என் மலர்
விஜய் நடிக்கும் 61-வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். 3 வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஒரு விஜய் ஜோடியாக நித்யாமேனன் நடிக்கிறார். இது பற்றி கேட்டபோது...
“நடிப்பிலேயே எனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. நிறைய வித்தியாசமான, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் இயக்குனர் ஆகும் ஆசையில் புதுப்படங்களை ஒப்புக்கொள்வது இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. எனக்கு இப்போது அது போன்ற எண்ணம் எதுவும் இல்லை.

விஜய் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக விஜய்யுடன் நடித்திருக்கிறேன். விஜய் மிகவும் அமைதியானவர். சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசுவார். தனது கதாபாத்திரத்தை மட்டுமே சிந்திப்பார். உடன் நடிப்பவர்களையும் அந்த பாத்திரமாகவே கருதுவார். விஜய்யுடன் நடித்தது எனக்கு புதுமையான அனுபவம். இந்த படத்தில் அட்லியுடன் பணிபுரிவது மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்”.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது இப்படத்தில் நடிகர் நெப்போலியனும், நடிகை சுஹாசினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ‘தென்காசிபட்டணம்’ படத்தில் சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு 2005-ல் வெளிவந்த ’ஐயா’ படத்திலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல், சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முறையாக இப்படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். ராண் என்பவர் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ‘நிசப்தம்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் முதல் 45 நிமிடங்கள் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும். இதற்கான படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பதிலாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமீர் ‘யோகி’ என்ற படத்தின்மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். அதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ‘வடசென்னை’ படத்தில் அவர் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பர்வதம்மா. 77 வயதாகும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 16 நாட்களுக்கு முன்பு பெங்களூர் எம்.எஸ். ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை நேற்று இரவு மிகவும் மோசம் அடைந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை 4.40 மணி அளவில் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர். பர்வதம்மாவின் மறைவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பர்வதம்மா உடல் பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு நடிகர் அம்பரீஷ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு பர்வதம்மா உடல் சதாசிவம் நகரில் உள்ள பூர்ணபிரஜா மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கர்நாடகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொது மக்கள், ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை பர்வதம்மா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது சொந்த ஸ்டூடியோவான கண்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்டூடியோவில் தான் ராஜ்குமார் சமாதி உள்ளது குறிப்பிடத்தக்கது. கணவரின் சமாதி அருகே பர்வதம்மா உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.

பர்வதம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெங்களூருவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மைசூரிலும் தியேட்டர்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் இன்று திரைப்பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
பர்வதம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிற பகுதிகளை பொறுத்த வரையில் பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பள்ளி நிர்வாகங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக - கர்நாடக எல்லையான அத்திப் பள்ளியிலும் கர்நாடக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். கன்னட மக்கள் மத்தியில் ராஜ்குமாரை போலவே பர்வதம்மாவுக்கும் செல்வாக்கு அதிகம்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சாலிகிராமா என்ற கிராமத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர் பர்வதம்மா. இவரது பெற்றோர் அப்பாஜி கவுடா - லட்சுமம்மா. தனது 13-வது வயதில் ராஜ்குமாரை மணந்தார்.
திருமணத்திற்கு பின்னர் ராஜ்குமாரும், இவரும் இணைந்து வஜ்ரேஸ்வரி கம்பைன்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தையும், பூர்ணிமா என்டர்பிரைசஸ் என்ற பட வினியோக நிறுவனத்தையும் தொடங்கினர்.
ராஜ்குமார் கதாநாயகனாக நடித்த திருமூர்த்தி படம்தான் பர்வதம்மா தயாரித்த முதல் படமாகும். இவரது 3 சகோதரர்களும் கூட திரைப்படத் தயாரிப்பாளர்கள் தான். 80 படங்களுக்கும் மேல் தயாரித்துள்ளார் பர்வதம்மா.
ராஜ்குமார் -பர்வதம்மாவுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சிவராஜ்குமார் கன்னட பட உலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் பங்காரப்பாவின் மகளை திருமணம் செய்தார்.
