என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    வெளியானது ‘தலை’ ‘விடுதலை’ பாடல்
    தல ரசிகர்களுக்கு அதிகம் எதிர்பார்த்த விவேகம் படத்தின் இரண்டாவது பாடலான ‘தலை’ விடுதலை பாடல் வெளியானது.சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து ‘தல’ அஜித் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
    இயக்குநர் சிவா எழுதிய  " தலை விடுதலை " பாடல் வலைத்தளத்தில் வெளியானது. இந்த பாடலுடைய வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியகின்றது.
    இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் பாடல் வரிகளை எழுதியவர் இயக்குநர் சிவா.இதுவே இவருடைய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.
    புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் `விக்ரம் வேதா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    `ஓரம்போ', `வா குவார்ட்டர் கட்டிங்' ஆகிய படங்களை தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வரும் நிலையில் படத்தை வருகிற ஜுலை 7-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

    இப்படத்தை கடந்த 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 3-7 ஆம் தேதி வரை திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அந்த வாரம் ரிலீசாகவிருந்த படங்கள் அனைத்தும் தள்ளிப்போயின. அதன்படி `விக்ரம் வேதா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற 21-ஆம் தேதி வெளியக இருக்கிறது.
    காலா படத்தில் நடிக்க வாங்க என்று ரஞ்சித் கூப்பிட மாட்டாரா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம் தனுஷ்
    நாடே கொண்டாடும் சூப்பர் ஸ்டாரை இயக்கும்போது கூட நான் இப்படித்தான் என்று காம்ப்ரமைஸ் ஆகாமல் இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்தை பார்த்து வியக்கிறது கோலிவுட்.

    இயக்குநர் ரஞ்சித் - நடிகர் ரஜினி கூட்டணி இணையும் இரண்டாவது படம் "காலா" .படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் பிரமாண்டமாக முடிந்தது. இந்த படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கின்றார்.
    ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    காலா படத்தில் நான் இளம் வயது ரஜினியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனக்கும் நடிக்க ஆசை தான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை என்றார் தனுஷ்.
    காலா படத்தில் நடிக்க வாங்க என்று ரஞ்சித் கூப்பிட மாட்டாரா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம் தனுஷ். ரஞ்சித்தின் போன் காலுக்காக வெயிட்டிங் என்கிறார் தனுஷ்.

    காலா படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என தனுஷ் துடிக்கிறார். ஆனால் இது என் படம் உங்கள் இஷ்டத்திற்கு கதையை மாற்ற மாட்டேன் என்று தனுஷை ஓரங்கட்டியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

    படவாய்ப்பு இல்லாததால் நடிகை ரியாசென் தனது பிக்னி படங்களை இணைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
    பாலிவுட்டில் அறிமுகமான ரியா சென் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடிக்கத் துவங்கினார். தமிழில் நடிகர் மனோஜ் குமாருடன் `தாஜ்மஹால்' படத்தில் அறிமுகமான நடிகை ரியா சென் மார்க்கெட் இழந்து சோர்ந்து போயிருந்தார்.

    இதையடுத்து அனைவருடைய கவனத்தையும், தனது பக்கம் ஈர்க்க கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர முடிவுசெய்துள்ளார். அதற்காக பிக்னியில் இருக்கும் சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் எதிர்பார்த்தபடியே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



    ரியா தற்போது பெங்காலி படங்கள் தவிர்த்து, குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர்கள் படத்தில் குத்தாட்டம் போட அழைத்தாலும் சம்மதம் தெரிவிக்கிறார்.

    ரியா தற்போது `ராகினி எம். எம்.எஸ்.2.2' வெப் சீரிஸில் சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிககைள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    திரையரங்குகளில் ரசிகர்கள் மீதான கட்டண சுமையை குறைக்க வேண்டும் என்று பட விழாவில் நடிகர் விஷால் பேசினார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ‘சகுந்தலாவின் காதலன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பி.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ளார். கதாநாயகியாக பானு நடித்துள்ளார் மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் கலந்துகொண்டு பேசியதாவது:-

    நடிகர்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கை இருப்பவர்கள் தான் சினிமாவில் ஜெயிக்கிறார்கள். இந்த படத்தின் கதாநாயகனுக்கு அது இருக்கிறது. திரைப்பட தொழிலுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து இருக்கிறது. அத்துடன் தமிழக அரசும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனால் சினிமா துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்று சினிமாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.



    தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் அதிகம் செலவிட வேண்டி உள்ளது டிக்கெட் கட்டணம் அதோடு ஆன்லைன் புக்கிங் கட்டணம், பார்கிங் கட்டணம், உணவு பண்டங்களுக்கான கட்டணம் என்றெல்லாம் அதிகம் செலவாகிறது.

    இந்த கட்டண சுமைகளை குறைத்து சரிசெய்ய வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்து படம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இப்படி நான் பேசுவதால் என்னை வில்லனாக நினைத்தாலும் கவலை இல்லை. சினிமாவில் அனைவரும் ஒரே குடும்பம் தான் ஒற்றுமையுடன் செயல்பட்டு சினிமா தொழிலை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு விஷால் பேசினார். விழாவில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டைரக்டர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் மற்றும் கதிரேசன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முதல் படத்துக்கு நீர்குமிழி என பெயரிட்டு சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர் என்று, சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
    இந்தியாவின் தலைச்சிறந்த சினிமா டைரக்டர்களுள் ஒருவர் பாலச்சந்தர். தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற, பாலச்சந்தர் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். நல்லமாங்குடியில் பாலச்சந்தருடைய வீடு இருந்த இடம், தற்போது ஆசிரியர் ஜெயராமன் என்பவருக்கு விற்கப்பட்டு அந்த இடத்தில் மழலையர் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டதன் பேரில் ஜெயராமன் குடும்பத்தினர் பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயிலின் இடது புறத்தில் பாலச்சந்தருக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினர். அந்த இடத்்தில் பாலச்சந்தருக்கு மார்பளவு வெண்கல சிலை வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    விழாவில் பாலச்சந்தரின் மனைவி ராஜம், சிலையை திறந்து வைத்தார். இதில் டைரக்டர் மணிரத்னம், வசந்த்சாய், தயாரிப்பாளர் பிரமிட்நடராஜன், பாலச்சந்தரின் குடும்பத்தினர் கந்தசாமி, புஷ்பா கந்தசாமி, கீதா கைலாசம், பிரசன்னா, விஷ்ணுபிரியா பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியபோது கூறியதாவது: -

    86 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் பிறந்த பாலச்சந்தர் என்ற மாமனிதர் மாற்று சினிமா தரப்போகிற கலைஞன் என்பதை இந்த மண் அறிந்திருக்காது. இவர் தாதாசாகேப் பால்கே விருது பெற போகின்ற பிள்ளை என்பதை உறவினர்கள் யாரும் அறிந்து இருக்கமாட்டார்கள். கமல், ரஜினி என்கிற 2 பெரும் கலைஞர்களை தமிழ் மண்ணுக்கு தரப்போகிறார் என்பதை கலையுலகம் அறிந்திருக்காது.

    கலையாக வந்தவன் இந்த இடத்தில் தான் சிலையாக போகிறான் என காற்று அறிந்திருக்காது. இந்த ஊரே ஒன்று சேர்ந்து பாலச்சந்தர் என்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதை கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பாலச்சந்தர் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் சமுதாயமும், இளைஞர்களும் கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

    சினிமாவுக்கு வருவது என்பதும், சினிமாவில் ஜெயிப்பது என்பதும் புல்லில் மேல் நடந்து பூப்பறிப்பது அல்ல. முள்ளில் நடந்து தேர் இழுப்பது. அவ்வளவு சுலபமானது அல்ல. பாலச்சந்தர் திரைப்படத்துக்கு வரும்போது நிறுவனங்கள், நடிகர்களின் ஆதிக்கத்தில் சினிமாத்துறை இருந்தது. நிறுவனங்கள் என்ற கோட்டையை உடைத்து, நடிகர்கள் என்ற பெருஞ்சுவரை தாண்டி, நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எல்லாம் தாண்டி இந்த கிராமத்தில் பிறந்த பாலச்சந்தர் புகழ் கொடியை நாட்டியிருக்கிறார்.



