என் மலர்
கேரளா
- உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
- கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசனில் 30.56 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாகவும், 332.77 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை, அப்பம் மற்றும் அரவணை ஆகிய புனித பிரசாதங்கள், ரூம் வாடகை, ஏலம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த வருவாய் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தை விட இது குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகமாகும். கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை 80.25 கோடியாக இருந்தது.
இன்று மதியம் வரை 30,56,871 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் 37,521 பேர் வந்துள்ளனர். மண்டல பூஜையான இன்று மதியம் 1 மணி வரை 17,818 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடம் மண்டல பூஜை வரை 32,49,756 பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
நேற்று சுவாமி ஐயப்பனுக்கு புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சபரிமலையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெற்று, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.
- இந்தியாவின் ஷபாலி வர்மா 79 ரன்கள் குவித்தார்.
- இந்திய அணி டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
திருவனந்தபுரம்:
இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 77வது வெற்றியாக அமைந்தது. இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் ஹர்மன்பிரீத்.
ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 76 வெற்றிகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தற்போது அந்த சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் முறியடித்துள்ளார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 13.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திருவனந்தபுரம்:
இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் தீப்தி சர்மா இந்தப் போட்டியில் 3 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் சாதனையை சமன் செய்தார் தீப்தி சர்மா. இதுவரை 131 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் இரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், தீப்தி சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 42 பந்தில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.
- காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் 2 சுயேட்டைகள் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யலாம் என்ற நிலை நிலவியது.
- அனைவரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் ஆவர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் கடந்த 13-ந்தேதி வெளியாகின. அதில் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
மாநகராட்சிகளில் கொச்சி, திருச்சூர், கொல்லம், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மாநிலத்தின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கூட்டணி கோழிக்கோட்டிலும், மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க.வும் கைப்பற்றியது.
45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை இந்த முறை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இங்குள்ள 101 வார்டுகளில் 50-ல் பா.ஜ.க.வும், 29-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 19-ல் காங்கிரசும், 2 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர்.
இந்தநிலையில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், கொல்லம், திருச்சூர் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் காலை 10.30 மணிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது.
திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக வி.வி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் 2 சுயேட்டைகள் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யலாம் என்ற நிலை நிலவியது. இந்த நிலையில் சுயேட்டை வேட்பாளர்களின் ஒருவர், பாரதிய ஜனதாவுக்கு தனது ஆதரவை வழங்கியதால் தனிப்பெரும்பான்மை பெற்று ராஜேஷ் மேயராக தேர்வானார்.
கொச்சி மாநகராட்சியின் மேயராக வி.கே. மினி மோல், கண்ணூர் மேயராக இந்திரா, திருச்சூர் மேயராக டாக்டர் நிஜி ஜஸ்டின், கொல்லம் மேயராக ஹபீஸ் ஆகியோர் தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் ஆவர். புதிய மேயர்களாக தேர்வானவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
- முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
- இன்றைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
திருவனந்தபுரம்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
இதில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
இலங்கை அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- நெடுமுடியில் கோழிகளுக்கும், பிற பஞ்சாயத்துகளில் வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன.
இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்படி ஆலப்புழா மாவட்டத்தில் நெடுமுடி, செருத்தானா, கருவட்டா, கார்த்திகப்பள்ளி, அம்பலப்புழா தெற்கு, புன்னப்ரா தெற்கு, தகழி மற்றும் புறக்காடு பஞ்சாயத்துகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது. இதில் நெடுமுடியில் கோழிகளுக்கும், பிற பஞ்சாயத்துகளில் வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல் கோட்டயம் மாவட்டத்தில் குருபந்தரா, மஞ்சூர், கல்லுபுரக்கல் மற்றும் வேலூர் வார்டுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, கோழிகள் மற்றும் காடைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
- அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சுரபி நகர் பகுதியில் கரோல் பாடிச் சென்ற 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை வழிமறித்துள்ளார்.
அப்போது, சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், சிறுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்தச் சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதுடன் இசைக்கருவிகளையும் அஸ்வின் ராஜ் சேதப்படுத்தியுள்ளார். அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் சிபிஐ(எம்) கட்சியினர் கூறுகையில், அந்தச் சிறுவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் கட்சியின் இசைக்கருவிகளைச் சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அஸ்வின் ராஜ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
- பள்ளிகளில் பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது.
கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாதி, மதம் கடந்து கல்வி கற்கும் இடம் பள்ளி, அங்கு பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக உணர்வு மிக்க கேரளாவில் பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
- எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
- ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.
ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.
நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.
- பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.
- அமலாக்கத்துறைக்கு விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பேசப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.
இதற்கு அப்போதைய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.
முதலில் 4 கிலோ தங்கம் வரை அபகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர்தான், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர். அதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளும் உடந்தையாக இருந்த தகவலும் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடியை தந்தது.
பின்னர் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்குழு கையிலெடுத்தது. முதற்கட்டமாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்த 10 பேரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கையை தொடர்ந்தனர். அந்தவகையில் இதுவரை உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, பத்மகுமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பத்மகுமார் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழுவினர் தயாராக இருந்தனர்.
அதில், 2017-ம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் செயலாளராக பணியாற்றிய ஜெயஸ்ரீயும் ஒருவர். இதனை தொடர்ந்து முன்ஜாமின் கேட்டு அவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பிறகு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 2017-ம் ஆண்டு திருவிதாங்கூர் தேவஸ்தான செயலாளராக பொறுப்பேற்றதாகவும், இந்த காலக்கட்டத்தில் சபரிமலை தொடர்பான எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை என்றும் கூறியிருந்தார். எனவே தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஜெயஸ்ரீயை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதே சமயத்தில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிறப்பு விசாரணைக்குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அப்போது, தங்கம் அபகரிப்பு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவினர் முதல் தகவல் அறிக்கையாக தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை, இந்த வழக்கின் விசாரணையை கையிலெடுக்க முடிவெடுத்தது. அதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அதற்கு சிறப்பு விசாரணைக்குழு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றி கொல்லம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஆளும்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் பங்கஜ் பண்டாரி மற்றும் நகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
- விமானம் கேரளாவில் பயணித்தபோது தரையிறங்கும் கியரில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- பயணித்த 160 பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கும் அங்கிருந்து கேரளாவுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் 160 பயணிகள் இருந்தனர். இன்று காலை இந்த விமானம் கேரளாவில் பயணித்தபோது தரையிறங்கும் கியரில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டறிந்த விமானி, விமான நிலைய ஆணையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து அந்த விமானத்தை அவசரமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது.
விமானம் அவசரமாக தரையிறங்குவதை தொடர்ந்து விமான நிலையத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அதன்பிறகு காலை 9.07 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதில் பயணித்த 160 பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.
ஜெட்டா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்த ஒரு வெளிநாட்டு பொருளால் விமானத்தின் டயரில் சேதம் ஏற்பட்டதாகவும், இது கண்டுபிடிக்கப்பட்டதும் விமானத்தை அவசரமாக கொச்சியில் தரை இறக்கியதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.






