என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்ஷவர்தன்"

    மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது.

    திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது.

    இதனை உணர்ந்த பாடகர் - நடிகர் - இசை கலைஞர் ஹர்ஷவர்தன் ' மாயம் நீயடி' எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். ஹர்ஷவர்தன் இந்த மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார்.

    இந்த பாடலுக்கான வீடியோவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் மற்றும் நடிகை சஞ்சனா திவாரி ஆகியோர் இணைந்து பாடலில் தோன்றி காதல் கெமிஸ்ட்ரியை கச்சிதமாக வெளிபடுத்தி ரசிகர்களை மாயம் செய்து மயக்குகிறார்கள். இதன் மூலம் இந்தப் பாடல் வழக்கமான சுயாதீன இசை பாடலுக்கான காணொலியாக இல்லாமல், கமர்சியல் திரைப்படங்களில் இடம்பெறும் மெலோடி பாடலாக உருவாகி இருக்கிறது என்பது உறுதியாகிறது.

    ஹர்ஷவர்தன் - இசையை சுவாசமாக நேசிக்கும் இசை கலைஞர் மட்டுமல்ல... இசையனுபவத்தை சிறப்பாக வழங்கும் அற்புதமான ஆற்றலையும் பெற்றவர். இவருடைய முயற்சியில் உருவாக்கி இருக்கும் மாயம் நீயடி' மியூசிக் வீடியோ ஆல்பம் சிறந்த சான்று.

    இவர் ஏற்கனவே இரண்டு சுயாதீன இசை ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் பின் தொடர்கிறார்கள். இவருடைய ஒரு மியூசிக்கல் போஸ்ட்டுக்கு லட்சக்கணக்கான லைக்குகளும், லட்சக்கணக்கான வ்யூஸ்களும் கிடைப்பதால் சமூக வலைதளவாசிகளின் ஃபேவரைட் ஸ்டாராகவும் வலம் வருகிறார்.

    இதனிடையே ஹர்ஷவர்தன் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் என்பதும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்.
    • சமூக வலைதளத்தில் சிலர் கட்டுக்கதைகளை வெளியிட்டு புகழை கெடுக்க முயற்சி.

    பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி எதிர்க்கட்சி எம்.பி.யான இஸ்லாமியரை பார்த்து தீவிரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளையும் பாராளுமன்றத்திலேயே பேசிய போது அருகில் உட்கார்ந்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தற்போது தனக்கு சரியாக கேட்கவில்லை என மழுப்பி உள்ளார்.

    இது குறித்து பா.ஜ.க. எம்.பி. ஹர்ஷவர்தன் தனது வலைதளத்தில், "எக்ஸ் தளத்தில் எனது பெயர் டிரெண்டிங் ஆவதை பார்த்தேன். இரண்டு எம்.பி.க்கள் அவையில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்திய விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி இருப்பது பொருத்தமற்ற செயல். எங்களின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்."

    "சமூக வலைதளத்தில் எனக்கு எதிராக எழுதி வரும் இஸ்லாமிய நண்பர்களுக்கு, ஒரு சமூகத்திற்கு எதிராக அத்தகைய மொழியாடல் உபயோகிக்கப்படும் போது நான் அவ்வாறு செய்திருப்பேன் என்று நம்புகிறீர்களா? அரசியல் சூழ்ச்சி காரணமாக சமூக வலைதளத்தில் சிலர் இதுபோன்ற கட்டுக்கதைகளை வெளியிட்டு எனது புகழை கெடுக்க முயற்சிக்கின்றனர்."

    "எனது 30 ஆண்டு கால பொது வாழ்க்கையில், நான் லட்சக் கணக்கான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுடன் எனது தொகுதி மட்டுமின்றி வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் பழகி இருக்கிறேன். எனது சிறுவயதில் இஸ்லாமிய நண்பர்களுடன் விளையாடி இருக்கிறேன். என்னை பற்றி நன்கு அறிந்து கொண்டிருக்கும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அவர்களை பற்றி நான் எத்தகைய மதிப்பு கொண்டிருக்கிறேன் என்று நன்றாகவே தெரியும்."

    "சாந்தினி சௌக் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருப்பதில் நான் பெருமகிழ்ச்சியாக உணர்கிறேன். அனைத்து சமூகத்தினரின் ஆதரவின்றி, இது சாத்தியமாகி இருக்காது."

    "இந்த விவகாரத்தில் எனது பெயர் தொடர்புப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து நான் வருத்தமடைகிறேன். அங்கு நடந்த களேபரத்தில், அங்கு என்ன பேசிக் கொண்டனர் என்றே எனக்கு சரியாக கேட்கவில்லை. எனது வாழ்க்கையில் எனக்கென சொந்த கொள்கைகள் உள்ளன," என்று தெரிவித்து உள்ளார்.

    ×