பர்வதம்மாவின் 2-வது மகன் ராகவேந்திரா ராஜ்குமாரும், படங்களில் நடித்து வருகிறார். 3-வது மகன் லோகித் இவர் தனது பெயரை புனித் ராஜ்குமார் என மாற்றிக் கொண்டார். பர்வதம்மாவின் மகள்கள் பூர்ணிமா, லட்சுமி ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.
தனது பட நிறுவனம் மூலமாகவே தனது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் புனித்ராஜ் குமாரையும் கதாநாயகனாக ஆக்கினார்.
பர்வதம்மாவின் கணவர் நடிகர் ராஜ்குமார் 2000-ம் ஆண்டில் சந்தன கடத்தல் வீரப்பனால் காட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டார். 100 நாட்களுக்கு பின் பெரும் தொகை கொடுத்து மீட்கப்பட்டார். 2006-ம் ஆண்டு ராஜ்குமார் மரணம் அடைந்தார். தற்போது பர்வதம்மாவும் மரணம் அடைந்துவிட்டார்.
படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். அவர்கள் ரஜினிகாந்தை தொடுவதற்கும், பக்கத்தில் நின்று ‘செல்பி’ எடுப்பதற்கும், கைகுலுக்குவதற்கும் முண்டியடித்தனர். இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தி ரஜினிகாந்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் சென்றனர். தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். ஆனாலும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடிக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியபடி இருந்தனர். அவர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தார்.

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ரஜினிகாந்த் தலையில் ‘குல்லா’ அணிந்து நடந்து செல்வது போன்ற காட்சிகளும் படமானது. அப்போதும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து குரல் எழுப்பியபடி ஓடினார்கள்.
தாதாவாக இருக்கும் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதுவது போன்ற ஆக்ரோஷமான சண்டை காட்சிகளையும் மும்பையில் படமாக்குகின்றனர். மும்பை படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாவது கட்டமாக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
இதற்காக பூந்தமல்லி பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர். நெல்லையில் இருந்து மும்பை சென்று வசித்த ஒரு குடும்பத்தை பற்றிய கதையே இந்த படம் என்று படத்தின் டைரக்டர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். எனவே ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் நெல்லை தமிழ் பேசி நடிப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதேவியின் 50 ஆண்டு சாதனையைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் ‘மாம்’ படத்தை வருகிற ஜுலை 7-ந்தேதி அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் ஸ்ரீதேவி டப்பிங் பேசுகிறார்.
‘மாம்’ திரைப்படத்தை ஸீ ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க எமேட் பிலிம்ஸ் அண்ட் தேர்டு ஐ புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளனர். இந்த படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘மாம்’ விரைவில் திரைக்கு வருகிறது.
பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர். இவர் வெற்றிகரமாக ஓடிய ‘பகீஷா’ படத்தில் மீனாகுமாரியுடன் நடித்து பிரபலமானார். ‘ரஷ்யா சுல்தான்’ உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். தற்போது வயதாகி விட்ட நிலையில் மும்பையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார்.

கீதா கபூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. வெளியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிச்சென்ற அவரது மகன் ராஜா மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை. அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.
ஆஸ்பத்திரி ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை. மகள் பூஜாவும் போனை எடுக்கவில்லை. கீதா கபூர் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தினார்கள். அவருக்கு மருத்துவ செலவு கட்டணமாக ரூ.1½ லட்சம் வந்து இருப்பதாகவும் அதை கட்டி விட்டு செல்லும்படியும் ரசீது கொடுத்தனர்.
கீதா கபூர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி அழுதார். மகன் தன்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ஓடி விட்டதாகவும் கூறினார். கீதா கபூரின் பரிதாப நிலை குறித்து தகவல் அறிந்ததும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் அசோக் பண்டிட் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி ஆகியோர் மருத்துவ செலவை ஏற்று ரூ.1½ லட்சத்தை ஆஸ்பத்திரியில் செலுத்தினார்கள்.
