என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    விஜய் பிறந்தநாளில் அவர் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    ‘தெறி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தையும் அட்லியே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பா படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்கவிருக்கிறது.

    இப்படத்தின் தலைப்பு இன்னமும் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.



    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 100-வது படமாகும். இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து முக்கிய அரசியல் பிரமுகர்களிடமும், நடிகர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும், போருக்கு அனைவரும் தயாராக இருங்கள்” என்றும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாகி இருக்கிறது. ரஜினிகாந்தை சந்தித்து பேசிய அவரது நண்பர் ராஜ்பகதூர், தமிழருவி மணியன் ஆகியோரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.

    அரசியலுக்கு முன்னோட்டமாக ஒன்றிய, நகர, மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரசிகர் மன்ற அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ரஜினிகாந்த் ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் ரசிகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.

    காலா படப்பிடிப்பு மூன்று, நான்கு மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும், அதன்பிறகு அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தனது நலம் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள், மூத்த நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் நேரிலும், போனிலும் ரஜினிகாந்த் கருத்து கேட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.



    காலா படப்பிடிப்புக்காக மும்பை புறப்படுவதற்கு முன் தனது வீட்டில் பலரை இது தொடர்பாக அவர் சந்தித்து கருத்து கேட்டார். அப்போது சிலர் நீங்கள் கட்சி தொடங்கினால் அதில் சேர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் தனி கட்சி தொடங்கி அனுபவப்பட்ட தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரிடமும் போனில் கருத்து கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிரஞ்சீவி அரசியல் ஆசையில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் தோல்வி அடைந்ததும் காங்கிரசில் கட்சியை இணைத்து மத்திய மந்திரி பதவியை பெற்றார். தனி கட்சி தொடங்குவதால் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அவரிடம் ரஜினிகாந்த் விவாதித்ததாக தெரிகிறது.

    நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரிடம் தனி கட்சி ஆரம்பித்தால் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும்? என்று கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் தற்போது காலா படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டு இருப்பதால், அமிதாப்பச்சன் மற்றும் அங்குள்ள அரசியல் பிரமுகர்களிடமும் கட்சி ஆரம்பிப்பது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அவரை வளைத்து போட்டு கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி உள்ளன. பா.ஜ.க, ரஜினி கூட்டணிக்கு ஆர்வமாக இருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்று உள்ளன. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
    சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதும் நான் எடுத்த முடிவுதான்.

    தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவில் எனது முழு திறமையும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. எல்லா மொழி படங்களிலும் பெயர் வாங்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. அதை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன்.



    குறைந்த காலத்தில் திறமையான முன்னணி நடிகையாக என்னை நிலைநிறுத்தி இருக்கிறேன். கமல்ஹாசன் மகள் என்பது சினிமாவில் எனது அறிமுகத்துக்கு மட்டும் பயன்பட்டது. கடைசிவரை கமல் மகள் என்ற அந்தஸ்து உதவாது என்றும் முதல் வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்றும் எனது தந்தை கூறி இருக்கிறார். அதை மனதில் வைத்து செயல்படுகிறேன்.

    எனது தந்தை எல்லா விஷயங்களையும் கற்று இருக்கிறார். நடிப்பு, பாடல், இயக்கம் என்று எல்லாவற்றிலும் அவருக்கு அனுபவம் இருக்கிறது. அதுபோல் எனக்கும் எல்லாவற்றையும் கற்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. வட இந்திய, தென் இந்திய மொழி படங்கள் என்று பார்க்காமல் எல்லா மொழிகளிலும் நடித்து பெயர் வாங்குவேன்.

    சவாலான வேடங்களில் நடித்து எனது திறமையை வெளிப்படுத்த ஆர்வம் இருக்கிறது. அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களுக்காக காத்து இருக்கிறேன். அது எந்த மொழி படமாக இருந்தாலும் நடிப்பேன்.”

    இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
    மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்து, தற்போது ‘3டி’ தொழில்நுட்பத்தில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் ‘புலி முருகன்’ படத்தின் முன்னோட்டம்.
    மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் ‘புலி முருகன்’. இது, ரூ.150 கோடி வசூல் சாதனை செய்த படம்.

    மலையாளத்தில் உருவான ‘புலி முருகன்’ அதே பெயரில் தமிழில் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் ‘புலி முருகன்’ தமிழிலும் உருவாகிறது. கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். இவர்களுடன் ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் - அட்வெஞ்சர் படமாக உருவாகி இருக்கிறது.

