தமிழில், 'நான் உன் அழகினிலே', 'அடடா என்ன அழகு' உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.
ஆனால் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அர்ஜித் சிங் அண்மையில் அறிவித்தார்.
அப்போது அவர் வெளியிட்ட பதிவில், "உண்மையைச் சொல்லப்போனால், எனக்குத் திரையிசைப் பாடல்களில் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டது.
எனது வளர்ச்சிக்கு புதிய வகை இசையை ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஒரே மாதிரியான இசையில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.
பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையைத் நான் கைவிடவில்லை.
இனி ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக இசையை உருவாக்குவதிலும், இந்திய கிளாசிகல் இசையில் கவனம் செலுத்தவும் விருபுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அமீர் கானுக்காக அர்ஜித் சிங் தனது முடிவை மாற்றியுள்ளார்.
ஆமீர் கான் தன் தயாரிப்பில் உருவாகும் 'ஏக் தின்' என்கிற திரைப்படத்தின் அறிமுக பாடலைப் பாட மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்று அங்கு சொந்த கிராமத்திலிருந்த அரிஜித் சிங்கைச் சந்தித்தார்.
சந்திப்பின்போது, தொடர்ந்து பாடுங்கள் என கோரிக்கை வைத்ததுடன் தன் படத்திற்காக பாட வைத்துள்ளார். அவர்கள் சந்தித்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- புறக்கணிக்கப்பட்ட எனது தாய் நிலமான மணிப்பூருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.
பிரிட்டனின் சர்வதேச திரைப்பட விழாவான BAFTA விருது விழாவில் மணிப்பூர் படமான 'Boong' திரைப்படம் விருது வென்றுள்ளது.
'சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படம்' பிரிவில் இப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
Arko, Lilo and Stitch மற்றும் Zootropolis 2 போன்ற முன்னணி சர்வதேச திரைப்படங்களுடன் போட்டியிட்டு 'Boong' இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது.
மணிப்பூரில் நிலவும் சமூகப் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிந்து சென்ற தனது குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்கப் போராடும் ஒரு சிறுவனின் பயணமே இப்படத்தின் கதையாகும்.
லக்ஷ்மிப்பிரியா தேவி இயக்கிய இத்திரைப்படத்தை பிரபல நடிகர் பர்ஹான் அக்தர் இணைந்து தயாரித்துள்ளார்.
விழாவில் விருதை ஏற்றுக்கொண்ட இயக்குநர் லக்ஷ்மிப்பிரியா தேவி பேசுகையில், "பல இடர்பாடுகளால் புறக்கணிக்கப்பட்ட எனது தாய் நிலமான மணிப்பூருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். அங்கு மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த படம் BAFTA விருது வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "மணிப்பூர் மக்களுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இது நாட்டின் அபாரமான படைப்பாற்றலை உலகுக்குக் காட்டுகிறது" எனப் பாராட்டியுள்ளார்.
- படத்தின் தெய்வீகக் கதாபாத்திரமான 'தைவா' (Daiva) போலச் செய்து காட்டினார்.
- இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார்.
கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா சாப்டர்-1 பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் புகழ் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் காந்தாரா படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல நடித்தும் காட்டினார்.
இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார்.
இதனிடையே இது கடலோர கர்நாடகாவின் புனிதமான 'பூத கோலா' கலாச்சாரத்தை அவமதிப்பதாகக் கூறி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் மேத்தல் என்பவர் ரன்வீர் சிங்மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல் (பிரிவு 299) மற்றும் மத விரோதத்தைத் தூண்டுதல் (பிரிவு 196) உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன்மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர் ரன்வீர் சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதனை படக்குழு ஏற்கனவே தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்து இருந்தது. இந்த வரிசையில், டாக்சிக் திரைப்படத்தில் சுதேவ் நாயர் "கர்மாடி" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில், டாக்சிக் திரைப்படத்தில் அக்ஷய் ஒபராய் "டோனி" என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ஒரே நாளில் டாக்சிக் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று தகலவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
- படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
- கமல்ஹாசன் படத்தை பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. இப்படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றியுள்ள நகைச்சுவையான நிகழ்வுகளே படத்தின் கதை. இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இப்படத்தை பார்த்து சமீபத்தில் கமல்ஹாசன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதனை படக்குழு ஏற்கனவே தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்து இருந்தது. இந்த வரிசையில், டாக்சிக் திரைப்படத்தில் சுதேவ் நாயர் "கர்மாடி" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று தகலவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

- KGF படத்தில் இவரின் இசை இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
- 2 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ரவி பஸ்ரூர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் KGF படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். KGF படத்தில் இவரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், தான் 2 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ரவி பஸ்ரூர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி ஒன்றில் பேசிய ரவி பஸ்ரூர், "எனக்கு 18 வயது இருக்கும்போது 2 முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளேன். 2வது முறை ஒருவர் என்னை காப்பாற்றி கீபோர்ட் வாங்குவதற்காக எனக்கு ரூ.35,000 கொடுத்தார். அவர்தான் ரவி. அதையே என் பெயருக்கு முன் சேர்த்து ரவி பஸ்ரூர் என வைத்துக் கொண்டேன்" என்று தெரிவித்தார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பலரும் இந்தப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் குறித்த இயக்குநர் நெல்சனின் X தளப்பதிவுக்கு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பதிலளித்துள்ளார்.

