என் மலர்
தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.

தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 350 படங்களை தாண்டியிருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் `தொடர் நாயகியாக' உலா வந்த பெருமை இவருக்கு உண்டு.
ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக்கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்ரீபிரியாவின் பெரியப்பா. இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.
பெரியப்பாவின் நடனப்பின்னணியில் ஸ்ரீபிரியாவின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.
ஜெமினி தயாரித்த "மூன்று பிள்ளைகள்'' படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.
`ஸ்ரீபிரியா' என்பது சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர். நிஜப்பெயர் அலமேலு.
டைரக்டர் பி.மாதவன் இயக்கிய "முருகன் காட்டிய வழி'' என்ற படம் மூலம்தான் ஸ்ரீபிரியா சினிமாவில் அறிமுகமானார். ஆனால், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இயக்கி சிவாஜி -சாவித்திரி சிவன்- பார்வதியாக நடித்த "திருவிளையாடல்'' படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர்.
அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-
"அப்போது எனக்கு 6 வயது இருக்கும். `திருவிளையாடல்' படத்தில் பாலமுருகனாக நடிக்க சிறுவர்- சிறுமி தேவை என்று, `தினத்தந்தி'யில் விளம்பரம் வந்திருந்தது. என் பெரியப்பா, அந்தப் படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அவர் என்னிடம் "பாலமுருகனாக நடிக்க ஆலு (ஸ்ரீபிரியா) நீ வேணும்னா முயற்சி பண்ணேன்'' என்றார்.
பெரியப்பா இப்படிச் சொன்னதும், எனக்கும் ஆசை வந்துவிட்டது. நடிக்கும் ஆசை அல்ல; சினிமாவில் நடிக்கப்போனால் ஸ்கூலுக்கு லீவு போடலாமே என்ற ஆசைதான்!
முருகனாக நடிப்பதற்காக அம்மா என்னை அழைத்துப்போனார். அங்கே போனால், என் வயதில் சுமார் 200 பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் `மேக்கப் டெஸ்ட்' நடந்தது. அதில் என்னை மட்டுமே தேர்வு செய்தார்கள். என்னிடம் ஒரு வசனத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னார்கள்.
அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் படிக்கத் தெரியாது! நான் படித்த `சர்ச் பார்க்' கான்வென்டில் ஆங்கிலம்தான் பிரதானம். அதோடு நான் சிறப்புப்பாடமாக இந்தியை எடுத்திருந்தேன்.
எனக்கு, தமிழ் தெரியாவிட்டாலும் வசனத்தை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மலைக்குப்போன முருகனை அவ்வையார் சந்தித்து, சாந்தப்படுத்த முயற்சிக்கிற காட்சி அது.
முருகன் தங்கியிருக்கும் மலைக்கு அவ்வையார் சென்று, "முருகா! ஞானபண்டிதா!'' என்று அழைக்க, பதிலுக்கு முருகன், "ஓ அவ்வையா!'' என்று கேட்க வேண்டும்.
இந்தக் காட்சி பற்றி விளக்கி எனக்கான வசனத்தையும் சொல்லிக் கொடுத்து என்னை நடிக்க வைத்தார்கள். அது ஒத்திகை என்று கூட அப்போது எனக்குத் தெரியாது. என் நடிப்பு டைரக்டர் ஏ.பி.நாகராஜனுக்கு பிடித்துப்போக, மறுநாள் வருமாறு சொன்னார்கள். `கார் வரும்' என்றார்கள்.
மறுநாள் காரும் வரவில்லை; அழைப்பும் வரவில்லை. என்ன நடந்தது என்று போய்ப்பார்த்தால், நான் நடிக்க வேண்டிய அந்த பாலமுருகன் வேடத்தில் இன்னொரு பெண் நடித்துக் கொண்டிருந்தாள்! பிறகுதான் அந்த பாலமுருகன் வேடத்துக்கு, சிவாஜி சார் சிபாரிசு செய்த பெண்ணைப் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
பின்னாளில் நான் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்தபோது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து "நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். அதில் 9 கதாநாயகிகளில் நானும் இருந்தேன். இந்தப்படத்தில் நடித்துவிட்டு வரும்போது, ஏ.பி.நாகராஜனிடம் "சார்! நான் படத்தில் நடித்த இந்தக்காட்சி இருக்குமா? அல்லது திருவிளையாடல் படத்தில் `ஓ.கே' பண்ணிய பிறகு என்னை விலக்கியது மாதிரி இதிலும் செய்து விடுவீர்களா?'' என்று விளையாட்டாகக் கேட்டேன். அவரோ, பதறியபடி, "என்னம்மா நீ! சின்ன வயதில் நடந்ததைக் கூடவா இப்படி நினைவில் வைத்திருப்பாய்!'' என்று சொன்னார்.
ஸ்ரீபிரியா எட்டாவது படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நடன நிகழ்ச்சிகளை பிரபல `ஸ்டில் போட்டோகிராபர்' நாகராஜராவ் படம் எடுத்தார். விழாவைப் பார்க்க வந்த ஸ்ரீபிரியா நாகராஜராவ் எடுத்த படங்களில் விழுந்திருந்தார்.
படங்களை நாகராஜராவ் பிரிண்ட் போட்டு தயார் நிலையில் வைத்திருந்தபோது, டைரக்டர் பி.மாதவன் அங்கு வந்தார். தற்செயலாக ஸ்ரீபிரியாவின் படத்தைப் பார்த்த மாதவன் `நாம் எடுக்கும் படத்துக்கு இந்தப்பெண்ணும் சரியாக இருப்பாள்' என்று நினைத்தார். அன்று மதியமே ஸ்ரீபிரியா படித்த சர்ச்பார்க் பள்ளிக்கு சினிமா கம்பெனி கார் போயிற்று.
"அப்போது எனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வம் கிடையாது. ஏற்கனவே சிறு வயதில் ஏற்பட்ட சினிமா அனுபவம், `அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு' என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திருந்தது. அதோடு அப்போது ஸ்கூலில் `த்ரோபால்', `நெட்பால்' என்று விளையாட்டுகளில் `நம்பர் ஒன்'னாக இருந்தேன். என் `ஸ்போர்ட்ஸ்' ஆர்வம் என்னை `கேம்ஸ் டீச்சர்' ஆகவேண்டும் என்ற கனவில் வைத்திருந்தது. இப்படியிருக்கும்போது, தேடி வந்த நடிப்பு வாய்ப்பை ஏற்கத் தயங்கினேன்'' என்று கூறுகிறார், ஸ்ரீபிரியா.
ஆனால் அவர் தாயாரோ, "மாதவன் சார் பெரிய டைரக்டர். நீ நடிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அதை நேரில் போய் சொன்னால்தான் மரியாதை'' என்று சொல்ல, அம்மாவுடன் போய் டைரக்டர் மாதவனை பார்த்தார்.
மாதவன் அப்போது கதாசிரியர் பாலமுருகன் தயாரித்த "மாணிக்கத் தொட்டில்'' என்ற படத்தை டைரக்ட் செய்ய இருந்தார். அதில் ஜெமினிகணேசனின் 5 மகள்களில் ஒருவராக ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்கும் முடிவில்தான் அழைத்திருந்தார். எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்க விரும்பிய ஸ்ரீபிரியா, "5 பேரில் ஒருவராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை'' என்று கூறினார்.
"பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற வெற்றிப்படத்தை மாதவன் இயக்கியிருந்த நேரம் அது. அந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. "அப்படி ஒரு படத்தை தயாரிக்கும்போது, அழைப்பு அனுப்புகிறேன்'' என்று கூறினார், மாதவன். சொன்னதைச் செய்தார்.