    பாடல்கள் - சினேகன், ஆர்.பி.பாலா, ஒளிப்பதிவு - ஷாஜிகுமார், இசை - கோபி சுந்தர், எடிட்டிங் - ஜான், ஸ்டண்ட் - பீட்டர் ஹெய்ன், கதை, திரைக்கதை - உதயகிருஷ்ணா, இயக்கம் - வைஷாக், தயாரிப்பு - டோமிச்சன் முலக்குப் பாடம். இந்த படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஆர்.பி.பாலா. புலியை வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளை படமாக்கி உள்ளனர்.



    ‘புலிமுருகன்’ படம் தமிழ் ரசிகர்களுக்காக ‘3டி’ தொழில் நுட்பத்தில் வெளியாக இருக்கிறது. மலையாள ரசிகர்களுக்காகவும் ‘3 டி’ தொழில்நுட்பமாக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

    ‘புலி முருகன்’ மலையாள ‘3 டி’ படத்தின் சிறப்பு காட்சியை ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் பார்த்தது ‘கின்னஸ்’ சாதனையாக பதிவாகியுள்ளது.

    இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.
    "அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.
    "அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.

    இதுபற்றி இளைய ராஜா கூறியதாவது:-

    "பஞ்சு சாரின் கதை - வசனத்தில் ஹிட் ஆகியிருந்த "உறவு சொல்ல ஒருவன்'', "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற 2 படங்களுக்கும் விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.

    அவரிடம் வேலை செய்த குருபாதம் என்ற இன்சார்ஜ், அவருக்கு வரவேண்டிய படத்தை நான் தட்டிப்பறித்து விட்டேன் என்ற தவறான எண்ணத்தோடு தயாரிப்பாளர் சுப்புவிடம் போனார்.

    "பஞ்சுசார், விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆகும் கூட்டணி சார். அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்போயிருக்கு. அதை ஏன் மாத்துறீங்க'' என்றார்.

    இதில் சுப்பு குழம்பிவிட்டார். கூடவே பஞ்சுசாரின் இன்னொரு தம்பி லட்சுமணன் வேறு. அவருக்கும் கேள்விக்குறிகள்.

    "சார்! இந்த ராஜா ஜி.கே.வி.கிட்டே கிட்டார் வாசிக்கிறவர் சார். ஏற்கனவே அன்லக்கி மிïசிக் டைரக்டர் என்று பெயர் எடுத்திருக்கார். அவர் மிïசிக் பண்ணி பூஜை போட்ட படம் எல்லாம் நின்று போயிடும்'' என்று பலவிதமாக சொல்லி, பயத்தை ஏற்படுத்திவிட்டார். சுப்புவும் பயந்து விட்டார்.

    பஞ்சுசாரிடம் நேராக சென்ற சுப்புவும், லட்சுமணனும், "எதுக்கு நமக்கு ரிஸ்க்? விஸ்வநாதன் சார் பிரமாதமாக மிïசிக் போடுகிறார். நம்ம படத்திற்கு ஒரு மெரிட் இருக்கும். டிஸ்டிரிபிïட்டரும் படத்தை வாங்குறதுக்கு ஒரு பேரும் இருக்க வேண்டாமா?'' என்று சொன்னார்கள்.  

    "அதைப்பற்றி ஒன்றும் பேசவேண்டாம், முடிந்து போன விஷயம். ராஜாதான் மிïசிக்!'' என்று பஞ்சு சார் ஒரேயடியாக அடித்து சொல்லிவிட்டார்.

    இதைக்கேட்டு அவர்களது தம்பிகளும் பேசாமல் இருந்தார்கள்.

    பூஜைதேதியும் குறிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனிடம் பாட்டெழுத கேட்ட நேரத்தில் அவர் சிங்கப்பூர் போவதாக சொல்லிவிட்டார்.

    "எப்போது திரும்பி வருவார்?'' என்று கேட்டதற்கு, "படத்தின் பூஜை முடிந்த பிறகு தான் திரும்பிவருவார்'' என்று பதில்வந்தது.  

    எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    அதேநேரம் "பூஜையை நிறுத்தவேண்டாம். நானே பாட்டு எழுதிவிடுகிறேன்'' என்று பஞ்சு சார் கூறிவிட்டார்.

    அதன்படி பாடலை எழுதித்தந்தார்.

    ரிகர்சல் நாள்வந்தது. கவிஞர் வீட்டின் அருகில் இருக்கும் பாலாஜி கல்யாண மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும்

    வந்தது.காலையில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' பாடலுக்கு ரிகர்சல் செய்தோம்.