    சினிமா துறையில் நிலவி வந்த மூடநம்பிக்கையை உடைத்து, தனது முதல் படத்துக்கு நீர்குமிழி என பெயரிட்டார். இந்த பெயர் வைப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். சினிமா காட்சிகளால் தனது எண்ணங்களை, லட்சியங்களை தீட்டி காட்டியவர். கவிஞர் சொன்னதை சரியாக காட்சிப்படுத்த கூடிய ஒரே கலைஞன். “தண்ணீர், தண்ணீர்” என்ற படத்தில் பஞ்சத்தின் உச்சத்தை காட்டும் வகையில் ஒருவன், விறகுக்காக கோடாரியை எடுத்து கலப்பையை வெட்டி கொண்டிருப்பான்.

    கலப்பையும், ஏறு மாடும் எங்கள் கடவுள். அந்த கடவுளையே உடைத்து சாப்பிடுகின்ற சூழ்நிலையை காட்டி பஞ்சத்தின் உச்சத்தையே காட்சியாக அமைத்திருப்பார். பாலச்சந்தரிடம் பாட்டு எழுதுவது என்பது மிக கடினமானது. ஒருவரின் உச்சபட்ச திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய ஆற்றல்மிக்கவர். பாலச்சந்தர் ஒரு மகாகலைஞன். அவர் இல்லையென்றால் ஒரு புதிய தலைமுறை தோன்றியிருக்காது. பாலச்சந்தர் படங்களில் வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என்பது இல்லை.

    புரிந்து கொள்ளப்பட்ட படங்கள், புரிந்து கொள்ளாத படங்கள் என்று தான் உள்ளன. இந்த மண்ணில் சின்ன முணு முணுப்பு உள்ளது. அது இந்த ஊருக்கு பாலச்சந்தர் என்ன செய்தார்? என்பது. இந்த கேள்வி என் காதில் லேசாக விழுந்தது. அதற்கு நான் அவசியம் பதில் கூற வேண்டும். கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல. உங்கள் வார்டு கவுன்சிலர் அல்ல. அரசியல்வாதி அல்ல. நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்க கூடியவர் என்பது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அதர்வாவை 5 ஹீரோயின்கள் காதலிப்பதாக அதர்வாவை வைத்து படத்தை இயக்கியிருக்கும் ஓடம் இளவரசு தெரிவித்துள்ளார்.
    `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படம் குறித்து இயக்குநர் ஓடம் இளவரசு பேசியதாவது,

    ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு மதுரையில் நடத்தப்பட்டது. அதில் அதர்வா, ரெஜினா, அதீதி உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ரெஜினாவும், அதீதியும் நல்ல தோழிகளாகிவிட்டனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. அதில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் புதுமையாக இருக்கும்.

    ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் எல்லோருடைய கதாபாத்திரத்திலும் இருந்து வேறுபட்டு இருக்கும். ரெஜினாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். இப்படத்தில் அவர் மதுரை பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா, ஐஸ்வர்யா, ப்ரணிதா மூவரும் ஊட்டியில் படிக்கும் கல்லூரி நண்பர்கள். ரெஜினா மற்றும் அதீதி ஆகியோர் அதர்வாவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்களாக வருகிறார்கள்.



    படத்தில் நேஹா மாலிக் என்ற மற்றொரு நாயகியும் இருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் படத்தின் அடுத்த பாகத்திற்கு  லீட் வைத்துள்ளோம். `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' திரைப்படமும் பெண்களின் முதல் காதல் பற்றி அழுத்தமான ஒரு உணர்வை தரும். முதல்காதல் தான் சிறந்த காதல் என்பதை திரைக்கதையின் மூலம் அழுத்தமாக கூறியுள்ளோம்.

    படத்தில் அதர்வாவின் தந்தை, தீவிர ஜெமினி கணேசன் ரசிகர் என்பதால் அவருக்கு ஜெமினி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார். சூரி, சுருளி ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சுருளி ராஜன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படத்தின் துவக்கம் இருக்கும்.

    படத்தில் சீரியஸான காட்சி இரண்டு தான், அந்த காட்சிகளில் அதர்வா இருக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
    ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றத்தை உண்டாக்கும், இந்தத் துறைக்கும் பெரிய மரியாதையைத் தரும் என்று நடிகை சுருதிஹாசன் கூறயிருக்கிறார்.
    தான் யாருடைய உதவியாலும் சினிமாவில் நுழையவில்லை என்றும் தனது சொந்த முயற்சியே என்றும் தெரிவித்துள்ளார். தனது அப்பாவின் பங்கில் ஒரு சதவீத சாதனையை கூட தான் இதுவரை அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    தனது தந்தை நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் விரைவில் அந்த நிகழ்ச்சியை பார்ப்பேன் என்றும் கூறினார்.



