என் மலர்
சினிமா செய்திகள்
- இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது.
- ‘இரும்புக் கை மாயாவி’ கதையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'புஷ்பா-2' படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளது தற்போது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனை சந்தித்து பேசி இப்படத்தை உறுதி செய்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு தொடங்கி 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யாவுக்கு சொன்ன 'இரும்புக் கை மாயாவி' கதையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார்.
- ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் பாலய்யா நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.
'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், 'ஜெயிலர்2' படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக இப்படத்தின் வில்லனாக நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
- போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சந்தானம் சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சந்தனத்தை ரசிகர்கள் செல்லமாக சாண்டா என்று கூப்பிடும் நிலையில், சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டா என்று ரசிகர்கள் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
- இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த படம் 'சென்சார் போர்டு' ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. படத்தில் சில காட்சிகளுக்கு 'சென்சார் போர்டு' எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை படக்குழுவினர் ஏற்க தயாராக இல்லை என்பதால் படம் தற்போது மறு தணிக்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இம்மார்டல் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தின் இசையில் சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் அவரது 25-வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13 மற்றும் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இம்மார்ட்டல் படத்தின் திகிலூட்டும் டீசர் வெளியானது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இத்தயாரிப்பு நிறுவனத்தின் புதுப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த புதிய படத்தை ஃபேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதன் அறிவிப்பு நேற்று வீடியோவாக வெளியானது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 9வது படத்தின் பர்ஸ்ட் லுக், டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும், இப்படத்திற்கு தாய் கிழவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான பல படங்கள் வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.
- ராஷ்மிகா மந்தனா நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர், ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'மைசா' படத்தின் 'First Glimpse' வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை ரவீந்திர புல்லே இயக்கியுள்ளார்.
- நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த படத்தின் டீசர் நேற்று உலகெங்கிலும் வெளியாகியது.
நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இந்த நிலையில் யூடியூப்பில் படத்தின் டீசரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
தொடர்ந்து ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள், பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
- கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை இப்படத்தில் காட்டியுள்ளனர்.
98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது.இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் இப்படம் தேர்வாகியுள்ளது.
கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை உயிரோட்டத்துடன் இப்படத்தில் காட்டியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை இப்படம் நம் கண்முன் எடுத்துக்காட்டியது.
இந்நிலையில், இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் போட்டிக்குத் தகுதிபெற்ற 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் மீது கதைத்திருட்டு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பூஜா சாங்கோய்வாலா, தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பூஜா தனது மனுவில், "அந்தப் படத்தைப் பார்த்தபோது, தயாரிப்பாளர்கள் எனது புத்தகத்தின் தலைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாகப் பிரதி எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தேன். இதில் அதன் காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு, நிகழ்வுகளின் வரிசை ஆகியவை அடங்கும்" என்று கூறியுள்ளார்.
தர்மா நிறுவனம் தனது புத்தகத்தின் அதே தலைப்பைப் பயன்படுத்தியதன் மூலம் 'அப்பட்டமான ஏமாற்றுச் செயலைச் செய்துள்ளது', இது 'தற்செயலாக இருக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.
ஹோம்பவுண்ட் படத்தின் திரைக்கதை 2022-ல் உருவாக்கப்பட்டது. இது அவரது நாவல் வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவிடம் நேர்காணல் நடந்தது. இதில், விக்ரம் பிரபுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரது பதிலும்..
*சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளீர்கள். இந்த பயணத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது என்ன உணர்கிறீர்கள்?
உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வு. 13 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அது எப்படி போய்விட்டது என்றே தெரியவில்லை. இந்தப் பயணம் எனக்கு வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம்—எல்லாவற்றையும் காட்டியுள்ளது. அதைவிட முக்கியமாக, மனிதர்களை புரிந்துகொள்ளவும், வாழ்க்கையை புரிந்துகொள்ளவும் கற்றுக் கொடுத்துள்ளது.
*ஆரம்பத்தில் சினிமா குறித்து உங்கள் கனவுகள் என்ன?
ஆரம்பத்தில் எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் ஒரு கனவு இருந்தது. சினிமா என்றால் இது தான், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை. ஆனால் களத்தில் இறங்கிய பிறகு தான் புரிந்தது, சினிமா என்பது கனவு மட்டும் அல்ல, அது ஒரு பெரிய அமைப்பு, ஒரு தொழில், ஒரு குழு வேலை.
*25-வது படம், மைல்ஸ்டோன்ஸ், இவைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்?
எனக்கு எண்கள் முக்கியமல்ல. அந்த காலகட்டத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன மாற்றம் அடைந்தேன் என்பதே முக்கியம். Milestones என்பது ஒரு நினைவுக் குறிப்பு மட்டும்.
*சிறை படம் உங்களை ஈர்த்த காரணம்?
கதை தான். அது மிகவும் நேர்மையாக இருந்தது. போலீஸ் அமைப்பு, சமூகத்தின் பார்வை, மனித உணர்வுகள்—எல்லாம் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருந்தது.
*சிறை ஒரு controversial படம் தானா?
இது controversial படம் அல்ல. ஆனால் இது கேள்விகள் கேட்கும் படம். ஒவ்வொருவரும் இதில் இருந்து தங்களுக்கு ஏற்ற ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும்.
*போலீஸ் கதாபாத்திரத்துக்காக தயாரானது எப்படி?
அது ஒரு பெரிய அனுபவம். உடல் மாற்றம் மட்டுமல்ல, மனநிலையும் மாற வேண்டும். Body language, discipline, mentality—இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது வாழ்க்கையிலும் பயன்படும் பாடங்கள்.
- டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என்று தெரிவித்து இருந்தார்.
- ஏமாற்றம் அவளை உடைக்கவில்லை…
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையதுதான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கூறி ஜாய் கிரிசில்டா பதிவிட்டு வந்தார். மேலும் என் மகன், அவன் அப்பா செய்வது போலவே விரல்களை மடக்குகிறான். ஒரே ஜீன். உங்களுக்கு இதை விட வேறென்ன DNA ஆதாரம் வேணும் Mr Husband. சிக்கிட்டீங்க என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜ் பதில் எதுவும் கூறாமல் உள்ளார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார் ஜாய் கிரிசில்டா. இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணநாள் வாழ்த்துகள்...
ஏமாற்றம் அவளை உடைக்கவில்லை…
அது அவளைக் கடினமானவளாக மாற்றியது…
"அவளை உடைக்க நினைத்த எல்லாத்துக்கும் ஒரே பதில்…
அவளோட தைரியம்" என்று கூறியுள்ளார்.
மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.