பாடல் மட்டுமல்ல, வீணையிலும் கை தேர்ந்த வைக்கம் விஜயலட்சுமியை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.
2013-ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்ட்’ படத்தில் பாடிய ‘காற்றே.. காற்றே’ பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், தமிழிலும் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை தனது குரலால் கவர்ந்தவர்.
சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள வைக்கம் விஜயலட்சுமியின் இசை உலக சாதனையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாடல் மட்டுமல்ல, வீணையிலும் கை தேர்ந்த இவரை அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவிக்கும் விதமாக இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது. இந்த பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

நடிகை காஜல் அகர்வால் தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்று தகவல் வெளியாயின. ஆனால் அதனை காஜல் அகர்வால் மறுத்துள்ளார். அது குறித்து மேலும் விரிவாக பார்ப்போம்...
தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால்.
இவர் அஜித்துடன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராணாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ தெலுங்கு படமும் திரைக்கு வர இருக்கிறது.
இப்போது, விஜய்யின் ‘மெர்சல்’, தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். காஜலுக்கு தற்போது 32 வயது ஆகிறது. தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியது.
இதை மறுத்துள்ள காஜல் அகர்வால், “நான் ஏன் அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகேற்ற வேண்டும்? எனக்கு அப்படி ஒரு தேவை ஏற்படவே இல்லை. நான் உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். இதுவே என் அழகின் ரகசியம்” என்று கூறியுள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்துக்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
‘வேலைக்காரன்’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்குகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் இது. படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களிலேயே இதன் சேட்டிலைட் உரிமையை ஒரு டி.வி. நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.
சமந்தாவுக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.

கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன் என விஜயலட்சுமி கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை மேலும் விரிவாக பார்ப்போம்...
நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் ‘பண்டிகை’. இதில் கிருஷ்ணா- ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய விஜயலட்சுமி...,
நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்ன போது வீட்டில் அனைவரும் ஆதரவு கொடுத்தார்கள். படம் தயாரிக்க போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும், ‘ எதுக்கு’ ரிஸ்க் எடுக்கிற... இதெல்லாம் வேண்டாம் என்றார்கள்.
மேலும் ‘என் கணவர் பெரோஸ் மீதும் நம்பிக்கை இருந்ததால் நான் தயாரிப்பாளராக முடிவு செய்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக, பெருமையாக இருக்கிறது.

கிருஷ்ணா இதில் முதல் முறையாக அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். கதை எழுதும் போதே கயல் ஆனந்தி தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பெரோஸ் முடிவு செய்துவிட்டார். அவரது வேடம் சிறப்பாக வந்திருக்கிறது. ‘பருத்தி வீரன்’ சரவணன் மற்றொரு ஹீரோ போல் நடித்திருக்கிறார்.
இதன் மூலம் படம் தயாரிப்பது எவ்வளவு பெரிய கடினமான விஷயம் என்பதை தெரிந்து கொண்டேன். படம் எடுத்து முடிந்ததும் ஆராபிலிம்ஸ் மகேஷ் இந்த படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு படத்தை வெளியிடுகிறார். ஒரு கட்டத்தில் இனி படமே தயாரிக்ககூடாது என்று நினைத்தேன். ‘பண்டிகை’ படம் சிறப்பாக வந்திருப்பதை பார்த்த பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசைப்படுகிறேன்” என்றார். நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அஜீத் நடிக்கும் ‘விவேகம்’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. வெளிநாடுகளில் படமான இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் பகிர்ந்துள்ளதை பார்ப்போம்...
அஜீத்தின் ‘விவேகம்’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. காஜல் அகர்வால், இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்த படத்தை சிவா இயக்கி இருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.
விவேக் ஓப்ராய் வில்லனாக நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. இப்போது, இதை இயக்குனர் மறுத்துள்ளார். இவருடைய பாத்திரம் என்ன என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டிருக்கிறது. அஜீத் எதிர் மறை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. அதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

வெளிநாடுகளில் படமான இந்த படத்தில் நடித்தது பற்றி கூறியுள்ள விவேக் ஓப்ராய், ‘இயக்குனர் சிவா, அஜீத் அண்ணன் ஆகியோருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத வியக்கத்தகுந்த அனுபவம். தல ரசிகர்களே, கவுன்டவுன் ஆரம்பமாகி விட்டது’ என்று கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அஜீத்தையும், இயக்குனர் சிவாவையும் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

தமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன் என நடிகை சுருதிஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
நடிகை சுருதிஹாசன் தனது அனுபவம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...
“இசை துறையில் இருந்த நான் நடிகை ஆனேன். அப்பா எனக்கு எந்த சிபாரிசும் செய்தது இல்லை. நான் நல்லது செய்தாலும், தவறு செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு.
விதம் விதமான வேடங்களில் நடித்து அப்பா சாதித்து இருக்கிறார். நான் இதுவரை சாதிக்கவில்லை.
இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நமது சமூக அமைப்பு அப்படி. காரணம் ஆண்களுக்கு தான் நமது நாட்டில் மரியாதை அதிகம். ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுவார்கள். பெண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம் இல்லை. ஆனால் எங்கள் வீட்டில் அப்படி அல்ல. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால், நான் தான் என் குழந்தைக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
நான் ஒரு தமிழ்பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை உண்டு- இல்லை என்று செய்துவிடுவேன். மும்பையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லா மாநிலங்களையும் சேர்த்து ‘மதராசி’ என்று கிண்டல் செய்வது போல சிலர் பேசுவது உண்டு. அவர்களுக்கு நான் தமிழ்நாட்டை பற்றி வகுப்பு எடுப்பேன்.
இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. இதுவரை அது பற்றிய எண்ணம் இல்லை. அப்படி ஒருவாய்ப்பு வந்தால் அது வரம்.
நான் இன்னும் நடிப்பில் திருப்தி அடையவில்லை. தெலுங்கில் அதிர்ஷ்டகாரி, அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று மாற்றி மாற்றி சொல்கிறார்கள். எனக்கு எல்லாம் கிடைத்து இருக்கிறது. அடுத்து என் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.
என் தங்கை முதல் தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஜி.எஸ்.டி. பற்றி தெரியாது. ஆனால் என்காசு என் கையில் இருந்தால் சந்தோஷம்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராஜ சுப்பிரமணியன் இயக்கத்தில் உதய் கார்த்திக் - சஹானா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இவளுக இம்சை தாங்க முடியல’ படத்தின் முன்னோட்டம்.
ரூல் பிரேக்கர்ஸ் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘இவளுக இம்சை தாங்க முடியுல’. வி.என். ராஜ சுப்ரமணியன் இதில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். சஹானா நாயகியாக நடித்துள்ளார். டி.வி. புகழ் சிவகாந்த் முழுநீள காமெடியனாக கலகலப்பூட்டுகிறார்.
படம் முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. எந்தப் படத்திலும் இடம் பெறாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. வயதான பாத்திரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