    ஆண்களுக்கு தான் நமது நாட்டில் அதிக மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கின்றது. மேலும் ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுகின்றனர், பெண் குழந்தை என்றால் கண்டுகொள்வதில்லை. இத்தகைய சூழலுக்கு நமது சமூகமே காரணம் என்கிறார். ஆனால் தனது வீட்டில் முழு சுதந்திரமும், ஆண் பிள்ளை போன்றே வளர்த்துள்ளார்கள். தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நான் தான் என் குழந்தைக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    நான் ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை ஒரு வழி செய்துவிடுவேன். ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வரணும்னு எதிர்ப்பார்க்கிறேன். அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்தத் துறைக்கும் பெரிய மரியாதையைத் தரும்," என்றார்

    குழந்தைகளை கவனித்துக்கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை கஜோல் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்‌ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை கஜோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “தமிழில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். இந்த படம் 1997-ம் ஆண்டு வெளியானது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்துள்ளேன்.

    தமிழ் மொழியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழி தான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர். நான் தயங்கிய நேரத்தில், ‘இந்த கதாபாத்திரம் உங்களுக்குத்தான் நன்றாக அமையும். நீங்கள் நடியுங்கள், மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்’, என்று ஊக்கம் அளித்தனர். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் தமிழ் மொழியில் பேசி நடிக்க கஷ்டப்பட்டபோது தனுஷ், சவுந்தர்யா இருவரும் உதவி செய்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

    ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நான் நடிக்கும் வசுந்தரா எனும் கதாபாத்திரம் பெண்மைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும். மன வலிமையுள்ள, எல்லா வகையிலும் பெருமைமிக்க ஒரு பெண் எப்படி இருப்பாள்? அவளது குணாதிசயம் எப்படி இருக்கும்? என்பதுதான் வசுந்தரா கதாபாத்திரத்தின் அடையாளம். எனது இத்தனை ஆண்டு கால சினிமா பயணத்தில் இதுபோன்ற கதாபாத்திரம் எனக்கு அமைந்தது கிடையாது. வசுந்தரா கதாபாத்திரத்தில் ஒரு மிடுக்கான பெண்ணாக நான் வாழ்ந்திருக்கிறேன்.



    இந்த படத்தில் யாரும் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை. வெவ்வேறு மனநிலைகளுடன், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும், வெவ்வேறு எண்ணம் கொண்ட இருவர் சந்தித்தால் என்ன ஆகும்? என்பது தான் இப்படத்தின் கதை. இந்த இருவர் இடையே ஏற்படும் மோதல் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது. ரசிகர்கள் அதனை நிச்சயம் விரும்புவார்கள்.

    எனது குடும்பத்தை பொறுத்தவரை கணவர் அஜய் தேவ்கான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இந்த படத்தின் ‘டிரைலரை’ பார்த்து அவர் வெகுவாக பாராட்டினார். எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 25 குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வளர்க்க ஆசைதான். ஆனால் எனக்கு 2 குழந்தைகள் தான் கிடைத்து இருக்கிறார்கள். இரு கண்களாக உள்ளனர்.

    எனக்கு சினிமா மீதான மோகம் குறையாது. அதேசமயம் எனது குடும்பத்தையும் அக்கறையுடன் வழிநடத்தி கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகளை கவனித்துக்கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். பல நேரங்களில் நல்ல படங்களை தவறவிட்டு இருக்கிறேன், அதற்காக பல நேரங்களில் அழுததும் உண்டு. எனவே தொடர்ந்து நடிப்பேன்.

    எனது அழகுக்கு என்ன காரணம்? எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு வயதின் மீது நம்பிக்கை இல்லை. மனம் என்ன நினைக்கிறதோ, அது தான் முகத்தின் வெளிப்பாடாக அமையும். நல்ல மனதுள்ளவர்கள் அழகாக தெரிவார்கள். அந்த வசீகரத்துக்கு காரணம் இதுதான். அப்படி தான் நினைக்கிறேன்.

    ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறேன். ஆனால் அதற்கான நேரம் அமையவேண்டும். நல்ல கதையும் கிடைக்க வேண்டும். ‘பாகுபலி-2’ போன்ற படம் பல மொழிகளிலும் மக்களை கவர்ந்தது. மொழி என்பதை தாண்டி மக்களின் வரவேற்பு தான் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும்”.

    இவ்வாறு நடிகை கஜோல் கூறினார்.
    சினிமாவில் போட்டி அதிகமாகி விட்டது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை தமன்னா கூறியதாவது:-

    சினிமா என்பது கவர்ச்சி உலகம். இங்கு நடிகைகளை ரசிகர்கள் அழகு, கவர்ச்சியில் பார்க்கவே ஆசைப்படுகிறார்கள் என்று சிலர்பேசுகின்றனர். அழகு, கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் ஜெயித்து விட முடியாது. திறமை வேண்டும். காதல் காட்சிகளில் வந்து போவது மட்டும் நடிப்பு இல்லை.

    அதையும் தாண்டி தனித்தன்மையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பவர்களால் மட்டுமே திரையுலகில் நீடிக்க முடியும். நான் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கிறேன். திறமையான நடிகை என்று பெயர் வாங்கி இருக்கிறேன். நல்ல கதைகள் எனக்கு அமைந்ததால்தான் எனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது.



    பாராட்டு, புகழ் கிடைக்கும்போது சில நடிகைகளுக்கு தலைக்கனம் வந்துவிடுகிறது. அப்படிபட்டவர்கள் சில நாட்களிலேயே ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது நான் யார்? பணம் புகழ் எல்லாம் என்ன? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு சிறிது நேரம் தியான நிலையில் இருப்பேன்.

    அப்போது இவையெல்லாம் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் எனக்குள் ஏற்படும். அதை உணர்ந்ததால்தான் படங்கள் வெற்றி பெற்று பாராட்டுகள் குவியும்போது தலைக்கனம் வராமல் இருக்கிறது. ஒவ்வொருவரும் நீங்கள் யார் என்பதை உங்களுக்குள்ளேயே கேளுங்கள். வாழ்க்கை என்ன என்பது புரியும்.

    இதற்காக யாரிடமும் பயிற்சி எடுக்க தேவை இல்லை. சினிமாவில் போட்டி அதிகமாகி விட்டது. இங்கு திறமையான புதிய நடிகைகள் நிறையபேர் தினமும் வந்து கொண்டு இருக்கிறார்கள். திறமையை வளர்த்துக்கொள்பவர்கள் மட்டும் தாக்குப்பிடித்து நிற்கிறார்கள்.”

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    பி.மாதவன் டைரக்ட் செய்த "முருகன் காட்டிய வழி'' மூலமாக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஸ்ரீபிரியா, தொடக்கத்தில் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
    பி.மாதவன் டைரக்ட் செய்த "முருகன் காட்டிய வழி'' மூலமாக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஸ்ரீபிரியா, தொடக்கத்தில் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

    சினிமா ஆசை இல்லாமல் சர்ச் பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது.

    "நல்ல வாய்ப்பு வரும்போது சொல்லி அனுப்புகிறேன்'' என்று கூறியிருந்த டைரக்டர் பி.மாதவன், ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு அனுப்பினார்.

    ஸ்ரீபிரியா அவரைச் சந்தித்தார். மாதவன் "முருகன் காட்டிய வழி''யின் கதையைச் சொன்னார். ஏவி.எம்.ராஜனின் தங்கை வேடத்தில் ஸ்ரீபிரியா நடிக்க வேண்டும் என்று கூறினார்.

    சிறு வேடங்களில் நடிப்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ஆரம்பத்திலேயே விருப்பம் இல்லை. ஆனால், "முருகன் காட்டிய வழி''யில் ஏவி.எம்.ராஜனுக்கு தங்கை என்றாலும், படத்திலேயே மிக முக்கியமான பாத்திரம். எனவே ஸ்ரீபிரியா ஒப்புக்கொண்டார்.

    மேக்கப் டெஸ்ட்டின்போது, ஸ்ரீபிரியா கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. நெற்றி சின்னதாக இருப்பதாகக் கூறி, முன்புற நெற்றி முடியை பிளேடு வைத்து அகற்றி, மேக்கப் டெஸ்ட் நடத்தினார்கள்! இதனால் பள்ளிக்கு பஸ்சில் போய் வந்து கொண்டிருந்த ஸ்ரீபிரியா, பஸ்சில் ஏறியதும் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தால் நெற்றியை மறைத்துக்கொண்டு பயணம் செய்தார்!

    பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் சமயங்களிலும் இந்த `முகமறைப்பு' தொடர்ந்து இருக்கிறது.

    முகத்தைக்கூட காட்ட முடியாத சோகம், ஸ்ரீபிரியாவுக்குள் ஒரு கட்டத்தில் கோப அலைகளை எழுப்பியது. தன்னை சினிமாவில் நடிக்க அழைத்த டைரக்டர் பி.மாதவன் மீதே கோபப்பட வைத்தது.

    ஒருநாள் பள்ளி முடிந்ததும், நேராக டைரக்டர் பி.மாதவன் ஆபீசுக்கு போனார். ஏதோ, பட விஷயமாகப் பேச வந்திருப்பதாக மாதவன் நினைத்தார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு நடிக்க விருப்பமில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சல் குரலில் சொன்னார்.

    "வீணாக பயப்படாதே. மேக்கப் டெஸ்ட் `ஓகே' ஆகிவிட்டது. உன்னை நன்றாக நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!'' என்று மாதவன் கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்ல, கோபம் அடைந்தார், மாதவன்.

    "எத்தனையோ பேர் நடிப்பதற்கு ஆசைப்பட்டு தவம் கிடக்கிறார்கள். உனக்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இப்போது நீ மறுத்துவிட்டால், பிறகு இந்த வாய்ப்பு மீண்டும் வராது!'' என்று கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை சார்!'' என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

    ஆனால் டைரக்டர் மாதவன் விடுவதாக இல்லை. 2 மாதம் கழித்து, ஸ்ரீபிரியாவுக்கு மீண்டும் அழைப்பு அனுப்பினார். `ஏன் திரும்பவும் அழைக்கிறார்' என்று யோசித்தபடியே அவரைப் போய் சந்தித்தார்.

    "என்ன ஆனாலும் சரி. நடிக்கமாட்டேன் என்று தைரியமாக கூறிவிட்டுப் போனாய் அல்லவா? அந்த தைரியம்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. என் கதையின் அந்தக் கேரக்டர், உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். பிடிவாதம் செய்யாமல் நடி!'' என்று மாதவன் கூறினார்.

    ஸ்ரீபிரியாவின் தாயாரும், மாதவன் கருத்தை ஆதரித்தார். "டைரக்டர் சார் இவ்வளவு சொல்லும்போது நீ மறுப்பது சரியல்ல'' என்று எடுத்துச் சொன்னார். எனவே, நடிப்பதற்கு சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    முதல் படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "நடிப்பது என்று முடிவு எடுத்ததும், அதற்கேற்ப என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன். எங்கள் சர்ச் பார்க் பள்ளியின் எதிரே `சினிமா கட்- அவுட்'கள் வைப்பார்கள். அதில் பிரபல நடிகர் -நடிகைகள் படங்கள் பெரிய அளவில் பளிச்சென்று காணப்படும். `நாம் இப்போது நடிக்கப்போகிறோம். இனி நமக்கும் இதே இடத்தில் `கட்அவுட்' வைப்பார்கள்!' என்று எண்ணிக் கொண்டேன்.

    அன்றைய பிரபல சினிமா பத்திரிகைகளில் என் படத்தை அட்டையில் பிரசுரித்தார்கள். அதனால், பள்ளி மாணவிகள் மத்தியில் என் புகழ் பரவியது.''- இப்படிச் சொன்ன ஸ்ரீபிரியா, முதல் படம் "முருகன் காட்டிய வழி''யில் வசனம் பேசத்தான் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார்.

    டைரக்டர் பி.மாதவனிடம் உதவியாளர்களாக இருந்த தேவராஜ் -மோகன் இருவரில் மோகன்தான் ஸ்ரீபிரியாவுக்கு வசனம் பேச கற்றுக் கொடுத்தார். அதுவரை தமிழில் பேச, எழுதத் தெரியாத ஸ்ரீபிரியாவுக்கு தமிழில் சரளமாக பேசிப்பழக அவர் கொடுத்த வசனம் "தங்கப்பதக்கம்'' படத்தில் சிவாஜியிடம் மருமகளாக நடிக்கும் பிரமிளா பேசும் வசனம்.