    அவர்களுக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கும் உற்சாகமாக இருந்தது. இரண்டாவதாக, "மச்சானை பார்த்தீங்களா'' பாடலை ரிகர்சல் செய்தோம்.  மதிய உணவுக்குப்பின் மாலை 4 மணிக்கு பாடகி எஸ்.ஜானகி வந்தார்.

    பெரும்பாலும் பாடகர்கள் பெரிய இசையமைப்பாளருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    ஆனால் ஜானகி ஜி.கே.வி. ரெக்கார்டிங்கில் என்னிடம் பழகி இருக்கிறார்.

    தவறாக பாடினால் ஜீ.கே.வி. என்னை விட்டு சரியாக சொல்லிக்கொடுக்கச்சொல்லும்போது, நான் பாடி சரிசெய்வதை தெரிந்தவர்.

    ரிசர்சலுக்கு வந்து ஒத்துழைத்தார். பாடல் சொல்லிக்கொடுக்கும் போதே, அதனுடைய ஜீவனைப் புரிந்து கொண்டார். இது மிகவும் புதிது என்று தெரிந்து மிகவும் கவனத்தோடு கற்றுக்கொண்டார்.

    சுப்புவுக்கும், லட்சுமணனுக்கும் என் மீது இருந்த சந்தேகம் தீர்ந்து போனது.

    "நீ நன்றாகப்பாடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அது இவ்வளவு புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை'' என்று இரட்டிப்பு சந்தோஷத்தோடு பஞ்சுசார் சொன்னார்.

    அடுத்த நாள் பூஜை. நானும், பாஸ்கர், அமர் ஆகியோரும் 6 மணிக்கு திருவேற்காடு போய்விட்டு, ஸ்டுடியோவுக்கு 7 மணிக்கு முன் வந்து விட்டோம்.     

    பூஜை முடிந்து, ரிகர்சல் தொடங்கியது.

    ஆர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, "ரெடி, ஒன், டூ, த்ரி'' என்று நான் சொன்ன அந்த நொடியில் "மின்சாரம் கட்'' ஆகி விளக்குகள் அணைந்து விட்டன. எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.

    டோலக் வாசிக்கும் பாபுராஜ் `எம்... நல்ல சகுனம்' என்றார், கேலியாக.

    மனம் உடைந்த நான், ஸ்டுடியோவில் பாடுபவர்களுக்கு இருக்கும் ரூமின் பின் கதவைத் திறந்து தனியாக உட்கார்ந்திருந்தேன். சிறிதுநேரம் அப்படியே கழிந்தது.

    தம்பி அமரும், பாஸ்கரும் என்னைத் தேடிவந்து, "டைரக்டர் மாதவன் சார் வந்திருக்கார். உன்னைப் பார்க்கவேண்டுமாம்'' என்றனர்.

    நான் உடனே எழுந்து போனேன், அவர் "கருமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன், இந்தா பிரசாதம்'' என்று என் கையில் கொடுத்தார்.

    பின்னர், "நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்ணு நினைத்தேன். ஆனா பஞ்சு முந்திவிட்டார்'' என்றார்.

    அது உடைந்த மனதுக்கு ஆறுதலாக இருந்தது. போன மின்சாரமும் வந்தது.

    தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமிக்கு காட்டிவிட்டு வெளியே சிதறுகாய் எறிந்து உடைக்கப்பட்டது.

    "சைலன்ஸ்! டேக்..ரன்னிங்'' என்ற குரல் ஒலிக்க, கோவர்தன் மாஸ்டர், "ஒன் டூ கொடுக்க, ஜானகி ஆ...ஆ... என்று ஹம்மிங் தொடங்க, பாடல் நன்றாக வந்தது.

    என்ஜினீயர் சம்பத், ஒன்ஸ்மோர் என்று கேட்கப்போனார்.

    "முதல் டேக் டேப்பை போட்டுக்காட்டினால், ஆர்க்கெஸ்ட்ராவின் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக் கொள்வார்களே'' என்று நான் கூறினேன்.

    எல்லோரையும் உள்ளே அழைத்தேன். சம்பத்தோ, "என்ன இது? இந்தபையன் இப்படிச் செய்கிறானே?'' என்று நினைத்தார். "ராஜா! இன்னும் ஒரு டேக் எடுத்திடலாமே'' என்றார்.