இது குறித்த பதிவில் அவர், "ஆஹா, என்ன ஒரு பெருமையான தருணம், இரண்டு வெற்றியாளர்களும் ஒன்றாக நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சி. என்ன ஒரு காட்சி நெல்சன் திலிப் குமார் சார். அனிருத் நீங்கள் எப்போதும் போல் கலக்குகின்றீர்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெருமையான தருணத்தை உருவாக்கியது," என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர்களில் நடிகர் கிருஷ்ணா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். முதன்மை கதாபாத்திரம் மட்டுமின்றி கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் 25வது திரைப்படம் குறித்த புது அப்டேட் வெளியாகி உள்ளது.
மனுமந்தா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார். இது நடிகர் கிருஷ்ணாவின் 25வது திரைப்படம் ஆகும். கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் கழுகு படத்திற்கு பிறகு நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளா மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்திற்கு கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளையும், கவிண் படத்தொகுப்பு பணிகளையும், வெங்கட் பாலா கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
- கார் டிரைவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மகளால் ஆத்திரம்!
- கார் டிரைவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததால் பழிக்கு பழி நடந்த கொலை?
சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து "கடவுள் தந்த அழகிய வீடு" என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை விஷ்ணு பிரியா. சென்னை திருவான்மியூரை சேர்ந்த சூர்ய நாராயணன் என்பவரின் மகளான நடிகை விஷ்ணு பிரியாவுக்கு ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கணவர் ரமேஷ் கிருஷ்ணாவுக்கு உடல்நலம் பாதித்ததையடுத்து, சிகிச்சைக்காக தந்தையுடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் தந்தைக்கு சொந்தமான பங்களாவில் தங்கி 2018-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அப்போது கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவில் இருந்து வெளிவற தந்தை சூர்ய நாராயணன் பலமுறை அறிவுறுத்தியும், டிரைவர் பிரபாகரனுடனான விஷ்ணு பிரியாவின் உறவு தொடர்ந்து நீடித்துள்ளது.
இந்தநிலையில் டிரைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படார். விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்ய நாராயணன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் சூர்ய நாராயணன் கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் விடுதியுடன் கூடிய பங்களாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் என்பவர், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த கொடைக்கானல் போலீசார், சூர்ய நாராயணனின் பங்களாவிற்குள் செல்ல முயன்றபோது வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது.
பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமர்ந்தபடி உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சூர்ய நாராயணன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மற்றும் முரளியிடம் விசாரணையை தொடங்கினர். 2 நாட்களுக்கு முன்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் விடுதிக்கு தங்க வந்ததாக அவர்கள் கூறினர். மேலும், 5 பேரும் ஆவணங்கள் ஏதும் கொடுக்காமல் விடுதியில் தங்கியதும், விடுதியை விட்டு அவர்கள் 2 தினங்களாக வெளியில் எங்கும் செல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் மற்றும் முரளியை கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்த அந்த கும்பல், மறு அறையில் சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து, உடல் முழுவதும் டேப்பை இறுக்கமாக சுற்றியுள்ளனர். இதில் சூர்ய நாராயணன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், 5 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அப்போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றதோடு, சூர்ய நாராயணன், ஆறுமுகம், முரளி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இதில் நெடுநேரம் போராடி, ஆறுமுகம் கயிற்றை சிறிது கழற்றி காப்பாற்றுமாறு கூச்சலிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? இல்லை நகைக்காக நடத்தப்பட்டதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. ராதிகாவை மையக்கதாபாத்திரமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்தியேன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல்பாடலை பாடியுள்ளார். படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிகிறது.