இது குறித்து கீதா கபூர் கூறியதாவது:-
“வயதான என்னை மகன் கவனிக்கவில்லை. தினமும் அடித்து உதைத்தான். பல நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்தான். 4 நாட்களுக்கு ஒரு தடவை சாப்பாடு போட்டனர். பட்டினி போட்டதால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடும்படி வற்புறுத்தினான். நான் மறுத்து விட்டேன். இதனால் ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டு விட்டு ஓடிவிட்டான்”
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
கீதா கபூர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் உடல்நலக் குறைவால் ஐதரபாத்தில் காலமானார். 75 வயதான அவர், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த 1974-ஆம் ஆண்டு `டாடா மனவாடு' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமான தாசரி, தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர், இரு தேசிய விருதையும், பலமுறை மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதிக திரைப்படங்களை இயக்கதற்காக லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, நிலக்கரித் துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தாசரி நாராயணராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். தாசரி நாராயண ராவின் மறைவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கன்னடத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தவர் ஜி.கே.வெங்கடேஷ். அவரிடம் இளையராஜா 1969-ம் ஆண்டு உதவி இசையமைப்பாளராக சேர்ந்தார். 150 படங்கள் வரை அவருடன் இணைந்து பணியாற்றினார்.
இளையராஜா ஆர்மோனியத்தை வாசிப்பதைத்தான் அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் ஜி.கே.வெங்கடேசிடம் பணியாற்றும் போது, கிட்டார், பியானோ, கம்போஆர்கன் ஆகிய இசைக்கருவிகளையும் வாசித்தார். அத்தோடு பாடல்களை எப்படி பாட வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பது, பின்னணி பாடகர்கள் பாடும்போது தவறுகள் ஏற்படும்போது, அதை சரிசெய்வது போன்ற பணிகளையும் செய்தார்.
இந்த சமயத்தில், இளையராஜா வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது.
இளையராஜாவின் நண்பரும், பிற்காலத்தில் பிரபல கதாசிரியராக உயர்ந்தவருமான ஆர்.செல்வராஜ் உருவத்தில் அதிர்ஷ்டம் அவரைத் தேடி
வந்தது.இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"செல்வராஜ் ஒருநாள் வந்து, `டேய்! உனக்காக பஞ்சு அருணாசலத்துக்கிட்டே சொல்லியிருக்கிறேன். அவர் உன்னை பார்க்க வேண்டும் என்று அழைத்துவரச்சொன்னார்' என்று கூறினான். பின்னர் நானும், செல்வராஜ×ம் ஒருநாள் அவரைப்பார்க்க சென்றோம்.
காலை 10 மணி இருக்கும். ஒரு சிறிய அறையில் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தார். எங்களைப்பார்த்தவுடன் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, `வா..செல்வராஜ்' என்றார். உடனே செல்வராஜ், `இவர்தான் ராஜா!' என்று என்னை அறிமுகம் செய்து
வைத்தான்.அதன்பின்னர் பஞ்சு அருணாசலம், `நீ ஏதாவது படத்திற்கு டிïன் போட்டு இருக்கிறாயா?, இருந்தால் கொஞ்சம் பாடிக்காட்டு, கேட்கலாம்' என்றார்.
உடனே நான், ஏற்கனவே மெட்டமைத்து வைத்திருந்த "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப்பார்த்தீங்களா'', "சுத்தச்சம்பா'' போன்ற பாடல்களைப் பாடிக்காட்டினேன். பாட்டுக்கு ஏற்ற தாளமாக பக்கத்தில் இருந்த டேபிளையும் லேசாக தட்டினேன்.