    "எடுக்கலாம் சார்! ஆனா இதப்போட்டுக்கேட்டா, அவங்க தவறி வாசிச்சதை அவங்களே திருத்தி வாசிப்பாங்க'' என்றேன்.

    `சரி' என்று டேப்பை ரிவைண்ட் செய்தார். அதன் பின்னர் டேப்பை ஆன் செய்தார். டேப் ஓடியது. இப்போது வரும், இப்போது வரப்போகிறது என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, எதிர்பார்க்க டேப் ஓடியதே தவிர, அதிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை.

    காரணம் பாடல் பதிவாகவில்லை! ரெக்கார்ட் மூடில் மெஷினே ஓட்டவில்லை என்பது சம்பத்துக்கு தெரிந்து போய்விட்டது. உடனே, "சார், சார்! பாட்டு பதிவாகலை சார்,

    ஒன் மோர் டேக் சார்!'' என்றார்.

    சுப்புசாரின் முகம் மாறியது. ஒரு மாதிரியாகி வெளியே எழுந்து போய்விட்டார்.

    மீண்டும் பாடல் பதிவு தொடங்கியது.

    "டேக் நம்பர் ஒன்று இரண்டு'' என்று நம்பர்களை ஏற்றிக்கொண்டே போனார்கள். 12 டேக் ஆனது.

    பஞ்சு சார் மட்டும் இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலும் அமைதியாக இருந்தார்.

    பாரதிராஜா மட்டும் பூஜைக்கு வரவில்லை. அது எங்களுக்குள் இருந்த அந்த போட்டியை எனக்கு நினைவு படுத்தியது.

    2-வது பாடல், "மச்சானைப்பார்த்தீங்களா'' பதிவாகியது. "சொந்தமில்லை பந்தமில்லை'' பாடலை சுசீலா பாட ரெக்கார்டு செய்தோம்.

    `அன்னக்கிளி உன்னைத்தேடுதே' பாடல், சோகப்பாடலாக மறுபடியும் ஒருமுறை வந்தால் நன்றாக இருக்கும் என்று பஞ்சுசாரும், டைரக்டர் தேவராஜ் மோகனும் விரும்பினார்கள். அந்த பாடலை டி.எம்.சவுந்திரராஜன் நன்றாக பாடிக்கொடுத்தார்.

    பாடல்கள் எல்லாம் பதிவாகி முடிந்தன. அதன்பின் படத்தின் சூட்டிங் நடந்தது.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    ரசிகர்களின் மீம்ஸ்கள் ஒரு இயக்குனரையே அதிர வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    நயன நடிகையும் காதலரும், சிவமான இயக்குனருமானவர் தற்போது சூர்ய நடிகரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இருந்தாலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை இயக்குனர் வெளியிடாமலேயே இருக்கிறாராம்.

    இதுநாள் வரை பொறுத்துப் பார்த்த சூர்ய நடிகரின் ரசிகர்கள், அந்த படத்தை பற்றியும், இயக்குனர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட ஆரம்பித்தார்களாம். இதனால் அதிர்ந்துபோன இயக்குனர் இப்போதைக்கு ரசிகர்களை சாந்தப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறாராம்.



    அதாவது, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதைவிட, அந்த நடிகரின் புகைப்படத்தை வெளியிட்டால் ரசிகர்கள் சாந்தமாகிவிடுவார்கள் என்ற எண்ணத்தில், அந்த நடிகரின் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டாராம். இதனால், தற்போது சூர்ய நடிகரின் ரசிகர்கள் சாந்தமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கூடிய சீக்கிரத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட்டே ஆகவேண்டும் என்று ரசிகர்கள் இயக்குனருக்கு கோரிக்கை வைக்கிறார்களாம்.
    விமான விபத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் தப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோனுக்கென்று உலகமெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், சன்னிலியோன் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையால் விபத்து ஏற்படும் நிலைக்கு சென்று கடைசியில் உயிர் பிழைத்து வந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார்.



    இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்த மாதிரியான தருணத்தில் விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் எங்களுடைய நிலைமையை யோசித்துதான் பார்க்கவேண்டும் என்று நகைச்சுவையுடனும் கூறியுள்ளார்.

