தொடர்புக்கு: 8754422764

புதுடெல்லி அருகே இரண்டு விமானங்கள் மோதியதில் 349 பேர் பலியான நாள்: 12-11-1996

புதுடெல்லி அருகே சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசகஜஸ்தானின் இல்யூஷின் விமானமும் நேருக்கு நேர் மோதியது. இதில் 349 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பதிவு: நவம்பர் 12, 2019 05:27

ஆஸ்திரியா குடியரசாகிய நாள்: 12-11-1918

ஆஸ்திரியா 1918-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி குடியரசு நாடானது.

பதிவு: நவம்பர் 12, 2019 05:26

இந்தியாவின் தேசிய கல்வி நாள்: நவம்பர் 11

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது.

பதிவு: நவம்பர் 11, 2019 03:56

வாஷிங்டன் அமெரிக்காவின் 42-வது மாநிலமாக இணைக்கப்பட்ட நாள்: 11-11-1889

வாஷிங்டன் அமெரிக்காவின் 42-வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

பதிவு: நவம்பர் 11, 2019 03:56

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள்: 10-11-2006

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை கொழும்பில் சுடப்பட்டார்.

பதிவு: நவம்பர் 10, 2019 05:42

நைஜீரியாவில் சுற்றுச்சூழல் ஆதரவாளர் கென் சரா வீவா உள்பட 8 பேர் தூக்கிலடப்பட்ட நாள்: 10-11-1995

நைஜீரியாவில் சுற்றுச்சூழல் ஆதரவாளர் கென் சரா வீவா உள்பட 8 பேர் தூக்கிலடப்பட்டனர்.

பதிவு: நவம்பர் 10, 2019 05:37

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் இறந்த தினம்: 9-11-1988

தேங்காய் சீனிவாசன், 1970-1980-களில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர். இவர் 'கல் மணம்' என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார்.

பதிவு: நவம்பர் 09, 2019 04:50

உத்தரகாண்ட் மாநிலம் உருவாகிய நாள்: 9-11-2000

இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம் 2000, நவம்பர் 9-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலம் ஆனது.

பதிவு: நவம்பர் 09, 2019 04:44

மொன்டானா ஐக்கிய அமெரிக்காவுடன் 41-வது மாநிலமாக இணைந்த நாள்: 8-11-1889

மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 41-வது மாநிலமாக 1889-ல் இணைந்தது.

பதிவு: நவம்பர் 08, 2019 03:46

ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்த நாள் - நவ. 8- 1939

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லரை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் இருந்து அவர் உயிர் தப்பினார்.

பதிவு: நவம்பர் 08, 2019 03:45

சிறந்த முருக பக்தரும், ஆன்மீகவாதியுமான கிருபானந்த வாரியார் மறைந்த நாள் - நவ.7, 1993

லண்டனில் இருந்து திரும்பும் வழியில் விமானப் பயணத்திலேயே நவம்பர் 7-ஆம் தேதி கிருபானந்த வாரியார் காலமானார்.

பதிவு: நவம்பர் 07, 2019 01:42

நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் - நவ.7, 1954

நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார்.

பதிவு: நவம்பர் 07, 2019 01:42

கொலம்பியாவில் 11 நீதிபதிகள் உள்பட 115 பேர் கொலை செய்யப்பட்ட நாள்: 6-11-1985

1985-ம் ஆண்டு இதே தேதியன்று கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகளால் 11 நீதிபதிகள் உள்பட 115 பேர் கொலை செய்யப்பட்டனர்.

பதிவு: நவம்பர் 06, 2019 02:36

ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் - நவ.6- 1860

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள். குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இவர்.

பதிவு: நவம்பர் 06, 2019 02:36

அமெரிக்க அதிபராக பிராங்களின் ரூஸ்வெல்ட் 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் - நவ.5 -1940

பிராங்கிளின் ரூஸ்வெல்ட் 1882-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி பிறந்தார்.

பதிவு: நவம்பர் 05, 2019 03:40

ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள்: 5-11-2006

ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு நவம்பர் 5, 2006-ல் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பதிவு: நவம்பர் 05, 2019 03:40

ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி படுகொலை செய்யப்பட்ட தினம்: 04-11-1921

ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி 1921-ம் ஆண்டு இதே தேதியில் டோக்கியோ நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

பதிவு: நவம்பர் 04, 2019 02:23

வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள்: 4-11-1861

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள்.

பதிவு: நவம்பர் 04, 2019 02:23

கொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்ற நாள்: 03-11-1903

1903-ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 3) கொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.

பதிவு: நவம்பர் 03, 2019 01:55

ஈ.வி. சரோஜா நினைவு தினம் - நவம்பர் 3, 2006

ஈ.வி. சரோஜா அவர்கள் நவம்பர் 3, 2006 அன்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

பதிவு: நவம்பர் 03, 2019 01:55

முதன் முதலில் இந்தியாவில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீசியஸ் பயணம் நவ.2 - 1834

முதன் முதலாக 75 இந்திய ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மொரீசியஸ் சென்றனர்.

பதிவு: நவம்பர் 02, 2019 03:47