அவர் அந்தபாடல்களை ரசித்துக்கேட்டு விட்டு, `டிïன் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. இப்போது நான் எழுதுகின்ற படம் அனைத்தும் காமெடி படம்தான். ஏற்கனவே நான் எழுதி அதிக படங்கள் பாதியில் நின்று போனதால் எனக்கு `பாதிப்படம் பஞ்சு அருணாச்சலம்' என்று பேர் வைத்திருக்கிறது, திரைஉலகம்! இந்த நல்ல டிïன்களை காமெடிப் படத்தில் போட்டால், அதற்குரிய மரியாதை போய்விடும். நல்ல கதை அமைந்து அதில் இந்த பாடல்களுக்கு முக்கியத்துவம் வருகிற மாதிரி வந்தால்தான் படமும், இசையும் நன்றாக இருக்கும். அது போல எடுக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கின்ற நிலையில் எந்த புரோடிïசர் வரப்போகிறார்! ஒரு வேளை நானே தயாரிப்பாளராக வந்தால், உனக்கு கண்டிப்பாக சான்ஸ் தருகிறேன். அதுவரைக்கும் நீ பொறுத்து இருக்கணும்!' என்றார்.
"சரி சார்'' என்று அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வந்தோம்.
பஞ்சு சார் சொன்ன பதிலை, சாதாரணமாக எல்லோரும் சொல்கின்ற பதில்போல்தான் எடுத்துக்கொண்டேன். ஜீ.கே.வியின் வேலைகளில் அதைப்பற்றி மறந்தும் விட்டேன்.
இடையில் செல்வராஜ் ஒருநாள் வந்து `ஏய்.. பஞ்சுசார் கதை - வசனம் எழுதிய "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற படம் நல்ல ஹிட்டாகி விட்டது. அடுத்த படம் தொடங்கினால், நீதான் மிïசிக் டைரக்டர்! ரெடியா இருடா' என்றான். நான் அதையும் ஒரு பேச்சாக எடுத்துக் கொண்டேனே தவிர உண்மையாக எடுத்துக்கொள்ளவில்லை.
சில நாட்களுக்குப்பின் செல்வராஜ் என்னிடம் வந்து, பஞ்சு அருணாசலம் என்னை அழைப்பதாகக் கூறினான். போனேன்.
"வாய்யா'' என்று வரவேற்ற பஞ்சு சார், "செல்வராஜ் ஒன்றும் சொல்லலியா?'' என்று கேட்டார்.
`இல்லை' என்கிற மாதிரி தலையசைத்து, செல்வராஜை நோக்கினேன்.
"இல்லை சார். அதை நீங்களே சொன்னாத்தான் நல்லாயிருக்கும்'' என்று செல்வராஜ் சொன்னான்.
"செல்வராஜ் சொன்ன ஒரு கதையை நானே சொந்தமாகத் தயாரிக்கப்போறேன், நீதான் மிïசிக்!'' என்றார், பஞ்சு அருணாசலம்.
மகிழ்ச்சி தாங்காமல், "சரி அண்ணே'' என்றேன்.
கோவர்த்தனுடன் சேர்ந்து இசையமைக்க ஒத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.
"வரப்பிரசாதம் என்ற ஒரு படத்தை கோவர்த்தன் - ராஜா என்ற பெயரில் இருவரும் சேர்ந்து இசையமைக்கிறோம். அதே பெயரில் இதில் இசையமைத்து விடுகிறோமே'' என்றேன்.
"இங்கப்பாரு! நான் சான்ஸ் கொடுப்பதே உனக்கு! இதில் ஏன் அவர் பெயரைப்போட வேண்டும்? "கைராசி'', "பட்டணத்தில் பூதம்'' என்று பல படத்திற்கு கோவர்த்தன் தனியாகவே இசையமைத்திருக்கிறார். இது நான் உனக்கு கொடுக்கும் படம்'' என்று பஞ்சு சார் கூறினார்.
இதை தயங்கி தயங்கி நான் கோவர்த்தனிடம் சொன்னேன். "பரவாயில்லை; சான்ஸ் கிடைப்பது கஷ்டம். உன் பெயரில் செய்'' என்று அனுமதி கொடுத்தார்.
பஞ்சு சார், தன் தம்பி சுப்புவை தயாரிப்பாளராகப் போட்டு இந்த படத்தை எடுத்தார்.