    `மாமா! காஞ்சுப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா?''

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா சொன்ன பிறகு, படத்துக்கான 2 பக்க வசனத்தை படித்துக்காட்டினார், மோகன்.

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா தயங்கித் தயங்கி பேசினார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த டைரக்டர் பி.மாதவன், `பொண்ணு தேறுமா?' என்பது போல் மோகனிடம் கை அசைவில் கேட்டிருக்கிறார். மோகனோ, உதட்டைப் பிதுக்கி `தேறாது' என்பதுபோல் சொல்லியிருக்கிறார்!

    ஆனால், வெகு விரைவிலேயே எல்லோரும் ஆச்சரியப்படும்படி வசனத்தை தெளிவான உச்சரிப்புடன் பேசத்தொடங்கினார், ஸ்ரீபிரியா.

    "எனக்கு தமிழ் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இரண்டு தடவை படித்துக் காட்டினால் போதும். அப்படியே மனதுக்குள் கிரகித்துக் கொண்டு திருப்பிச் சொல்லிவிடுவேன். மோகன் சார் எனக்கான வசனத்தை இரண்டாவது தடவையாகச் சொன்னபோது, அப்படியே கடகடன்னு திருப்பிச் சொல்லி, அவரை ஆச்சரியப்படுத்தி விட்டேன். நான் பேசி முடித்ததும் கேமராமேன் பி.என்.சுந்தரம் சார் கைதட்டி பாராட்டினார்'' என்று `மலரும் நினைவு'களை பகிர்ந்து கொண்டார், ஸ்ரீபிரியா.

    இதன் பிறகு ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அங்கு நடிகர் சிவகுமார் வந்தார்.

    "படத்தின் சில காட்சிகளை டைரக்டர் மாதவன் சாருடன் சேர்ந்து பார்த்தேன். நன்றாக நடித்திருக்கிறாய். வசனத்தையும் அழகாகப் பேசியிருக்கிறாய். எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வருவாய்!'' என்று வாழ்த்தினார்.

    பூரித்துப்போனார், ஸ்ரீபிரியா.

    சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் - கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனிருத் இசையமைக்காதது குறித்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
    சவுந்தர்யா ரஜஜினாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் நடித்துள்ள `வேலையில்லா பட்டதாரி-2' தனுஷ் பிறந்தநாளான வருகிற ஜுலை 28-ஆம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர், தனுஷ், கஜோல், சவுந்தர்யா, சீன் ரோல்டன், சமுத்திரக்கனி, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலைப்பிரபு தாணு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    இதில் பேசிய தனுஷ், `வேலையில்லா பட்டதாரி-2' ஒரு ஆணாதிக்க படம் இல்லை. `வேலையில்லா பட்டதாரி' முதல் பாகத்தை போலவே ரசிக்கும்படி இருக்கும். இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெரும். முதல் பாகத்தில் அம்மாவை இழந்த மகன், அவனது வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறான் என்பதை படமாக்கியிருந்தோம். வேலையை இழந்து தவிக்கும் திருமணமான இளைஞன் படும் கஷடங்கள், முயற்சிகள் குறித்து இந்த பாகம் உருவாகி இருக்கிறது. கஜோலின் கதாபாத்திரம் படத்தின் அச்சாணியாக இருக்கிறது. அவரை தவிர்த்து வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றார்.



    `வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூன்றாவது பாகமும் வரும், அந்த பாகத்திலும் கஜோல் நடிப்பார் என்றும் தனுஷ் கூறியிருக்கிறார்.

    இரண்டாவது பாகத்தில் அனிருத், வேல்ராஜ் இல்லாதது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேட்ட கேள்விக்கு பதில் கூறிய தனுஷ், முதல் பாகத்தில் ஒரு இளைஞனுக்கு தேவையான துடிப்பு, உறுதி வேண்டும். எனவே அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம்.

    ஆனால் இரண்டாவது பாகத்திற்கு பொறுமையும், வாழ்க்கைக்கு உண்டான தத்துவத்தை உணர்ந்த ஒரு இசையமைப்பாளர் வேண்டும் என்பதால் சீன் ரோல்டனை அணுகினோம். இப்படத்தில் அவரது இசை அருமையாக வந்திருக்கிறது என்றார். அதே போல் ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு சமீர் தாஹிர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்தோம் என்றார்.
    ×