இது ஒரு முழுநீள டிராவல் காமெடி படம்.
படம் பற்றி கூறிய இயக்குனர் ராஜ சுப்பிரமணியன்...
“சமூக ஊடகங்கள் மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா புறப்படுகிறான் நாயகன். அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும் நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது. இதன் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.
ஒளிப்பதிவு - ஏ.வி.வசந்த், இசை - மலேசியப்பாப் இசைக் கலைஞர் கேஷ்வில்லன்ஸ், எடிட்டிங் - வெங்கட்ரமணன், நடனம் - காதல் கந்தாஸ்.
‘இவளுக இம்சை தாங்க முடியல‘ படம், இம்மாத இறுதியில் வெளியாகிறது.

ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி - அத்னான் சித்திக் - சாஜல் அலி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள `மாம்' படத்தின் விமர்சனம்.
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் ஸ்ரீதேவி. அத்னான் சித்திக் ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இதில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் சாஜல் அலி. சாஜலும் ஸ்ரீதேவி வேலை பார்க்கும் பள்ளியிலேயே படிக்கிறாள். ஸ்ரீதேவிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனினும் சாஜல் அலியை, தன் மகளாக பார்க்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள சாஜல் அலி மறுக்கிறாள். மாறாக ஸ்ரீதேவியை மேம் என்றே அழைக்கிறாள்.
இவ்வாறாக நாட்கள் மெல்ல கடந்து செல்ல, தன்னுடன் படிக்கும் தோழியின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாஜல் அலி செல்கிறாள். இந்நேரம் பார்த்து வேலை விஷயமாக அத்னான் சித்திக் வெளியூர் சென்று விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் சாஜல் வராததால் ஸ்ரீதேவி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க, சாஜல் அங்கு இல்லை. சாஜலுடன் படிக்கும் சக மாணவன், அவனது நண்பர்கள் இணைந்து சாஜலை கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விடுகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் வருகிறார். அவரது பிரயாசையின் பேரில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றாவாளிகள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.
தன்னை இந்த நிலைமைக்கு ஆழ்த்தியவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லையே என்று சாஜல் மனக் கஷ்டத்தில் குமுறுகிறாள். மகளின் இந்த நிலைமையை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ரீதேவி, குற்றவாளிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதன்படி துப்பறிவாளரான அக்ஷய் கண்ணாவின் உதவியுடன், குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார்? எந்த மாதிரியான அவர்களுக்கு தண்டனை வழங்கினார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? சாஜல் அலி, ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. பள்ளியில் ஆசிரியராகவும், வீட்டில் அம்மா, மனைவி என ஒரு குடும்ப பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழிவாங்குவதிலும், அதற்கான முடிவுகளை எடுப்பதிலும் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.
பாகிஸ்தானின் பிரபல நடிகரான அத்னான் சித்திக் ஒரு தந்தையாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் ஓட்டத்திற்கே அச்சாணியான சாஜல் அலி, ஸ்ரீதேவியை எதிர்க்கும் மகளாகவும், தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் மனம் குறுகி கஷ்டப்படுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தானச் சேர்ந்த இவரை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது.