    மேலும், நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம். எங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய விமானிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    ரமேஷ் செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சுவாதி கொலை வழக்கு’ படத்துக்கு சுவாதியின் தந்தை தடை கோரியுள்ளார்.
    கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

    இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் ‘எனது மகள் கொலை தொடர்பான கதையை திரையிட அனுமதிக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை ‘உளவுத்துறை’ என்ற படத்தை இயக்கிய ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா இப்படத்தை தயாரித்துள்ளார்.
    பிரதமர் மோடியை சந்தித்தபோது கால்மேல் கால் போட்டு அமர்ந்து பேசியதால் பிரியங்கா சோப்ராவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.
    அரசு முறை பயணமாக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் முன்பு அவர் குட்டைப் பாவடை அணிந்து கால் மேல் கால் போட்டு  தெரியும்படியாக அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா சோப்ரா.



    இந்த பதிவை பார்த்த பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். ஒரு நாட்டின் பிரதமர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் இப்படி அமர்ந்திருப்பதா? அதேபோல், பிரதமரை சந்திக்கும்போது நம்முடைய கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா? என நிறைய பேர் பிரியங்காவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

    அதேநேரத்தில், நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்ததும், நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கருத்து கூறாமல் நடிகையை சந்திக்க மட்டும் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்று மோடி மீது பலரும் கொந்தளிப்போது தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.



    இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்கிராம் கணக்கில் ஒரு புகைப்படத்தை பகிரிந்துள்ளார். தனது அம்மா மது சோப்ராவுடன் பிரியங்கா சோப்ரா ஒரு உணவு விடுதியில் கால்கள் தெரியும்படி அமர்ந்திருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு என்றுமே கால்கள்தான், அது மரபணுவிலேயே இருப்பது’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்துக்கும் நெட்டிசன்களில் சில பேர் ஆதரவு தெரிவித்தும், எதிர்த்தும் தங்களது வாக்குவாதங்களை செய்து வருகின்றனர்.
    நடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    நடிகை அனுஷ்கா நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகை அனுஷ்கா அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார். தினமும் அவர் அங்கிருந்து சினிமா படப்பிடிப்புக்கு சென்று வந்தார். ஆனைமலை பகுதியில் இன்று படப்பிடிப்பு நடந்தது.

    இதில் அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி போக்குவரத்து அதிகாரிகள் கேரவனை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



    கேரவன் பறிமுதல் செய்யப்பட்டபோது கேரவனில் அனுஷ்கா இல்லை. அவர் பயன்படுத்திவந்த வாகனத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கேரவனின் உரிமையாளர் இளங்கோவனிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ‘பாகுபலி’ படத்தின் ஹீரோவான பிரபாஸுக்கு விஜய்க்கு வில்லனாக நடித்தவர் வில்லனாகியுள்ளார்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 5 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமலேயே இருந்து வந்தார். தற்போது ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக கத்ரீனா கைப், ப்ரிணிதி சோப்ரா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    நீல் நிதின் முகேஷ், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 
    தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று விஷால் ஆவேசமாக பேசியுள்ளார்.
    சென்னையில் பரபரப்பை கிளப்பிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது தமிழ் சினிமாவாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கிறார். ‘உளவுத்துறை’ படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டில் நடிகர் விஷால், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்போது நடிகர் விஷால் பேசும்போது, இன்றைக்கு சினிமாவை ஆபத்து பல வழிகளில் சூழ்ந்துள்ளது. அதை தடுப்பதற்காகத்தான் சினிமாவை நிறுத்தி வைப்போம் என்று முடிவு எடுத்தோம். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றார்கள். நான் எந்த முடிவையும் தனியாக எடுப்பது கிடையாது. அனைவரையும் கலந்து ஆலோசித்துதான் அனைத்து முடிவுகளையும் அறிவிக்கிறேன். 



    தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவுக்கு டிக்கெட் விலையைவிட கூடுதலாக ரூ.30 வசூலிக்கிறார்கள். அதில் ஒரு ரூபாய்கூட தயாரிப்பாளருக்கு வருவதில்லை. நாமே ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்போம் என்றால் அது கூடாது என்று ஒரு எதிரி கூட்டம் உருவாகிவிடுகிறது.

    கியூப் கட்டணம் ரூ.20 ஆயிரம் வசூலிக்கிறார்கள். ரூ.5 ஆயிரத்துக்கு செய்து தருகிறேன் என்று ஒருவன் அலுவலக வாசலிலேயே காத்துக் கிடக்கிறான். ஆனால் அவனை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இனிமேல், நான் எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை. வருகிற டிசம்பர் மாதத்திற்கு எந்த ஒரு தயாரிப்பாளரும் நஷ்டத்தை சந்திக்காமல் லாபத்தை சந்திக்கிற நிலைமையை உருவாக்கி காட்டுவேன். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று ஆவேசமாக பேசினார்.
    ×