செல்வராஜ் ஏற்கனவே சொல்லியிருந்த ஒரு கிராமத்து மருத்துவச்சி கதையை கேட்டு, சில மாற்றங்கள் செய்து, திரைக்கதையையும், வசனத்தையும் பஞ்சு சார் எழுதினார். இதை தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தார்கள்.
பாடல்களை எல்லாம் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை டைரக்டர் தேவராஜிடம் விளக்கிக்கூறி, ஏற்கனவே கம்போஸ் செய்யப்பட்ட பாடல்களை அவரை கேட்கவைத்தார் பஞ்சு.
உத்தமபாளையம் பகுதியில் பாடப்படுகின்ற நாட்டுப்பாடல். ஏற்கனவே சிறுவயதிலிருந்து நான் கேட்டு வந்த "புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி'' என்று தொடங்கும் ஒரிஜினல் பாடலை, நான் வேறுவகையாக மாற்றி அமைத்தேன்.
அதுதான் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' என்ற பாடலாகும். அந்த அன்னக்கிளி என்ற பெயரே படத்தின் பெயரானது.
அடுத்து "மச்சானை பார்த்தீங்களா'' என்ற பாடலை ஏற்கனவே அமர் (கங்கை அமரன்) எழுதி டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி.ரமணன் ஸ்டுடியோவில் பதிவு செய்து வைத்து இருந்தோம். அதை "அன்னக்கிளி'' படத்தில் பயன்படுத்த தீர்மானித்தோம்.
பூஜை தினத்தன்று இந்த 2 பாடல்களையும் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதுவார் என்று பஞ்சு சொன்னார்.
அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருந்தேன்.
ஒருகட்டத்தில், சாந்தமான கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் விளையாட்டில் பின்னடைவு வர, திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு, ராய் நடிகையுடனான நட்பையும் துண்டித்து விட்டாராம். இருப்பினும், ஏற்கெனவே இருந்த நட்பின் அடிப்படையில் அந்த கிரிக்கெட் வீரர் தனக்கு எப்படியாவது அவருடைய படத்தில் வாய்ப்பு தருவார் என்று ராய் நடிகை ரொம்பவும் எதிர்பார்த்தாராம்.

ஆனால், சாந்தமான கிரிக்கெட் வீரரின் மனைவியோ இவருக்கும் ராய் நடிகைக்கும் இருந்த நெருக்கத்தை மனதில் கொண்டு அவர் பக்கமே தலைகாட்டக் கூடாது என்று கிரிக்கெட் வீரரிடம் தடலாடியாக சொல்லிவிட்டாராம். அதன்பிறகே, ராய் நடிகைக்கு கல்தா கொடுத்துவிட்டு, வேறு நடிகையை படத்தில் ஒப்பந்தம் செய்தார்களாம்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் ரஜினி மகேந்திரா நிறுவனத்தின் ‘தார்’ என்ற ஜீப்பின் மேல் அமர்ந்திருப்பார். இந்த போஸ்டரை பார்த்த மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்க்யூட்டிவ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா, அந்த காரை தனது நிறுவனத்தின் அருங்காட்சியத்தில் வைக்க ஆசைப்படுவதாக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கு, காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், மிக்க நன்றி. அந்த வாகனத்தை தற்போது சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பில் பயன்படுத்தி வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் உங்களிடம் கொண்டுவந்து உறுதியாக சேர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு, ஆனந்த் மகேந்திராவுக்கு தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
‘காலா’ படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
அந்த மூன்று கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ‘சாட்டை’ பட நாயகி மஹிமா ஒரு நாயகியாகவும், ‘முனியாண்டி விலங்கியல் நான்காம் ஆண்டு’ பட நாயகி பூர்ணா மற்றொரு நாயகியாகவும், ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா மற்றொரு நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை சசிகுமார் தனது ‘சசிகுமார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் 10-வது படமாக தயாரிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