நவாசுதீன் சித்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக, தான் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்கிறார். அதேநேரத்தில் குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அவர் எடுக்கும் முயற்சியும் சிறப்பாக உள்ளது. அக்ஷய் கண்ணா படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து சென்றாலும், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக அவரது வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில், பெண்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையாது. எந்த நேரத்திலும் பெண்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சந்தர்பங்கள் உருவாகலாம். இவ்வாறு பெண்களுக்கு இளைக்கப்படும் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. மேலும் அத்தகைய நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குற்றச் செயலுக்கு ஆளாக்கப்பட்டால், அந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும். அந்த பெண்ணின் குடும்பத்தார் எந்தளவுக்கு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தின் மூலமாக விளக்கியிருக்கும் ரவி உதயவாரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் படத்தை பார்க்க, ஒரு ஆவணப்படத்தை பார்த்த அனுபவமே இருக்கிறது. அந்தளவுக்கு படத்தின் திரைக்கதை மெல்ல செல்கிறது. மற்றபடி படம் ஒரு நல்ல செய்தியை எடுத்துரைக்கிறது.
இவ்வாறாக மெதுவாக நகரும் திரைக்கதையை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பார்க்கும் போது, பொறுமையாக பார்க்க முடிகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `மாம்' பொறுமையானவள்.

என்னைப் போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு ஜெயம்ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என சாயிஷா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
இயக்குனர் விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. இவர் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் பேத்தி. அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி நடிக்கும் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார். வேறு சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழ் படங்களில் நடிப்பது குறித்து சாயிஷா கூறும் போது....

“தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள எனக்கு ‘வனமகன்’ படத்தில் தமிழ் முன்னணி நடிகர் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால் முதலில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. ஆனால் நான் சந்தித்த முதல் நாளே அவர் சகஜமாக பழகினார். தமிழுக்கு நான் புதுவரவு. என்றாலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் நடந்து கொண்டார். அது அவர் மீது எனது மரியாதையை அதிகப்படுத்தியது. சில காட்சிகளில் நான் அதிக டேக் வாங்கினாலும், அவர் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் மீண்டும் மீண்டும் என்னுடன் நடித்தார்.
தமிழ் வசனம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு, அதை புரிந்து கொள்ள உதவி செய்தார். என்னைப் போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு ஜெயம்ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்றார்.

பரத் நடிப்பில் வெளிவந்த ‘காதல்’ படத்தில் நடித்த விருச்சககாந்த் பிச்சை எடுத்துவருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவருக்கு நடிகர்கள், இயக்குனர் உதவி வழங்கியுள்ளனர்.
பரத்-சந்தியா நடித்த ‘காதல்’ படத்தில் நடித்தவர் விருச்சககாந்த். இவர், தாய்- தந்தை மரணத்துக்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்டார். சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அவரை நடிகர் சாய் தீனா, இயக்குனர் மோகன் ஆகியோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். நடிகர் அபி சரவணன், ‘ஓவியா’ பட தயாரிப்பார் காண்டீபன் ஆகியோர் உடைகள், புதுசெல்போன் வாங்கி கொடுத்தனர்.
சென்னையில் நடந்த ‘வேகத்தடை’ குறும்பட விழாவின் போது அபி சரவணன் ஒரு காசோலையை விருச்சகாந்துக்கு வழங்கினார். மன்சூர் அலிகான் அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பெங்களூரை சேர்ந்த கிரிஷ், விருச்சககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதாக கூறினார்.

விருச்சககாந்த் குடி பழக்கத்துக்கு அடிமையானதால் இப்படி இருப்பதை புரிந்து கொண்டனர். இதையடுத்து, அவரை தீனா, மோகன் ஆகியோர் ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் குணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. புதிய கட்டண விவரத்தை கீழே பார்க்கலாம்.
சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளது. 100 ரூபாய்க்கு குறைவான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிட்டது.
ஆனாலும் உள்ளாட்சி கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் 3-ந்தேதியில் இருந்து தியேட்டர்களை மூடி போராட்டத்தில் குதித்ததாலும் புதிய சினிமா டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.
தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட இருந்த கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், இன்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியை மட்டும் சேர்த்து புதிய டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கனவே ரூ.120, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் விலைகள் இருந்தன. இன்று முதல் ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாய் 60 காசு என்றும் ரூ.100 டிக்கெட் கட்டணம் ரூ.128 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் 11 ரூபாய் 80 காசு என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.
சாதாரண குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.50 டிக்கெட் கட்டணம் ரூ.59 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் ரூ.11.80 என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.30 டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் 40 காசு என்றும் ரூ.5 டிக்கெட் கட்டணம் 5 ரூபாய் 90 காசு என்றும் மாற்றி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.